இன்றய பெற்றோரும் பிள்ளைகளும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

இன்றய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.  இவ்வாறாக இவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை, பிள்ளைகள் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்து விடுமோ என சிறுவர் மனோதத்துவ நிபுணர்கள் ஐயப்படுகிறார்கள். 12 வயது பையன் தன் இஷ்டத்திற்கு நண்பர்களுடன் ஊரை சுற்றி அலைந்து விளையாடுவது அன்றய யதார்த்தம்.  இவ்வாறு சுற்றி வரும் பையன் தன்னை சுற்றி உள்ள உலகத்தையும்,மனித உறவுகளையும் புரிந்து கொள்கிறான்.  இது அவனது வருங்கால வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகிறது. அவனது சுதந்திர மனோ வளரச்சியை உருவாக்குகிறது.  அவன் சமுதாயத்தை தன் சுய சிந்தனையுடன் எதிர்கொள்கிறான்.

மண் விளையாடி, வெறுங்காலுடன் புளுதியிலும் சேற்றிலும் அலைந்து வளர்ந்தவர்க்கு இருக்கும் நோய் தடுப்பு சக்தி இன்று மண்ணை தொடாமல் காலணி போட்டு விளையாடும் பிள்ளைகளிடம் காண முடியவில்லை. இதை நான் கூறவில்லை Autrilion வைத்தியர்கள் கூறுகிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போது பற்றாகுறை உணவு தட்டுப்பாடு இவற்றுடன் வாழ்ந்தவர்க்கு உள்ள நோய் தடுக்கும் சக்தியயை இளய சமுதாயத்தில் காண முடியவில்லை என்கிறார்கள். அன்றய பிள்ளைகள் காலணி இல்லாது அழுக்கான கைகளுடன் விளையாடி திரிந்தனர், அவர்கள் உடலும் இயற்கையாக நோய் தடுப்பு சக்தியை,உருவாக்கியது. இன்றுபோல எதற்கெடுத்தாலும் கை கழுவும் பளக்கம் எவரிடமும் இல்லை. ஏன் சவர்காரத்திற்கு தட்டுப்பாடு நிலவிய காலமது. பிள்ளைகளின் பசியை போக்க போதிய அளவு உணவு தட்டுபாடுடன் கிடைபதே கடினம். இருந்தும் அவர்கள் இயற்கையுடன் விளையாடி போதிய சூரிய ஒளியையும் சுத்தமான காற்றையும் சுவாசித்தனர்.  ஒஸ்ரேலிய அய்வாளர் கூறுவது இன்று நோய்கு முக்கிய காரணம் அதிக கொழுப்பு மற்றும்

 

சர்கரை உடன் பதனப்படுத் தப்பட்ட உணவை சிறுலர் அளவு கணக்கில்லாது கண்ட கண்ட நேரங்களிலும் உண்கிறார்கள். பெற்றோரே இதை ஊக்குவிப்பவர். இதனால் நோயுள்ள சமுதாயமாக உருவாகி வருகிறார்கள்.

இன்றய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக பாதுகாக்க முயலுகிறார்கள். காரணம் கேட்டால், நாம் வளர்ந்த நாட்கள் போலல்ல, இப்போ ஆபத்து நிறைந்துள்ளது சிறு பிள்ளைகளுடன் தகாத முறையில் நடப்பவர்கள் உலாவும் இடங்களில் எமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது எமது கடமை என்கிறாரகள்.  இவ்வாறு நடந்து கொள்பவர்கள், அதிகப்படியாக குடும்பத்திற்கு தெரியாத பரீட்சயம் அற்றவர்கள் அல்ல. இவர்கள் குடும்ப உறவினர் அல்லது நண்பர் போல நடி ப்பவரகளே.  இவ்வாறு பாலியல் ரீதியில் எவரும் நடப்பார்கள் என்ற எண்ணத்தை பிள்ளைகள் மனதில் வளர விடுதல் அவர்கள் உலகத்தையே பயங்கரமானதாக பார்க்க வளி வகுக்கிறது. பிள்ளைகளை எச்சரிக்கும் போது, ஆயிரத்தில் ஒருவரே இப்படி இருப்பார்கள், மற்றவர் நல்லவர்களே என்ற எண்ணத்தையும் வளர்க்க வேண்டும். அபோதுதான் அவர்கள் சமுதாயத்தில் நம்பிகை உள்ளவராக வாழ முடியும். இந்த துர்பழக்கம் கொண்டவர்கள் புதிய சமுதாயத்தில் தோன்றியவர்கள் அல்ல, என்றுமே இந்த உலகில் வாழ்ந்தவர்களே.

இன்று தொடர்பு சாதனமான பத்திரிகை, வானெலி, தோலைகாட்சி போன்றவை, தாம் வழங்கும் செய்தி அதிகப்படியான மக்களை கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயலாற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வருவாய் அதிகரிக்கும். வியாபாரம் ஒன்றே நோக்கம், இதுவே இவர்களை பொறுப்பற்று செயலாற்ற வைக்கிறது. பத்திரிகை தர்மம் என பேசிய காலம் இப்போ கிடையா. இவர்கள் பரபரபூட்டும் செய்தி மக்களையும் பீதிக்கு உள்ளாக்கிறது.  இத்தகைய ஊடகங்கள் சமுதாய சீர்கேட்டை மிகை படுத்தி காட்ட அதை பார்த்த பொதுமக்களோ பல்லாயிரம் மைல் தொலைவில் நடந்ததை வீட்டுள்ளே தொலைகட்சியில் பார்த்து, நாளை நமது பிள்ளைகளுக்கும் நடக்க போகிறது என எண்ணி பயப்படுவதும், அதனால் சிறாரை பயப்டுத்துவதும் நடைபெறுகிற்து. சற்று சிந்தித்து செயல் பட்டால் இவற்றைகண்டு பயப்பட வேண்டியதில்லை. 

சிறார் மனோதத்துவ நிபுணர் கூறுகிறார், இன்றய பெற்றோர் தமது பிள்ளைகள் மனம் நொந்து போவதையோ கவலைபடுவதையோ தாங்க முடியாதவராக காணப்படுகிறார்கள்.  அதனால் தாம் முன்வந்து அவற்றை தடுக்கிறார்கள்.  இந்த உலக வாழ்கை பிரசாசனை அற்று இன்பகரமாக அமைய போவதில்லை, பிள்ளைகள் தமது பிரச்சனையை தாமே எதிர்கொள் வேண்டும். இவ்வாறு விடுவதால் அவர்கள் வாழ்கையை எதிர்கொண்டு வாழ பழகுவார்கள். அதிகபடியாக அர்களை  பாதுகாக்க முயல்வது பிள்ளைகளை கோளைகள் ஆக்கிவிடும். ஆனால் சில பிரச்சினைகள் பிள்ளைகளால் கையாள முடியாதவை அப்பொளுத் பெற்றோர் தலையிடட்டே ஆகவேண்டும்.

இன்றய சிறாரே நாளைய சமுதாயம், இன்றய முளைதான் நாளைய வைரம் பாய்ந்த மரமாக உறுதியாக வளர்ந்து பரந்து நிமிர்ந்து நிற்பது. பெற்றோர் தமது முளையென தோன்றி தளையென வளரும் பிள்ளைகட்கு அறிவு தன் நம்பிகை என்ற நீரை பாச்சி வளர்க்க வேண்டும். பாதுகாப்பதாக எண்ணி அதை இருண்ட அறையில் வைத்துவட கூடாது.


No comments: