சினிமா ‘கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’

 August 4, 2023

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் நடிகை கயல் ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்க, நடிகரும், தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். 

வி. இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோகன் ஷெவனேஷ் இசையமைத்திருக்கிறார். 

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ரஞ்சனி தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மை சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர்  கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். 

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண பெண் இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் சிக்கிக் கொண்டு பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார். என்பதை உச்சகட்ட காட்சி வரை பல எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய சைக்காலஜிக்கல் திரில்லராக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.    நன்றி ஈழநாடு No comments: