சனிக்கிழமை 09/07/2022 இரண்டு நேர நிகழ்ச்சியாக மதியம் 2 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் நிகழ்ச்சி Bankstown Bryan Brown அரங்கில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி
வழமைபோல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக மதியம்
இரண்டு மணிக்கும் மாலை 6.30 மணிக்கும்
ஆரம்பமானது இங்கு குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரன் பிரபாகரன். இந்த நிகழ்ச்சியினால் திரட்டப்படும் அனைத்து நிதியும் இலங்கையில் பல வழிகளில் அல்லல் உறும் எமது சமூகத்தினருக்கு சென்றடைகின்றதென்பதினால், அங்கு தமது உயிரினை நீத்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தி இகழ்ச்சியை துடக்கி வைத்தார் பிரபா.
சக்தி இசை குழுவின் நிகழ்ச்சி ஆரம்பமானது. திரு செல்வன் டேவிட்டின் நெறியாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்பாலயம் ஆரம்பமான காலத்தில் அதாவது 15 வருடங்களுக்கு முன் ரஞ்சன் (ஸ்ரீ தக்ஷணா உரிமையாளர்) அவர்களின் ஆதரவுடன் கறியோக்கி இசையில் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, பின் ஒருசில இசை கருவிகளுடன் ரஞ்சன் அடுத்த கட்டத்துக்கு நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தினார். அப்போது சிறுமிகளாக பாடல்களை பாடிய கேஷிகா அமீர் மற்றும் அபிசாயினி பத்மசிறி அவர்கள் இப்போதும் அன்பாலயம் இசை நிகழ்வில் மிகவும் தலை சிறந்த பாடகிகளாக பாடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து தனி இசைநிகழ்ச்சியாக இல்லாமல் ஆஸ்திரேலியா Got Talent என்னும் பாணியை பின் பற்றி எமது சமூகத்தில் பலதரப்பட்ட திறமை உடையவர்களை அவர்களது வயதின் அடிப்படையில் வெளிக் கொண்டுவர Talent Show என்னும் ஒரு போட்டி பகுதியை அறிமுகம் செய்தது அன்பாலயம். 2013 இல் இந்த இசை நிகழ்ச்சியை மேலும் ஒரு படி மேல் கொண்டு செல்ல இளைய தலைமுறையின் இசைக்கலைஞர்களை ஒன்று சேர்த்து ரவியின் நெறியாழ்க்கையில் திறம்பட நல்ல ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கியவர் ஸ்ரீராம் ஜெயராமன்.
Talent Show வை மிகவும் நேர்த்தியாகவும் திறம்பட ஒருங்கமைத்து நடாத்திய பெருமை எம்மை ஆளாத்துயரில் விட்டுச்சென்ற திருமதி பானு பத்மசிறியையே சாரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அவர்அன்பாலயத்துடன் இணைந்து செய்த சேவையை நினைவுகூர்ந்து அவரின் நினைவாக ஒரு கவிதையையும் நினைவு பரிசிலையும் அன்பாலயம் அவர் மறைந்த பின் நிகழ்ந்த இந்த முதல் நிகழ்ச்சியில் அவரை கெரவப்படுத்தியதை எல்லோரும் மிகவும் உருக்கமாக வரவேற்று இருந்தார்கள். அவரின் அன்பு மகள் அபிசாயினி தனது தாயிக்கு
விருப்பமான நிலாக்காய்க்கிறது எனும் பாடலை அவருக்காக அர்ப்பணம் செய்தார். சக்தி இசைக்குழுவின் நெறியாளரை அன்பாலயத்திற்கு அறிமுகம் செய்தவரும் பானு என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்,
எல்லா பாடகர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட பாடல்களை மிகவும் இனிமையாகவும் திறமையாகவும் பாடி இருந்தார்கள். நிகழ்ச்சியின் முதல் பாடலாக வானம் கீழே வந்தால் என்னும் பாடலை விமல் பாடினார். மிகவும் திறமை வாய்ந்த பாடகர். சொல்லத்தான் நினைக்கிறன் பாடலை அபி புவியும், ஒத்தையடி பாதையிலே பாடலை ரோஹித் என்னும் பாடகர் பாடி இருந்தார். மிகவும் ஆழமான குரல் வளம் கொண்டவர். நித்தியா காற்றில் எந்தன் கீதம் பாடலை மிகவும் இனிமையாக பாடினார். ஹீதாஷா Melbourne இல் இருந்து வந்த பாடகி இதுவரை இல்லாத
அனுபவம் பாடலை மிகவும் இனிமையாக பாடி இருந்தார். அதனை தொடர்ந்து நிலா காய்கிறது பாடலை அபிசாயினி தனது தாயின் நினைவாக மிகவும் இனிமையாக பாடி, சபையோரின் மனதை வருடிச் சென்றார். தனது இனிமையான குரலில் கண்ணா நீ தூங்காத என்று நம்மை வசப்படுத்தி கட்டிப்போட்டு சென்றார் அபிநயனி குகசிறி. கிரி தனது வசீகரக் குரலில் கண்ணம்மா கண்ணவில்லையா எனும் பாடலை பாடி இருந்தார். அவர் இந்த பாடலைப் பாடும் போது என் மனதில் சிறிய ஒரு வருத்தம் இருந்தது, ஏனெனில் இவர் நல்ல ஒரு திறமை
வாய்ந்த பாடகர். எனக்கு என்னமோ இந்த பாடல் அதன் சுருதியில் பாடப் படவில்லை என்று தோன்றியது. மிகவும் திறமை வாய்ந்த என் மனம் கவர்ந்த கிரி ஏன் இப்படி குறைந்த சுருதியில் பாடினார் எண்டு வருத்தப்பட்டேன். பின்பு தான் இடைவேளை நேரம் கேள்விப்பட்டேன் அவர் குரல் வளம் அன்று அவருக்கு கை குடுக்க வில்லை என்று. குளிர் காலம் என்பதால் பலர் சுகவீனம் காரணமாக தமது குரலை இழந்திருந்தார். அப்படி இருந்தும் அவர் குறைந்த சுருதியில் மிகவும் இனிமையாக பாடி அசத்தி இருந்தார். மீண்டும் கிரியை மேடையில் பாக்கும் போது சந்தோஷமாக இருந்தது. தித்திக்குதே என்னும் பாடலை கேஷிகாவும்
புஜ்ஜி பாடலை ரோஹித்தும் பாடி இருந்தார்கள். இடைவேளைக்கு முன் பத்துப் பாடல்களையும் தனித்தனியே பாடகர்கள் பாடி இருந்தார்கள்.
தலைப்பு இளைஞர்களாகிய நாம் சிட்னியில் தமிழர்களாக வாழ்வது இலகுவானதா அல்லது கடினமானதா என்று மிகவும் திறமையாக வாதாடினார்கள். இந்த பட்டிமன்றத்துக்கு நடுவராக செயல்பட்டவர் நமது அன்பு அறிவிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன். அவர் பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைக்கும் போதே நம்மிடையே தினந்தோறும் நடைபெறுபவற்றை நாசுக்காக கூறி, இப்படிப்பட்ட சமுதாயத்தில் இந்த இளைஞர்கள் தமிழர்களாக வாழ்வது இலகுவா இல்லை கடினமா என்று அவர்களின் வாதத்தை கேட்போம் என்று கூறி மிகவும் திறமையாக ஆரம்பித்து வைத்தார். இவருக்கு பட்டிமன்றம் நடத்தும்
திறமை கூட இருக்கின்றது என்று அப்போது தான் உணர்ந்தேன். அபிநயம் ராஜ்குஜ்மர், தேஷனில் கேதீஸ்வரன், சாரங்கா சச்சிதானந்தம் மற்றும் விஜய்யால் விஜய் ஆகியோர் இளைஞர்களாகிய நாம் இங்கு தமிழர்களாக வாழ்வது இலகுவே என்று மிகவும் திறமையாக நல்ல தமிழ் சொல்லாற்றலோடு வாதாடினார்கள். அபிராமி ரவீந்திரன், சஞ்சனா சிவசோதிராஜா, மயூரி இந்திரகுமார் மற்றும் சிஜார்தான் ஜசீதரன் தமிழர்களாக வாழ்வது கடினமே என்று மிகவும் ஆணித்தரமான வாதங்களை
வைத்து வாதாடினார்கள். இந்த இளைஞர்கள் இந்திக்கு பிறந்து வளர்ந்தவர்களா என எண்ணத்தோன்றியது. அவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்புடன் மிகவும் திறமையாக வாதாடினார்கள். தாங்களும் நடுவருக்கு அவருடைய தமிழ் உச்சரிப்புக்கு சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்திருந்தார்கள். இப்படியான ஒரு கன்னி முயற்சியை அன்பாலயம் முதல் முறையாக எடுத்து நடத்தியதை இட்டு அன்னவரும் தமது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்கள்.
அன்பாலயம் தாம் சேகரித்து வரும் பணத்தில் தாம் இலங்கையில்
புரிந்துவரும் பலவகை சேவைகளையும் அதனூடாக பயன் பெற்றவர்களின் சுயசரிதையையும் கானொலியூடாக நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களுக்கு வழங்கினார்கள். இந்த காணொளியை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் எந்த வித தொய்வுமின்றி ஒருங்கமைத்திருந்தார் செல்வன் ராகுல் ரமேஷ். ஒவ்வொரு வருடமும் இவர் இதை மிகவும் திறம்பட வழங்கி வருகின்றார். இந்த வேளையில் சில வருடங்களுக்கு முன் இவர் தனது தந்தையாருடன் இலங்கை சென்று அன்பாலயம் அங்கு செய்யும் நட்பணிகளை பார்த்து அதை
பற்றி ஒரு இளைஞனின் பார்வையில் மிகவும் அழகாக விபரமாக கூறிய அந்த மேடை பேச்சை என்னால் மறக்கவே முடியாது.
அதனை தொடர்ந்து மீண்டும் இன்னிசை நிகழ்வு தொடர்ந்தது. இடைவேளையின் பின் டூயட் பாடல்கள் பாடப் பெற்றது. அபிநயினியும் விமலும் இணைந்து ஐயங்காத்து வீட்டு அழகே, நித்தியாவும் ரோஹித்தும் இணைந்து நெஞ்சே நெஞ்சே, அபி புவியம் விமலும் இணைந்து இதோ இதோ என் பல்லவி பாடல்களை மிகவும் இனிமையாக பாடி எல்லோரது மனத்தையும் கவர்ந்து சென்றார்கள். தொடர்ந்து எம்மை எல்லாம் ஆளாத்துயரில் விட்டு பிரிந்து சென்ற எல்லோர் மனம்
கவர்ந்த SPB சார் அவர்களை நினைவு கூர்ந்து அவர் பாடிய 40,000 பாடல்களில் இருந்து ஒருசிலவற்றை தேர்ந்து எடுத்து கிரி, ரோஹித் மற்றும் விமல் இணைந்து ஓர் பாடல் கலப்பை (Medley) மிகவும் இனிமையாக பாடி எல்லோர் மனதிலும் SPB அவர்களின் நினைப்பை மீண்டும் தூண்டிவிட்டு சென்றார்கள்.
ரோஹித்தும் இணைந்து வழங்கினார்கள். அரபிக் குத்து பாடலை விமலும் ஹீதாஸாவும் மீண்டும் தமது இனிமையான குரலால் பாடி அசத்தினார். தொட தொட மலர்ந்ததென்ன பாடலை கிரியும் அபி புவியும் இனிமையாக பாடி இருந்தார்கள். மீண்டும் குரல் வளம் சரியில்லாத போதும் மிகவும் இனிமையாக அந்த பாடலை பாடி இருந்தார் கிரி. நிகழ்ச்சியை நிறைவு செய்த பாடல் மதுரைக்கு போகாதடி. இதனை கேஷிகா, அபிநயனி, அபீஷைனி, அபி, விமல், கிரி மற்றும் ரோஹித் இணைந்து அழகாக பாடி முடித்தார்கள்.
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும், youtube பாடல்களை இசை அமைத்துவரும் திறமையான கலைஞன் சாரு ராம். Octopad மற்றும் தபேலாவில் திறமையாக வாசித்தவர் சூரஜ் ரவிக்குமார். பாஸ் கிடாரில் வழமைபோல் அனைவருக்கும் அறிமுகமான மிகவும் திறமையான கலைஞன் ராம் மணிவண்ணன். வீனா மற்றும் ற்றும்பெட் இல் வழமைபோல் மிகவும் திறமையாக வாசித்து பலரது கரகோஷத்தையும் பெற்றவர் கனா அருணேஸ்வரன். லவன் சுபேந்திரன் Lead and Rhythm கிட்டார் இல் தனது திறமையை காட்டியிருந்தார். யதுஷன் ஜெயராசா புல்லாங்குழலில், பிரவீணன் ஜெயராசா Octopad மற்றும் மிருதங்கம் முதலிய இசைக் கருவிகளின் தமது அபார திறமையை வெளிக்காட்டி இருந்தார்கள். பாபியன் சுகுமார் saxaphone இல் மிகவும் இனிமையாக வாசித்திருந்தார். அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் ஓர் சபாஷ் போடவே வேண்டும். எப்போதுமே உள்ளூர் கலைஞர்களை வைத்தே நிகழ்ச்சியை மிகவும் திறம்பட நடாத்தி வருகின்றனர்அன்பாலயம் குழுவினர். இங்கே இப்படியான திறமை வாய்ந்த பாடகர்களும் இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும் உள்ளார்கள் என்று என்னும்போது மிகவும் மனநிறைவாக உள்ளது. . மேலும் அவரின் இசைக்குழு வளர்ந்து பல இசை நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும் என வாழ்த்துகின்றேன். எல்லோர் மனதிலும் ஒரு தரமான இசை நிகழ்ச்சியை கண்டு கழிந்த பெரு மகிழ்ச்சியினை காணக்கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment