நின்றேனும் கொல்லும் தீங்கு (02):​ (திகில் தொடர்)





- சங்கர சுப்பிரமணியன்.






அந்த ஒளி அப்படியே என் கண்ணில் பாய அவளைப் 

பார்த்த அதிர்ச்சியில் உரைந்துபோய்,

 

"ஊர்மிளாஊர்மிளா!!" என்று என் உதடுகள் 

என்னையும்அறியாமல் முனுமுனுத்தன.

 

அவள் கண்களின் ஒளி என் கண்களில் பாய பயத்தில் காரின் ஆக்ஸிஏட்டரை ழுத்தினேன். ஆனால் கார் 

நகர மறுத்ததுஎஞ்சினும் நின்று போனதுபயம் 

அதிகமாக காரின் ஞ்சினைவேக வேகமாக

யக்கினேன்அதற்குள் அவள் மரத்தைவிட்டு அகன்று காரின் முன் வந்து நின்றாள்என் முகத்தை 

நேருக்கு நேர்பார்த்தாள்இப்போது அவள் கண்களில் 

அந்த பிரகாசம் இல்லை. ஆனால் அந் கண்கள்

வசீகரமாக மிகவும் அழகாக இருந்தாள்


முன் பற்களால்கீழுதட்டைக் கடித்தபடி அதே பழைய ஊர்மிளாவாக காரின் முன்னிருந்து நகர்ந்து என் 

பக்கமாகக் கண்ணாடிக் கதவருகே வரவும் இதுவரை 

தகராறுசெய்த எஞ்சின் ஓட ஆரம்பித்ததுஉயிரைக் கையில் பிடித்தபடி ஆக்ஸிலேட்டரை வேகமாக 

அழுத்தியதில் கார் ஓடத் தொடங்கியதுகார் ஓடவும் 

காரின்பின் அவளும் வேகமாக ஓடி ந்தாள்


கண்ணாடி வழியாகஅவளைப் பார்த்தபடியே வேகமாகக்கார் ஓட்டியதில் எதிரே இருந்த ரவுண்ட் எபௌட்டில் 

கூட  நிற்காமல் சென்ற கார் ரவுண்ட் எபௌட்டின் 

மத்தியில் நின்ற சைன்போர்டு கம்பத்தில்மோதி அடுத்த தெருவில் திரும்பியதுகண்ணாடி வழியாக பின்புறம்

பார்த்தேன்காரின் பின் புறமாக ஓடி வந்தவளைக் காணவில்லைஎப்படி காரை ஓட்டி வீடு வந்து

சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லைகாரை 

கராஜில் நிறுத்திவிட்டு படுக்கையில் வந்து விழுந்தேன்.இதெல்லாம் கனவா?அல்ல நனவாஎன்று ஒன்றுமே 

புரியாமல் பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்து நடு

நடுங்க

 

"ஊர்மிளாஊர்மிளா!" என்று முனங்கியபடியே படுத்து 

இருந்தேன்நினைவலைகள் ஐந்தாண்டுகள் பின் 

நோக்கிசெல்ல கண்கள் பயத்தாலும் களைப்பாலும் 

மூடின.

"ஜானுடீ ஜானுஎங்கடி இருக்க" என்ற கேட்டபடியேவீட்டுக்குள் ருபெண் நுழைந்தாள். ஜன்னலில் 

மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி பக்கத்து 

அறையில் ஷேவ் செய்து கொண்டிருந்த நான் முன் 

அறைக்கு வந்து கதவைத்திறந்ததும் அங்கே பக்கத்து 

வீட்டுப் பெண் நின்றிருந்தாள்.

 

"என்னஎன்ன வேணும்?" 

 

"ஜானு இருக்காளாஅம்மா வீட்டுல சிரோட்டி 

பண்ணினாங்கஜானுவுக்கு பிடிக்குமுன்னு 

கொண்டாந்தேன்சித்திரப்பதுமாய் நின்ற அப்பெண் சினுங்கினாள்.

 

"ஆந்திர மக்கள் பண்ற சிரோட்டியாஜானுவுக்கு

மட்டும்தானாநாங்கள்ளாம் சாப்பிட்டா பாவம் வந்துசேர்ந்திடுமா?" என்று அவளை சீண்டினேன்.

 

நாணத்தால் முகம் சிவந்த அவள்,

 

"நாங்க ஒன்னும் ஆந்திரா இல்லவிஜயவாடாவுல

இருந்தோம் அவ்வளவுதான்மற்றபடி நாங்களும் 

தமிழுதான்நீங்களும் சிரோட்டிய சாப்பிடலாம்

சாப்பிட்டா பாவமொன்னும் வந்திடாது." என்று

கண்களை உயர்த்தி என்னைப் பார்த்து இலேசாக

தலையையாட்டி புன்னகைத்தவள்,

 

"ஜானு வீட்டிலில்லையா?" என்று மீண்டும் கேட்டாள்.

 

"அவளும் அம்மாவும் கோவிலுக்கு போயிருக்காங்க"

 

"அப்படியாஅப்ப நான் வறேன்இத ஜானு வந்ததும்கொடுத்துடுங்கன்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூடகாத்திராமல் பறந்து போய் விட்டாள்.

 

இப்படியாகத் தோன்றிய எங்களது அறிமுகம்

நெருக்கமாகி காதலாகவும் கனிந்ததுஒருவரின்றி 

ஒருவர் வாழ முடியாது என்ற நிலையில் நாங்கள் 

இருவரும் ஒருவரிடம் ஒருவரை இழந்தோம். எங்களது 

தொடர்ந்த இரகசியமான சந்திப்பின் விளைவு அவள்

கரு தரித்தாள். இச்சமயத்தில் எதிபாராவிதமாக ஒரு நாள் அவளிடமிருந்து எனக்கு மெஸேஜ் வந்ததுமாலைஆறு மணிக்கு ஒடுக்கத்தூர் முருகன் 

...

No comments: