அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை, 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது.
சிறுகதை, நாவல்,
கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம்
ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின்
நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட போட்டி தொடர்பான அறிவித்தலை வெளியிட்ட இலங்கை மற்றும் புகலிட தேசத்து ஊடகங்களுக்கும் இந்தப்போட்டிக்கு
சங்கத்தின் போட்டி விதிமுறையின் பிரகாரம் நூல்களை தபாலில் அனுப்பி வைத்த எழுத்தாளர்களுக்கும் சங்கத்தின் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
போட்டி விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இம்முறை, கட்டுரை இலக்கியத்துறையில் நூல்கள் எவையும் சங்கத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.
சிறுகதைத்துறையில்
நான்கு நூல்களும், நாவல் இலக்கியத் துறையில் மூன்று நூல்களும்,
கவிதை இலக்கியத்துறையில் நான்கு நூல்களும்
இம்முறை
இந்தப் போட்டிக்காக கிடைக்கப்பெற்றன.
இவற்றுள் சிறந்த
நூல்களாக ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும், ஒரு கவிதைத் தொகுப்பும் தெரிவாகியுள்ளன.
இவற்றுக்கு இலங்கை நாணயத்தில் தலா ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.
01. வல்லமை
தாராயோ – ( சிறுகதைத் தொகுப்பு )
எழுதியவர் : மாத்தளை வடிவேலன்
02. வேராகிப்போன மனிதர்கள் – (நாவல் )
எழுதியவர்:
ஏ.எஸ். உபைத்துல்லா.
03. கடிகாரப்
பறவைகள் - ( கவிதை )
எழுதியவர்:திருக்கோவில் கார்த்திகேசு.
பரிசுகளை வழங்குபவர்கள்:
திருமதி துளசி முருகையா :
அவுஸ்திரேலியா சமூகப்பணியாளர் ( அமரர்
) திருமதி மகாதேவி ஜெயமணி முருகையா நினைவுப்பரிசு.
சட்டத்தரணி ( திருமதி ) மரியம்
நளிமுடீன்:
முன்னாள் இலங்கை அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் நினைவுப்பரிசு.
திருமதி சிவமலர் சபேசன்:
---0---
No comments:
Post a Comment