அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!
இத்தாலியில் அகதிகள் படகு விபத்தில் 41 பேர் உயிரிழப்பு
கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல், ஐவர் பலி!
சீனாவில் பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழப்பு
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!
August 10, 2023
இத்தாலியில் அகதிகள் படகு விபத்தில் 41 பேர் உயிரிழப்பு
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட குறித்த படகு இத்தாலியின் கரைக்கு செல்லும் வழியில் மூழ்கிய நிலையில், அந்த படகிலிருந்து தப்பிய நான்கு பேர் மீட்புப் படையினரிடம் விபத்து குறித்த விபரங்களை கூறியதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
லம்பேடுசா இத்தாலியின் தெற்கே உள்ள தீவு. 2000 களின் முற்பகுதியில் இருந்து, முக்கியமாக லிபியாவிலிருந்து வந்து, குடியேறுபவர்களுக்கான முக்கிய ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல், ஐவர் பலி!
கிழக்கு உக்ரைன் நகரமான, பொக்ரோவ்ஸ் (Pokrovsk) பகுதியில், குடியிருப்பு தொகுதியினை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் 4 பேரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம், அங்கு தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களை, உக்ரைன் ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார். நன்றி தினகரன்
சீனாவில் பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழப்பு
சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் டோக்சுரி புயலின் கோர தாண்டவத்தால் கனமழை பெய்தது.
ஒரு சில நாட்களில் 70 சென்ரி மீற்றருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவானது.
பீஜிங், ஹெபெய், தைஜான் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாகின.
பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ரயில் தண்டவாளங்கள் நீரில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்புத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment