கற்பதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து இரண்டு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
               


    பனையொடு தானும் சரிநிகர் சமமாக நிற்கவேண்டும் என்று


தென்னையும் முயன்றபடியேதான் இருக் கிறது.ஒவ்வொரு தருணத்திலும் தென்னை முந்திக்கொண்டு வந்துநிற்கும். ஆனால் பனையோ எந்தவிதச் சலனமுமின்றி தன்பாட்டில் , தனது பங்களிப்பினை வழங்கியபடியே இருக்கும்.பாளையினை வெளியிடும் விதத்தில்  தென்னையும் பனையும் ஒத்துப் போவதாகவே இருக்கிறது. அப்படி இருந்தாலும் தென்னையி னைப் பின்னுக்குத் தள்ளி பனையானது முன்னால் வந்து நின்றுவிடுகிறது. தென்னையில் ஆண் ,   பெண்,   என்னும் நிலை இல்லை. பனையோ ஆண்பனை, பெண்பனை என்று இரண்டாக நிற்கிறது.தென்னையில் ஒரே இனம் மட் டுமே இருப்பதால் தென்னை பாளையினைத் தந்துவிட்டு நின்றுவிடுகிறது. பனையில் ,   ஆண்பனையும் பாளையினைத் தருகிறது. பெண்பனையும் பாளையினைத் தருகிறது. தென்னை இதனைப் பார்த்துவிட்டு ஒதுங்கியே நின்று விடுகிறது.தென்னையைப் பார்க்கப் பரிதாபமாகவே இருக்கிறதல்லவா ?

  நுங்கினைப் பனை தந்தது. அதற்கு இணையாக இளநீரை


தென்னையும் தந்தது. பனை பனம் பழத்தைத் தந்தது. தென்னையால் அப்படித் தரமுடியா நிலையில் தலை கவிழ்ந்து நின்று விடுகிறது. என்றாலும் தென் னையும் ஒவ்வொரு தரமும் முயற்சித்தபடியேதான் இருந்து கொண்டே  வருகிறது. பாளையிலிருந்து பெறப் படும் சாற்றினை பனையும் தருகிறது. தென்னையும் தருகிறது. அந்தச்சாறு " கள் " என்னும் பெயரினுக்கு உரித்தாக மாறும் நிலையிலும் பனையுடன் தென்னையும் சரிநிகர் சமமாகவே முன்வந்து நிற்கிறது. ஆனால் தொடர்ந்தும் தென்னையினால் முன்வந்து நிற்கமுடியாமலேயே ஆகிவிடுவதையே காணு கிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் கள்ளினையும் குடிக்கிறார்கள். பனையின் கள்ளினையும் குடிக் கிறார்கள். எனினும் தென்னங்கள்ளைவிடப் பனங்கள்ளினையே பலரும் விரும்பத்துடன் குடிக்கிறார்கள் என்பதுதான் நோக்கத்தக்கதாகும்.தென்னங்கள் பற்றிய குறிப்புகள் அவ்வளவு சொல்லும் அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பனங்கள்ளுப் பற்றிய செய்திகள் சங்ககால இலக்கி யத்திலும் அதன் பின்வந்த புலவர்களின் பாடல்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதேயாகும். பனங் கள்ளின் பயன்பாடு என்பது சமூகத்தில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்பதும் நோக்கத்தக்க தாகும்.

  

 " ஓங்கித் தோன்றும் தீம் கள் " என்று நற்றிணை சொல்கிறது.

" காமம் கனைந்து எழ , கண்ணின் களி எழ

  ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பராரவர் நிலை

  கள்ளின் கழி எழக் காத்தாங்கு "   

என பரிபாடல் கள்ளையும் காமத்தையும் இணைத்துக் காட்டுகிறது.

 " உண்மின் கள்ளே அடுமின் சோறே

   எறிஅக் திற்றி ஏற்றுமின் புழுக்கே " என்று பதிற்றுப் பத்தும் கள்ளினை உண்பீராக என்று காட்டுவதும் நோக்கத்தக்கது.

 " கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

   காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

   நாட்செருக்கு அனந்தர்த துஞ்ச வோனே

   அவன் எம் இறைவன் யாமவன் பானர்

   நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்

   இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்

   கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு

   ஈவது இயலாளன் என்னாது நீயும்

   வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்

   கள்ளுடைக் கலந்தோம் யாம்மகிழ் தூங்கச்

   சென்று வாய் சிவந்துமேல் வருக

   சிறுகண் யானை வேந்து விழுமுறவே " என்று புறநாநூற்றில் வரு கின்ற இப்பாடலின் பொருளைப் பார்க்கையில் கள்ளானது எப்படி அக் காலத்தில் இருந்திருக்கிறது என்னும் செய்தி காட்சியாய் மலர்வதை கா ண்கிறோம்.

 " கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் " கள்ளினை உண்டு உவகையினால் உழவர்கள் மகிழ்ச்சிய டைகிறார்கள் என்று அகநாநூற்றில் நக்கீரர் பாடுகிறார்.

 " எரி அகைந்தன்ன தாமரை இடை இடை

   அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்

   கள் கொண்டு மறுகும் சாகாடு அளற் றுறின்

   ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர

   பெரிய நாண் இலைமன்று பொரி எனப் "

பரணரால் பாடப்பட்ட இப்பாடல் புறநானூற்றில் இடம்


பெற்றிருக்கிறது. உழவர்களுக்காக கள்ளினை ஏற்றிக் கொண்டு வருகின்ற வண்டியானது சேற்றில் புதையாமல் பாதுக்காக்க எப்படி செயற்பட்டார்கள் என்பதை யும், அங்கே அமைந்திருந்த அழகான சூழலையும் இப்பாடல் இங்கே படம் பிடித்துக் காட்டுகிறது. கள்ளினை வண்டியில் ஏற்றிச் செல்லும் அளவுக்கு கள்ளின் நிலைமை எப்படி அக்காலத்தில் இருந்தது என்பது மனதில் பதியும் வண்ணம் இருக்கிறதல்லவா !

" களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற்

  களிகள் விதிர்த்திட்ட வெங்கட் - துளிகலந்து

  ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே

  பும்புனல் வஞ்சி அகம் "

கள்ளுண்டு களித்து நிற்பவர்கள் - கள்ளை  மற்றவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அதற்குக்காரணம் அவர் களும்


தம்மைப்போன்று களிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தானாம்.கொடுக்கும் பொழுது கள்ளு நிலத்தில் சிந்துகிறதாம். அப்படிச் சிந்தும் கள்ளின் துளிகள் யாவும் சேர்ந்து கள்ளே அங்குள்ள தெரிவிலே ஓடுகிறதாம். அந்தத்தெருவில் யானைகள் நடப்பதால் அந்த்தத் தெரு சேறாகி விடுகிறதாம். தெருவே சேறா கும் அளவுக்கு அங்கு கள்ளின் பெருக்கம் இருப்பதோடு மக்களும் மகிழ்ந்து போய் இருக்கி றார்களாம் என்று - முத்தொளாயிரம் காட்டி நிற்கிறது.

மதுவைப் பற்றி  சொல்லும்போது மதுநறவுகள்பெரியகள்சிறியகள்தேறல்சொல்விளம்பி என்றெல் லாம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்போது மதுவை உணவாக உணவே மருந்தாக உண்டார்கள். ( இப்போது போதைக்காகஉடல் திமிருக்காக சாராயம் எனப்படும் மதுவை நாடுகிறார்கள்)

  சங்ககால ஒளவையார் பாடிய ஒரு பாடல் புறநாநூற்றில் வருகிறது. அதில் தனக்கு அதியமான் கள்ளி னைத் தந்ததாகவும், தானும் அவனோடிருந்து கள்ளினை உண்டதாகவும் இப்பாடல் அமைகிறது.

 

"சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் – மன்னே!

 பெரிய கள் பெறினே

 யாம் பாடதான் மகிழ்ந்து உண்ணும் மன்னே "

இங்கு சிறிய கள்பெரிய கள் என்று சொல்லப்படுவது என்ன தெரியுமா ? கள்ளின் அளவினையே குறிப்ப தாகும்.வேள் பாரியின் புகழைக் கபிலர் பாடுகிறார். அந்தப் பாடல்கள் புறநாநூற்றில் காணப்படுகிறது. அந்தப் பாடல்களிலும் கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

 

" மட்டுவாய் திறப்பவும் மையிடை வீழ்ப்பவும்

 அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்  "

 

அடுத்த பாடலில்அதே கபிலர்பாரி வந்தவர்களுக்கு மதுவை வழங்கிய தையும் குறிப்பிடுகிறார்.

 

" ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்சிறு வரை
 சென்று நின் றோர்க்கும் தோன்றும்மன்ற;
 களிறு மென்று இட்ட கவளம் போல,
 நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
 வார் அசும்பு ஒழுகு முன்றில்,
 தேர் வீசு இருக்கைநெடியோன் குன்றே "

காவிரிபூம் பட்டினத்தில்கடற்கரையில் கள்ளுக்கடைகள்  ஏனைய கடைகளைப் போலவே அடையாளப் படுத்தும் வகையில் கொடிகளோடு இருந்திருக்கிறதாம் என்பதைப்பட்டினப்பாலை காட்டி நிற்கிறது.

 

" மீன் தடிந்து விடக்கு அறுத்து
 ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
 மணல் குவைஇ மலர் சிதறிப்
 பலர் புகு மனைப் பலிப் புதவின்
 நறவு தொடைக் கொடியோடு  "

 

  குறிஞ்சிமுல்லைமருதம் நெய்தல் பாலை என்னும் வகையில் எங்களின் முன்னோர்களின்   வாழ் க்கை முறை அமைந்து காணப்பட்டது என்பது வரலாறாகும். நிலத்தையும் அது


சார்ந்ததாயுமே இவ்வா ழ்க்கை முறை அமைந்திருந்திருந்தது. இப்படி வாழ்ந்த மக்கள் வாழ்வில் ஆட்டமும் ,  பாட் டமும்,   கொண் டாட்டமுமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் காலத்திலெழுந்த சங்கப் பாடல்கள் வாயிலா கவே அறிந்து கொள்ளுகின்றோம். அந்தக் காலத்து மக்களின் வாழ்வில் , கள் என்பது தவிர்க்கப்பட்ட ஒன் றாகவே காணப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும். அவர்கள் கள்ளினைக்  களிப்புடனே பருகினா ர்கள் என்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொடர்ந்தும் கள்ளானது களிப்பினை  அளிக்கும் ஒன்றா கவே இன்றுவரை தொடர்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். அந்தக் கள்ளு எப்படி வருகிறதுஎப்படி எடுக்கப்படுகிறது அந்தக் கள்ளினை எடுப்பதில் எவ்வளவு சிரமங்கள் காணப்படுகின்றன?   கள்ளினால்   சமூகப் பொருளாதாரம் விருத்தியடைகிறதா கள்ளினால் தொழில் வாய்ப்புகள் உருவாகிறதா? கள்ளி னைப் பெறுவதில் ஈடிபடுகிறவர்களின் நிலை எவ்வாறு அமைகிறது  கள் என்பது போதை தரும் பொருளாகள்ளினை வெறுத்து ஒதுக்கும் கருத்தை யார் முன் வைத்தார்கள் கள் ஒதுக்கப்பட வேண்டி யதுதானா  என்று பல விஷயங்கள் கள்ளின் பின்னால் நிறைந்தே இருக்கிறது என்பதை யாவரும் கருத் திருத்துவது மிகவும் முக்கியமாகும். ஆகவே இவை அத்தனைக்கும் நல்ல விளக்கத்தைக் காண்பதும் அவசியமானதுதானே !        

  கள்ளினைப் பற்றிய பல விளக்கங்களைப் பெற விளையும் வேளையில்    " பனை சீவுதல் " என்னும் ஒரு பெயர் வருகிறது. பனை சீவுதல் என் றாலே கள்ளிறக்குதல் என்றுதான் மனதில் பதியும்.அப்படித்தான் பதிந்தும் போயிருக்கிறது. இதில் பதனீர் இறகுக்குதலும் அடங்கியிருக்கிறது என்ப தும் நோக்கத்தக்க தாகும்.ஆண்பனையிலும்பெண்பனையிலும் வருகின்ற பாளைகளிலிருந்துதான் சாறு எடுக்கப்படுகிறது. இதனைப் பூந்துணர்ச் சாறு என்று அழைக்கின்றார்கள்.

  பூந்துணர் என்றால் பாளைகள் என்பதுதான் பொருளாகும்.ஆண்பெண் பனைகளில் வருகின்ற பாளை களைப் பதப்படுத்தியே அதிலிருந்து சாறு பெறப்படுகிறது. பாளைகளைப் பதப்படுத்துதலை " பாளை இடுக்குதல் " என்று பெயரிட்டு அழைப்பது வழக்கமாய் இருக்கிறது,பாளையினைப் பலவிதமாகக் கையா ண்டே சாறு எடுக்கப்படுகிறது என்பது நோக்கத்தக்கதாகும். அந்த வகையில் இடுக்கியும்வரிந்துகட்டியும், சீவியும்தட்டியுமே சாறு எடுக்கப்படுகிறது என்பது கருத்திருத்த வேண்டிய விடயமெனலாம்இவை யாவுமே தொழில் நுட்பத்தின் பாற்பட்டன என்பதும் நோக்கத்தக்கது.பாளையிலிருந்து சாற்றினை எடுப்ப திலும் கைதேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதும் முக்கிய செய்தியாகும்,சீவல் தொழிலிலும் நுட்பம் இருக்கிறது என்று பனையியல் பற்றி அறிந்தவர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

 பாளைகளில் சாறு எடுப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. பனையில் ஏறித்தான் சாற்றினை எடுக்க வேண்டும். அந்தச் சாறுதான் இனிப்பாயும்புளிப்பாயும் அமைகிறது. இனிப்பாய் இருக்கையில் " பதநீர் " என்னும் பெயரையும் புளிப்பினைப் பெறும் வேளை " கள் " என்னும் பெயரையும் பெற்று நிற்கிறது என்பது நோக்கத்தக்கதாகும்.

  இப்போது சில நுட்பமுறைகள் பனை ஏறும் தொழிலாளருக்கு வாய்த்திருக்கிறது.ஆனால் அந்தத் தொழில் நுட்ப முறையானது பரவலாக இடம் பெறவில்லை என்றுதான் கருதக்கூடியதாக இருக்கிறது. இதனால் பனை ஏறுபவர்கள் தொடர்ந்தும் தாம் பழகிய முறையிலேயே பனை ஏறித் தொழில் செய்து வருகிறார்கள் என்ப தும் நோக்கத்தக்கதாகும். 

     பனை ஏறுதல் என்பதில் முழுக்க முழுக்க மனித வலுவே பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமா கும்.நெஞ்சணைத்து ஏறுவதுகைகுத்தி ஏறுவதுகுத்தி ஏறுவது இடைக்கயிற்று முறை என்னும் முறைகள் கையாளப்படுகின்றன.பனை ஏறும் தொழிலாளர்களின் நெஞ்சுகைவிரல்கள்கால்கள் என்பன பாதிக்க ப்பட்டு காய்ப்பு உண் டாகிவிடுகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.பனை ஏறுவதில் உள்ள கஷ்டங்களைப் போக்குவதற்கு " கயிற்று முறை " என்னும் ஒரு முறை வந்திருக்கிறது. அருகருகே இருக்கும் பனைகள்   இரண்டு கயிறுகளால் பிணைக்கப்படுகின்றன. ஒரு கயிறு மேலாகவும்  டுத்த கயிறு கீழாகவும் இருக் கும்படி கயிறு இணைக்கப்படுகிறது. ஒரு பனையில் ஏறிவிட்டால் மேல் கயிற்றினைப் பிடித்துக்கொண்டு அடுத்த பனைக்குப் போய்விடலாம். இப்படிச் செய்வதால் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு நெஞ்சோ,   கைவிரல்களோ,கால்களோ பாதிக்கா நிலை ஏற்படும் அல்லவா ! கூட்டமாக இருக்கும் பனைகளுக்கு இம் முறை பொருத்தமாய் இருக்கும். ஆனால் தூரத்தூர பனைகள் இருந்தால் இம்முறை எந்தளவுக்குப் பொரு ந்தும் என்பதும் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும். எப்படித்தான் பார்த்தாலும் பனை ஏறுதல் என்பது சற்றுக் கடினமானதும் ஆபத்தானதுமான வேலைதான் என்பதை மனமிருத்துவது முக்கியமாகும். கைநோக, நெஞ்சு வலிக்க, கால்நோக , களைப்புற்று கஷ்டப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பினால் த்தான் களிப்புற்று மகிழும் கள்ளுக் கிடைக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

 கள்ளினைப் பருகி களிப்புடன் திரிவார்க்கு - கள்ளுக்குப்பின்னால் இருக்கும் கஷ்டம் மட்டும் விளங்குவ தேயில்லை.கள்ளினை விரும்பி விரும்பிக் குடிப்பார்கள். கள்ளிருக்கும் இடம் தேடி தேடி அலைவார்கள். கள்ளைக் கண்டதுமே துள்ளியும் குதிப்பார்கள். கள்ளுக்காகவே எதையுமே செய்தும் நிற்பார்கள். ஆனால் கள்ளினை இறக்குவாருக்கு கள்ளினுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மட்டும் கொடுக்காமலே இருக்கிறார்கள்.


No comments: