வண்டுறை தண்டுடை செந்தாமரைப் பூம்பொழில்
பண்ணுடை
பாட்டிசை குயிலுறைத் தோப்பு
மயிலுறை
விண்தொடு கொம்புடை வனம்
பலமிகு
மதிலுடை அகழிசூழ் கோட்டை
தேருறை
அருளுடை இறையுறை கோயில்
பெரும்கரை
சுற்றுமுடை வற்றிடா நீர்நிலை
உறுமீனுடை அவைதேடு கொக்குநாரை பட்சிப்படை
விரிபுல்தரை
மேய்ந்திடு எண்ணிலா கால்நடை
நெல்வாழை
கரும்புவிளை மஞ்சள்தரு நன்செய்
நல்துவரை
சோளமொடு கம்புவிளை புன்செய்
தகையுடை நிதியொடு கொடையுள மாந்தர்
கொடியிடை
அன்னநடை வலம்வரு மகளிர்
திணவெடு தோளுடை வலிமிகு வாலிபர்
குணமுடை
மதிமிகு கனிவுடை முதியோர்
பணிவுடை
துணிவொடு பண்புடை சிறுவர்
கனிவொடு மனமொடு செயலதில் இணைந்து
ஒருமையொடு
வளமது தன்னிடை பகிர்ந்து
பெருமையொடு
வாழுமுறை புவியிடை படைக்கும்
இத்தகு
சீருடை வளமிகு ஊர்பல தானுடை
இதற்கிணை
ஏதுமிலை வாழியென் திருநாடே!
No comments:
Post a Comment