குடமுழுக்குக் காணும் ஈழத்துத் திருகேதீச்சரம்

 


கானா பிரபா


வடக்கே யாழ்ப்பாணத்தின் கீரிமலையில் நகுலேஸ்வரம், வட மேற்கே மன்னாரில் திருக்கேதீச்சரம், கிழக்கில் திருகோணமலையில் திருக்கோணேச்சரம், மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரம், தெற்கே காலியில் தொண்டீச்சரம் என்று 

ஈழத்தின் ஐந்து முனையங்களிலும சிவாலயங்கள் தொன்ம காலத்தில் நிறுவப்பட்டு விளங்கி வருகின்றன. இவற்றில் திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரமும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு மிகுந்தவை.

மன்னாரில் மாதோட்டத்தில் விளங்கும் திருக்கேதீச்சரம் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

ஆலயத்தின் மீது பாடப்பட்ட திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தைக் கேட்க

https://www.youtube.com/watch?v=_rYeie9DvzI

ஆலயத்தின் மீது பாடப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகத்தைக் கேட்க

https://www.youtube.com/watch?v=dzq75sQcMME


 

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வரலாற்றுப் பகிர்வு

https://www.tamilhindu.com/2017/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/?fbclid=IwAR2TsHqg4LHbfs4qnt7g2mmY8OcQkqEnlem36bVkIUoqVWmim_VlafFTcpM

திருக்கேதீச்சர ஆலயத்தின் புனருத்தாரண நிகழ்வுகள் நீண்ட வருடப் பயணமாக அமைந்தது. கருங்கல் வேலைப்பாடுகளோடு ஆலயத் திருப்பணிகளை அமைக்க இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதியாதாரம் பெருந்துணையாக அமைய, தொடர்ந்த முன்னெடுப்புகளைத் தாயகம் வாழ் அன்பர்களும், புலம்பெயர் தேசத்து உறவுகளுமாகக் கைகோர்த்து உதவி இன்று 06.07.2022 திருக்கேதீச்சர ஆலயம் கும்பாபிஷேக தினம் காண்கிறது.

இந்த ஆலயத்தின் வரலாறு மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள் குறித்த தகவல்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக திருக்கேதீச்சர ஆலயத்தின் இணைப் பொதுச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்திருந்தேன். அந்தப் பகிர்வைக் காண

https://www.youtube.com/watch?v=cM466hfeL3c

படங்கள் நன்றி : திருக்கேதீச்சர ஆலயத் தளம்

கானா பிரபா

06.07.2022

http://www.madathuvaasal.com/2022/07/blog-post.html


No comments: