சினிமா ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

 August 10, 2023

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) 9 மணிக்கு வெளியானது.

இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.

மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் சென்றனர்.

கர்நாடகாவில் காலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி வெளியானது.

இதனிடையே, இலங்கையிலும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் படையெடுத்துச் செல்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார்.

அதிரடி சண்டைக் காட்சிகளுடனான திரைப்படமாக தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.   நன்றி ஈழநாடு No comments: