உலகச் செய்திகள்

 ட்ரம்ப் மீது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு

அமெரிக்க பயணம்: தாய்வானுக்கு சீனா எச்சரிக்கை

மத நிந்தனை குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீ வைப்பு

ஜி20 முத்திரை, நாணய வெளியீடு

கடலில் தத்தளித்த தஞ்ச படகில் 60 பேர் உயிரிழப்பு


 ட்ரம்ப் மீது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு

August 16, 2023 6:01 am 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் 2020ஆம் ஆண்டு ஜோர்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றதை மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

புடன் மேலும் 18 பேர் மீதும் குற்றச்சாட்டு சுபத்தப்பட்டுள்ளது. டிரம்பின் சட்டத்தரணி வெள்ளை மாளிகையின் முன்னாள் பிரதானி, வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்டத்தரணி உட்பட பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதில் தேர்தல் தலையீடு மற்றும் மோசடி உட்பட தன் மீதான 13 குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் மீது குற்றவியல் வழக்குத் தொடுக்கப்படுவது இது நான்வாது சந்தர்ப்பமாகும்.   நன்றி தினகரன் 


அமெரிக்க பயணம்: தாய்வானுக்கு சீனா எச்சரிக்கை

August 16, 2023 6:01 am 0 comment

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் 2020ஆம் ஆண்டு ஜோர்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றதை மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

புடன் மேலும் 18 பேர் மீதும் குற்றச்சாட்டு சுபத்தப்பட்டுள்ளது. டிரம்பின் சட்டத்தரணி வெள்ளை மாளிகையின் முன்னாள் பிரதானி, வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்டத்தரணி உட்பட பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதில் தேர்தல் தலையீடு மற்றும் மோசடி உட்பட தன் மீதான 13 குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் மீது குற்றவியல் வழக்குத் தொடுக்கப்படுவது இது நான்வாது சந்தர்ப்பமாகும்.   நன்றி தினகரன்      
மத நிந்தனை குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீ வைப்பு

August 18, 2023 11:13 am 0 comment

இருவர் குர்ஆனை அவமதித்ததாக கூறப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் நகர் ஒன்றில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குறைந்தது நான்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ வீடுகளுக்கு தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு பஞ்சாபில் உள்ள ஜனர்வாலா நகரில் தேவாலயங்களுடன் தொடர்புபட்ட பல டஜன் கட்டடங்கள் சோதமடைந்திருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 100க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்திருப்பதோடு வன்முறை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருந்தபோதும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மரண தண்டனை விதிக்கக் கூடிய மத நிந்தனை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இரு உள்ளூர் கிறிஸ்தவர்கள் மீது பொலிஸார் வழக்குத் தொடுத்துள்ளனர். மதநிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் இதுவரை எவர் மீதும் மரண தண்டனை விதிக்கப்படாதபோதும், இவ்வாறான குற்றச்சாட்டு நாட்டில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத நிந்தனை குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 2009இல் பஞ்சாபின் கோர்ஜா மாவட்டத்தில் கும்பல் ஒன்றால் சுமார் 60 வீடுகள் தீ வைக்கப்பட்டு ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாத்தின் புனித நுலான குர்ஆனை இருவர் அவமதித்ததாக சமூக ஊடகத்தில் செய்தி பரவியதை அடுத்து கடந்த புதன் (16) காலையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தீ வைப்புகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் அருகே சிவப்பு மார்க்கர் மையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் நிந்தனை உள்ளடக்கத்துடன் புனித நூலின் கிழிந்த பக்கங்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தேவாலயங்களின் தலைவரான பிஷப் ஆசாத் மார்ஷல் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜரன்வாலாவில் உள்ள கிறிஸ்தவ சமூகம் துன்புறுத்தப்பட்டுள்ளது. ஒரு தேவாலய கட்டடம் எரிக்கப்பட்டுள்ளது. பைபிளும் அவமதிக்கப்பட்டுள்ளது,” என்று பிஷப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “சட்டத்தை அமல்படுத்துபவர்களிடம் இருந்து நாங்கள் நீதியையும், நீதிக்கான செயல்களையும் எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்,” என்றும் அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.    நன்றி தினகரன் 

ஜி20 முத்திரை, நாணய வெளியீடு

August 17, 2023 11:43 am 0 comment

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி நினைவு தபால் முத்திரைகளும் நாணய குற்றிகளும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற பாரத் மண்டபம் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட இந்த இரண்டு நினைவு தபால் முத்திரை மற்றும் நாணயக் குற்றிகளிலும் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஜி20 நாடுகள் அமைப்பின் சர்வதேச உச்சிமாநாடு அடுத்த மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ளது. 110 நாடுகளில் இருந்து 12,300 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ள இம்மாநாட்டையொட்டி பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு 60 நகரங்களில் 200 கூட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளன.   நன்றி தினகரன்    


கடலில் தத்தளித்த தஞ்ச படகில் 60 பேர் உயிரிழப்பு

August 18, 2023 6:34 am 0 comment

மேற்கு ஆபிரிக்காவில் கேப் வெர்டே தீவு நாட்டு கடலுக்கு அப்பால் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதில் இருந்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

படகில் இருந்து சிறுவர்கள் உட்பட 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் சால் கரைக்கு அழைத்துவரப்படுவதும் சிலர் தூக்கு படுக்கையில் எடுத்து வரப்படுவதும் வீடியோ காட்சிகளில் தெரிகிறது.

செனகலில் இருந்து வந்ததாக நம்பப்படும் இந்தப் படகில் இருந்தவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் கடலில் நிர்க்கதியாக இருந்துள்ளனர்.

மரப்பலகையால் செய்யப்பட்ட இந்தப் படகு கேப் வெர்டே துறைமுகமான சால் கரைக்கு அப்பால் சுமார் 320 கிலோ மீற்றர் தொலைவில் ஸ்பெயின் மீன்பிடி படகு ஒன்றால் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படவு செனகல் மீன்பிடி கிராமமான பாசே போயெவில் இருந்து கடந்த ஜூலை 10 ஆம் திகதி 101 பேருடன் புறப்பட்டிருப்பதாக செனகல் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிர் தப்பியவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு நீரேற்றத்தில் கவனம் செலுத்துவதோடு மலேரியா போன்ற நோய்கள் தொடர்பில் சோதனை நடத்தப்படுவதாகவும் சால் நகர சுகாதார அதிகாரி ஒருவரான ஜோஸ் மொரைரா தெரிவித்துள்ளார்.

கேப் வெர்டே தீவு மேற்கு ஆபிரிக்க கரைக்கு அப்பால் சுமார் 620 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருப்பதோடு அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நுழைவாயிலாக இருக்கும் ஸ்பெயினின் கனரி தீவுகளுக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களின் கடல் பாதையில் அமைந்துள்ளது.   நன்றி தினகரன் 
No comments: