ஆடி பிறந்ததும்…….. 

 பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.

 

நாளை விடிந்ததும் ஆடி பிறந்திடும்

நாமெலாம் கூடி மகிழ்ந்திடுவோம்

ஏழையோ செல்வனோ என்றபே தமில்லை

இன்பமாய் எல்லோரும் கொண்டாடுவோம்!

 


 

 

 

  

ஈடிலா நன்மைகள் இயற்றித் தினந்தினம்

எண்ணிலா உயிர்களைக் காத்துநிற்கும்

கோடிசெங் கதிரொடு ஏழ்பரி வாகனன்

குடதிசைக் கு நாளை புறப்படுவான்!

 


 


 

 

 

காலைக் கடன்களை முடித்ததும் பெற்றவர்

கால்களைத் தொட்டு வணங்கிடுவோம்!

ஆலயம் சென்றுநாம் மூலவர் அருள்பெற

அருந்தமிழ் மந்திரம் செப்பிநிற்போம்!

 

பிறவிப் பெருங்கடல் நீந்திச் சிவன்கழல்

பேரரு ளாலேநாம் சேர்வதற்கு

இறவாப் பெரும்பதம் பெற்றவர் திருமுறை

என்றுமே பக்தியோ டோதிடுவோம்!

 


 

 

 

 

 


தங்கத்தாத் தாசொன்ன முறைப்படி அம்மாவும்;

தரமான கொழுக்கட்டை அவித்திடுவாள்

பங்கமொன்று மின்றிப் பொக்குவாய்ப் பாட்டியும்

பனங்கட்டி சேர்த்துக்கூழ் காய்ச்சிடுவாள்!
 

 


தேடிப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

திண்ணையில் வைத்திட அம்மாவுமே

வாடிப் பழுத்த இலைகோலி யேயதில்

வாசநற் கூழ்தனை ஊற்றிநிற்பாள்!

 

அம்மா அவித்த கொழுக்கட்டை யோடுநாம்

ஆச்சியின் கூழையும் குடித்திடுவோம்

எம்மா தவந்தனைச் செய்தமோ தோழரே

இறைவனின் கருணையைப் போற்றிடுவோம்!

 

ஊட்டநற் சத்தெலாம் ஊறிய கூழ்தனை

ஊதியே மெல்லக்கு டித்துநிற்;போம்

வீட்டில் அனைவரும் கூடிக்கு லாவியே

விருந்தினைப் பகிர்துநாம்;; மகிழ்ந்துண்ணுவோம்!

 


 


 

 


ஆடி பிறந்திடும் ஆடி பிறந்திடும்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

நாடிய இன்பமும் கூடியே  வந்திட

நாளை பிறந்திடும் ஆடியன்றோ?.

Mb gpwg;ig epidj;jJk; <oj;jkpoUf;Fj; jq;fj; jhj;jh ethyp Cu; NrhkRe;jug; Gytu; mtu;fspd;  

Mbg; gpwg;Gf;F ehis tpLjiy

Mde;jk; Mde;jk; Njhou;fNs!

$bg; gdq;fl;bf; $Ok; Fbf;fyhk;

nfhOf;fl;il jpd;dyhk; Njhou;fNs!

 vd;w ghly; epidtpy; te;J ehtpy; ePu; Ruf;Fky;yth>? jhj;jh ,aw;wpa ghly; nkl;bNy Ngudhupd; ftpij kyu;fpwJ!

 

 

 

 

 No comments: