எங்கே காணோம் - கண்ணன் செல்வராஜ்

 .

மாடி வீட்டு தோட்டமுண்டு

மாசகற்ற ஆட்கள் உண்டு
மதிய விருந்து படையலுண்டு
மந்திரி போல் வாழ்க்கையுண்டு

கஷ்டம் வந்து கதறி அழுது
கண்ணீர் வெள்ளம் வருகையிலே
கை பிடித்து கண் துடைத்த
கந்தல் சேலை எங்கே காணோம்

கட்டிலுண்டு மெத்தையுண்டு
கஸ்டமில்லா வாழ்க்கையுண்டு
பஞ்சு மெத்தை விரிப்புமுண்டு
பால் சோறோ நிதமுமுண்டு

ஆழ்மனதில் யாரும் அற்ற
அச்ச எண்ணம் தோனையிலே
அள்ளி தூக்கி அரவணைத்த
அப்பாவின் கை எங்கே காணோம்

தங்கமுண்டு வெள்ளியுண்டு
டைட்டன் வாட்சும் கையிலுண்டு
ஐந்து பென்ஸ் காருமுண்டு
ஆடி காரோ அருகிலுண்டு



எட்டு வைத்து நடக்கையிலே
எட்டி நின்று அழகு பார்த்த
என் அக்கா என் தம்பி
எங்கே காணோம் தெரியலையே

வாக்கிங் உண்டு ஜாக்கிங் உண்டு
வாடகைக்கு தீவும் உண்டு
சிகைக்கும் அலங்காரம் உண்டு
சிங்கப்பூரும் பறப்பதுண்டு

முக்கால் ரூவா முறுக்கு வாங்கி
மூணு பங்காய் பகிர்ந்தளித்த
என் நண்பன் என் நண்பி
எங்கே காணோம் தெரியலையே


Nantri - /eluthu.com

No comments: