முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Tamil Edition) Free Kindle Edition மின்னூல் வெளியீடு


 இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல் தற்போது மின்னூலாக வெளியாகியுள்ளது.

மல்லிகை ஜீவாவின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் வகையில் நீண்ட முன்னுரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு ஆகிய இணைய இதழ்களில் வெளியானது.

இலங்கை யாழ்ப்பாணத்தில்   சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்குரிய  வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, 2021 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.

 டொமினிக் ஜீவா,  மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம்


ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில்  வெளியிட்டார்.  இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்க்கமுடியும்.

அவுஸ்திரேலியாவில் தற்போது வதியும்  முருகபூபதி, மேற்கிலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்.  மல்லிகை இதழில் தனது முதலாவது சிறுகதையை  1972 இல்                                        ( கனவுகள் ஆயிரம் ) எழுதி ஈழத்து இலக்கிய உலகில் பிரவேசித்தார். 

அன்றுமுதல் ஜீவாவின் நெருக்கமான நண்பராக விளங்கிய முருகபூபதி, ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்ததையடுத்து, அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்களை தொகுத்து எழுதிய தொடர் தற்போது நூலுருப்பெற்றுள்ளது.

மல்லிகை ஜீவா மறைந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் இவ்வேளையில் குறிப்பிட்ட தொடர் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா என்ற பெயரில் மின்னூலாக வெளிவந்துள்ளது.

இந்நூலில் மல்லிகை ஜீவா சம்பந்தப்பட்ட பல படங்களும் இடம்பெற்றுள்ளன.


இன்னும் சில தினங்களுக்கு இதனை Kindle இல் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும்.

அதற்கான இணைப்பு இத்துடன்:

https://www.amazon.com.au/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-Tamil-ebook/dp/B09RG5LFMB/ref=sr_1_1?crid=195YHROLOLBXL&keywords=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE&qid=1643495843&sprefix=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%2Caps%2C268&sr=8-1

இந்நூலை அவுஸ்திரேலியா முகுந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:  முருகபூபதி : + 61 416 625 766

                                          letchumananm@gmail.com

 

 

No comments: