என் பள்ளிப் பருவத்தில் நாளேடுகளில் வரி விளம்பரங்களைக் கூட விட்டு வைக்காமல் மேய்வேன். அப்போது ஆதர்ச எழுத்தாளர் செங்கை ஆழியான் தாண்டி, ஈழத்து எழுத்தாளர்கள் பலரை ஈழநாடு, ஈழமுரசு, பின்னாளில் உதயன் என்று உள்ளூர் நாளேடுகள் எனக்கு அறிமுகப்படுத்திய காலத்தில், பத்திரிகையில் இவர் பெயரைப் பார்த்தே அதிசயத்ததுண்டு.
“டொக்டர்" எம்.கே.முருகானந்தன் என்று ஈழத்துப் பேச்சு வழக்கிலேயே தன்னுடைய தொழிலை அடையாளப்படுத்தியவர்.
“தாயாகப் போகும் உங்களுக்கு” என்ற தொடர் அப்போது அவரை எனக்கு அடையாளப்படுத்தியது.
இவ்விதம் நான் ஈழத்தில் இருந்த காலத்திலேயே அந்தச் சமூகத்தில் வைத்தியம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியவர் என்ற அறிமுகம் கிட்டியது. ஆனால் பல்லாண்டுகளுக்குப் பின்னர் டொக்டரை ஒரு சக வலைப்பதிவராக, அவரோடு எழுத்து வழியாகப் பழகும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணியிருக்கவில்லை.
தொழில் நுட்பத்தின் அடுத்த பரிமாணமாக வலைப்பதிவு உலகம் எழுந்த போது ஈழத்தில் இருந்து தீவிர வலைப்பதிவர்களாக இயங்கியவர்களில் டொக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களும் ஒருவர். வீரகேசரியில் இந்த வலைப்பதிவு உலகத்தில் ஈழத்துப் பதிவர்கள் என்று தனிப் பகிர்வையே எழுதிப் பகிர்ந்தும் இருக்கிறார்.
அவரின் இயங்கு நிலை வலைப்பதிவு
மறந்து போகாத சில
http://suvaithacinema.
தவிர
http://stethinkural.blogspot.
http://hainallama.blogspot.
https://muruganandanclics.
https://hainalama.wordpress.
வலைப்பதிவு உலகம் செழுமையாக இருந்த காலகட்டத்தில் ஈழத்து வலைப்பதிவர் சந்திப்புகளிலும் கலந்து சிறப்பிப்பார்.
ஈழத்தில் இலக்கியப் பரப்பில் இரண்டு முருகானந்தன்கள் இருக்கிறார்கள். இருவருமே வைத்தியர்கள். பின்னவர் ச.முருகானந்தன், மூத்தவர் எம்.கே.முருகானந்தன். இருவருமே ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டொக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் மருத்துவக் கட்டுரைகள் மட்டுமன்றி, சிறுகதைகள், விமர்சனப் பகிர்வுகள் என்று தொடர்ந்து எழுதி வருபவர்.
கடந்த 50 ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நாளேடுகள், வார இதழ்கள், சஞ்சிகைகள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் டொக்டர் எ
ம்.கே.முருகானந்தன் ஆக்கம் இராதவை என்பது அதிசயம்.
வீரகேசரி, தினகரன்,தினக்குரல், ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு, சிரித்திரன், மல்லிகை, இன்று இயங்கு நிலையில் இருக்கும் ஞானம், ஜீவநதி என்று நீண்ட பட்டியல் அது.
எம்.கே.முருகானந்தன் அவர்களது படைப்புகள் பல தற்போது ஈழத்து நூலகம் தளத்திலும் உண்டு.
ஒரு மருத்துவர் சமூகத்தின் வழிகாட்டியாக, சுறுசுறுப்போடு தான் கண்ட, கேட்ட, ரசித்த விடயங்களை மனம் திறந்து எழுதிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இளையவர்களைத் தட்டிக் கொடுக்கிறார். பத்திரிகைகளில் அவர் கொடுத்த ஆக்கங்களைத் தாண்டி மலையளவு படைப்புகளை இன்னமும் எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறார். அது தொடர வேண்டும்.
இன்று 27.03.2023 தனது 75 வது அகவையில் காலடி வைக்கும்
எங்கள் டொக்டருக்கு இனிய பிறந்த நாள் வா
கானா பிரபா
No comments:
Post a Comment