ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

 


சிட்னி, ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் முன்னெடுப்பில் பொங்கல் விழா ஏழாம் ஆண்டாக இவ்வருட பாராளுமன்ற முதல் அமர்வு நாளான பெப்ரவரி 15ம் நாள்  இனிதே நடந்தேறியது. முக்கிய பிரமுகர்களால் குத்துவிளக்கேற்றலுடன் தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய ஆஸ்திரேலிய

தேசிய கீதத்துடன் தொடங்கிய நிகழ்வு பரதநாட்டியம், பறையாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்வுகளுடன் ஜொலித்தது.  மேலும் ஆஸ்திரேலிய கம்பன் கழக மாணவர்களின் பொங்கல் பண்டிகை பற்றிய சிறப்புரை மெருகேற்றியது. விழாவில் அமைப்பின் தலைவர் அனகன் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஜொனாதன் அமைச்சர் பெருமக்கள் மார்க் குரே, ஜெப் லீ, சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் கிறிஸ் மின்ஸ், இந்திய தூதரக அதிகாரி மனிஷ் குப்தா, கம்பர்லண்ட்   மேயர்  லிசா லேக், பரமாட்டா துணை மேயர் சமீர் பாண்டே உள்ளிட்ட பிரமுகர்களும், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறுப்புரையாற்றி சிறப்பித்தனர்.  விழாவில் அமைப்பின் துணைத் தலைவர் சுமதி ரவி நன்றியுரையை வழங்கினார். செல்வி பாரதி ஷண்முகம்  விழாவை ஒருங்கிணைத்தார்.  வண்ணமயமாய் அலங்கரிக்கப்பட்ட அரங்கமும், விழா முடிவில் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்ட பொங்கலும் விழாவை முழுமையடைய செய்தது.































No comments: