January 26, 2024
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.
அவரது மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். அவர் தற்போது திடீரெனெ மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.
திருமதி. பவதாரிணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 47 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பவதாரிணி மறைவு ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments:
Post a Comment