அன்னை அபிராமியால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருளான அந்தப் பெருஞ்


சக்தியினை
 அகத்தில் இருத்திய பல அடியார்கள் இந்த அவனியிலே வந்து பிறந்திருக்கிறார்கள். அவர்களின் பேச்சினையும்போக்கினை யும்ழக்க வழக்கங்களையும் பார்த்தவர்கள் - அவர்களைப் பித்துப் பிடித்தவர்கள் என்று மனமெண்ணி மாநிலத்தில் ஒதுக்கியும் ,  கேலியும்  கிண்ட லும் செய்தே இருந்திருக்கிறார்கள் என்று அறியக்கூடி யதாகவே இருக்கிறது. சாதாரண மானவர்கள் போல் அல்லாமல் அவ ர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையே கார ணம் எனலாம். பக்தியில் திளைத்திட்ட இவர்கள் சித்தர்களாகவும் விளங்கி இருக்கி றார் கள்.சித்தியினை அருளுகின்ற அந்தப் பெருஞ் சக்தியுடன் பேசுப வர்களாகவும்அந்தச் சக் தியைக் கண்ணாரக் கண்டவர்களாகவும் மிளிர்ந்திருக்கிறார்கள் என்றும் அறிகின்றோம். அந்தப் பெருஞ்சக்தி யான அன்னை அபிராமியின் அருட்கடலினுள் மூழ்கி நின்ற ஒருவர் தான் " அபிராமி பட்டர் " என்னும் அருளாளராவர்.

  சோழவள நாட்டின் ஒரு பகுதியான திருக்கடையூரில் அந்தணர் பில் இவர் பிறக்கி ன்றார். தந்தை தாய் இவருக்குச்


சுப்பிரமணியம் என்று பெயரிட்டு மகிழுகிறார்கள். சுப்பிரமணியத்தின் தலைச் சுழி எப்
படி இருக்கப் போகிறது என்று யாருக்குமே தெரியாது. ஆனால் அந்த அன்னை அபிராமிக்கு மட்டுமே தெரிந்திருந்தது.அன்னை அபிராமி கோவில் கொண்டு அருளாட்சி புரிகின்ற திருக்கடையூர் ஆலயத்தி லே இவரின் பணி தொடங்குகி றது. ஆலயத்தில் பஞ்சாங்கம் படித்துச் சொல்லுவதுதான் இவரின் பணியாக அமைந்தது. இவரின் கரு விலேயே அந்த அன்னையின் அருள் புகுந்த கொண்டதோ என்னவோ அவ ரின் சிந்தனைகள் அனைத்தும் அந்த அபிராமியைப் பற்றியதாக அமைந்திருந்தது.

  யாருடமும் பேசமாட்டர். தானுண்டு தனது பஞ்சாங்கம் வாசிக்கும் வேலையுண்டு என்றளவில் அவர் இருந்துவந்தார்.பெண்களையே ஏறெடுர்ரும் பார்க்க மாட்டார். வரும் பெண்களையெல்லாம் அன்னை அபிராமியாகவே அவர் எண்ணி நின்றார்.அவரை ஆலயத்தில் இருப்பவர்கள் ஒரு பித்தனாகவே பார்த்தார்கள். அந்தப் பித்துக்குள்தான் அன்னை அபிராமியின் அருட்கடாட்சம் நிறைந்தே இருக்கிறது என்பதை எவருமே உணர்ந்திடா இருந்தார்கள் என்பதுதான் யதார்த்தமாய் அமைந்தது எனலாம்.

  பூசலார் என்றொரு அடியவர் இருந்தார். அவர் எதுவித வசதியும்


அற்றவர். ஆனால் ஆண்டவனுக்கு ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டுமென்று பேராவல் கொண்டு விளங் கினார். பூசலார் வசித்த நாட்டின் அரசன் ஒரு ஆலயத்தைக் கட்டி அதற்கு கும்பாவிசேக மும் செய்வதற்கும் ஒழுங்குகள் செய்து விட்டான். கும்பாவிசேகத்துக்கு முதல்நாள் அவன் கனவில் எம்பிரான் வந்து " நாளை எனது அடியான் ஒருவன் கட்டிய கோவிலின் கும்பா விசேகம் நடை பெறுவதால் உனது கும்பாவிசேகத்துக்கு வர முடியாது " என்று மொழி கிறார். அரசன் திடுக்குற்று எழுந்து - தன்னாட்டில் தன்னை அறியாமல் யார் அப்படிக் கோவில் கட்டியது என்று அறிந்திடத் துடித்து விடிந்ததும் நாடு முழுவதும் தேடுகி றான்.முடிவில் பூசலார் பெயர் அவனுக்குச் சொல்லப்படுகிறது. அரசன் அங்கே செல்லு கிறான்.  பூசலாரோ ஒன்றுமே விளங்காமல் அரசனைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கி றார். முடிவில் அரசனின் ஐயத்துக்கான விடை கிடைக்கிறது. தன் மனத்தில் அரனுக்கு ஆலயம் அமைத்திட எண்ணிய எண்ணத்தை அடியார் வெளியிடுகிறார்.இக்கதை அனை வரும் அறிந்த பெரியபுராணக் கதைதான். இந்தக் கதைக்கும் அபிராமியின் அருளாளருக் கும் என்னதான் தொடர்பு என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா !

 பூசலார் யாருமறியாமல் அந்தப் பரம்பொருளுக்கு அகத்திலே ஆலயத்தை அமைத்தார். இங்கே சுப்பிரமணியன் என்னும் அருளாளாளர் யாருமே அறியாமல் அன்னை அபிரா மியை அகத்தில் இருத்தி அச்சக்தியை அல்லும் பகலும் ஆராதித்தார். அச்சக்திக்கான பூஜைகளை அற்றினார். அந்தச் சக்திக்கு உவப்பான ஸ்ரீசக்ர பூஜையையும் ஆற்றிய படியே இருந்தார்.அப்படி அவர் இருந்த காரணத்தால் யார் வருகிறார்கள் , யார் வந்துவிட்டுப் போகிறார்கள், வருபவர் அரசரா அல்லது ஆண்டியா என்பதெல்லாம் அவருக்குத் தெரி யாமலேயே இருந்தது. அப்படி இருந்ததற்குக் காரணம் அவர் அன்னை அபிராமிக்கு ஆராதனை செய்து தன்னையே மறந்து, தன் நாமத்தையும் மறந்து, அந்த மகா சக்தியின் திவ்விய வடிவத்தைக் கண்டபடியே இருந்தார் என்பதுதான் பெரியதோர் உண்மை நிலை எனலாம்.

  அந்த நாட்டின் அரசன் தரிசனம் செய்வதற்கு ஆலயத்துக்கு வருகிறான். நாட்டின் அரசன் என்பதால் அவனுக்கு ஆலயத்தில் மரியாதைகளுக்கு எந்தவித குறையுமே இருக்கவி ல்லை. அனைவரும் கை கூப்பி தக்கவிதமாகப் பணிந்து நிற்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் எந்தவிதச் சலனமுமின்றி தன்பாட்டில் இருக்கிறார். அரசனுக்கு இது சற்று கோப மாய் இருந்தாலும் , ஆச்சரியமாகவும் தென்பட்டது. யாவரும் எழுந்து தனக்கு மரியாதை செய்து நிற்க இந்த ஆள் மட்டும் இப்படி இருப்பது ஏனோ என்று சிந்திக்கத் தலைப்பட் டான். ஆலயத்தில் இருப்பவர்கள் - அவனொரு பித்தன் , இறுமாப்புப் பிடித்தவன், என் றெல்லாம் அரசனுக்கு - அவரைப்பற்றி தங்களின் அவிப்பிராயங்களை பட்டியலிட்டுச் சொல்லிப் பெருந் திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.ஆலயத்தில் பஞ்சாங்கம் வாசிப்பதுதான் அவரின் வேலை என்பதை அறிந்து கொண்ட அரசன் , தியானத்தில் கண்ணை மூடி இருந்த சுப்பிரமணியம் என்னும் அபிராமியின் பக்தனிடம் " இன்று என்ன திதி என்று கேட்டார் " அன்னை அபிராமியின் பேரொளியான முகத்தினை மனக்கண்ணால் பார்த்த படியே இருந்தவர்  " பெளர்ணமித் திதி " என்று படக்கென்று சொல்லி விட்டார். ஆனால் அன்றோ " தை அமாவாசைத் திதி " அரனுக்கும் பொல்லாத கோபம். அங்கே இருந்த வர்களுக்கும் இவனென்னடா பைத்தியம் போல உளறி விட்டிருக்கிறான். அரசனிடம் நன்றாக மாட்பட்டுப்பட்டு விட்டான். வாங்கிக் கட்டப் போகிறான் என்று உள்ளூரவே ஆனந்தப்பட்டு நின்றார்கள். தியானத்திலிருந்து விடுபட்ட பின்னர்தான் சுப்பிரமணியம் தானுரைத்ததைத் தெரிந்து கொண்டார் .தவறிழைத்து விட்டேனே என்று மனம் வருந் தினார்.

 அமாவாசைத்திதியில் பெளர்ணமி வராவிட்டால் மரணதண்டணை என்று அரசன் அறிவித்து அதற்கு ஏற்ற வாறு ஆலயத்தின் முன் , ஒரு குழி வெட்டி அதில் அக்கினியை மூட்டி அதன் மேல் நூறு கயிறுகளால் பிணைக்கப்பட்ட உறியினைத் தொங்கவிட்டு அதில் ஏறி நூறு பாடல்கள் பாட வேண்டும், பாடி முடிய ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டு நூறாவது கயிறும் அறுக்கப்படும் பொழுது ஆண்டவன் அருள் கிடைக்காவிட்டால் அக்கி னியில் விழுந்து மரணமடைவது தான் அக்காலத்தண்டனை. அதற்கு " அரிகண்டம் " என்று சொல்லப்பட்டது.அந்தத் தண்டனையை அன்னையின் பக்தர் அனுபவிக்கும் நிலை அங்கு ஏற்பட்டது என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமாகும்.

  சுப்பிரமணியம் உறியில் ஏறுகிறார். கீழே அக்கினி சுவாலை விட்டு நிற்கிறது. பாடுகி றார்!  பாடுகிறார் ! எழுபத்து எட்டாவது கயிறு அறுத்தாகி விட்ட து. எழுபத்து ஒன்பதா வாது கயிறு அறுபட இருக்கிறது.  அனைவரும் பெருங் கலக்கத்துடன் பார்த்தபடியே இருக்கிறார்கள். அப்பொழுது அங்கே யாருமே காணாப் பேரதிசயம் நடந்தது !

 

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்க

பழிக்கே சுழன்று வெம்பாவங்க லேசெய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கய்வர் தம்மோடென்னை கட்டுஇனியே

 

எழுபத்து ஒன்பதாவது கயிற்றுக்கான பாடலாய் இப்பாடல் ஒலித்தது அமைவாசை இர வில் " பெளர்ணமி " தோன்றியது. இருளகன்று பிரகாசமாய் ஒளி வெள்ளம் பரப்பிய பூரணச்சந்திரன் வானில் வந்து நின்றான். அரசனுட்பட அனைவருமே அதிசயித்தார்கள். அரசன் சுப்பிரமணியத்தின் காலில்விழுந்து மன்னிப்புக் கேட்டு சுப்பிரமணியத்தை           " அபிராமி பட்டர் " என்று பெயர் சூட்டி கெளரவித்து நின்றான் என்பது அபிராமி பட்டரின் வரலாற்றுக் கதையாக வழங்கி வருகிறது. தன்னுடைய பக்தனின் வாக்கினைப் பொய்யா க்காமல் அன்னை அபிராமி ஆனவள் தன்னுடைய தோட்டினை எடுத்து ஆகாயத்தில் வீசி யெறிந்தமையால் அமைவாசையானது பெளர்ணமியாய் ஆகியது என்றும் அறியமுடிகிறது.

  அமைவாசைத் திதியன்று பெளர்ணமி என்று அபிராமி பட்டர் எப்படிக் கூறினார் ? அப்படி அவரைக் கூற வைத்தது யார் ? இது யாவரதும் மனத்தில் எழுகின்ற நியாயமான ஐயம் அல்லவா ? அப்படி அவர் கூறியதைத்தான் நாமனைவரும் மிகவும் உன்னிப்பாய் உள்நோ க்கிச் சிந்திக்க வேண்டும். அன்னை அபிராமியின் திருவருள் பொலியும் முகத்தினையே அவர் நாளும் பொழுதும் பார்த்து அனுபவித்த வண்ணம் தியானத்தில் இருப்பதால் அவ ருக்கு வெளியுலகம் தெரியாது. அவருக்கும் இருளே தெரியவரமாட்டாது. இருளையே அறி யாமல் அந்தப் அருட் பேரொளியினைப் பார்த்து அதிலே மூழ்கி இருப்பவர் பெளர்ணமி என்றுதானே பதில் சொல்ல முடியும்.அவர் தான் கண்டதை , அனுபவித்தையே அங்கே சொல்லி இருக்கிறார். இதுதான் பக்தியின் உச்ச நிலை எனலாம். கண்ணப்பன் கண்ணை அப்பியதும், சிறுத்தொண்டர் பிள்ளைக் கறி கொடுத்ததும்  இயற் பகையார் மனைவி யையே கொடுத்ததும், சண்டேஸ்வரர் தந்தையின் காலை வெட்டியதும், எப்படி என்று கேட்பது பொருத்த மற்றதாகும். யாவுமே உயர்ந்த பக்தியின் வெளிப்பாடுதான். அப்படி த்தான் அபிராமி பட்டரின் வாக்கும், செயலும் அமைந்திருந்தது என்றுதான் எழுகின்ற ஐயத்தினுக்கு விடை பகர்ந்திடக் கூடியதாக இருக்கிறது.

  அபிராமி பட்டரின் இந்தக் கதையினால் இவர் போற்றப்படுகிறாரா என்றால் - அதற்கும் மேலாக அவரின் மனத்திருந்து எழுந்த அபிராமி அந்தாதியால் போற்றப்படுகிறார் என்ப துதான் மிகவும் பொருத்தமாயும் சிறப்பாகவும் இருக்கும் என்பது மனங்கொள்ளத் தக்க தாகும். அன்னைத் தமிழின் சுவை இப்பாடல்கள் அனைத்திலும் நிறைந்தே இருக்கிறது. அந்தாதி என்னும் வகையில் இதன் அமைப்பு வந்திருக்கிறது. பக்தி இதனில் உருவாகிக் , கருவாகிக் , கற்பவர் கருத்தெலாம் உணர்வூட்டும் பாங்கில் அமைந்திருக்கிறது. சாக்த வழி பாட்டின் சாராம்சமாய் அபிராமி அந்தாதியினைக் கொள்ளலாம் என்பதும் அறிஞர்கள் கருத்தாய் அமைகிறது. சாக்த வழி பாட்டின் முக்கியமே சக்திதான். அந்தச் சக்தியாய் அன்னை அபிராமி வந்து அமைகின்றார். சக்தியினை உபாசிப்பவர்கள் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையே மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள். சக்தியைப் பிரார்த்திக்க ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் சமஸ்கிருதத்திலே அமைந்திருக்கிறது. சமஸ்கிருதம் தெரியாதபர்கள் சக்தியை எப்படித் துதிப்பது என்று ஒரு ஏக்கம் இருக்கும் அல்லவா ? அந்த ஏக்கத்தையே போக்கிட வந்து அமைந்திருப்பதுதான் அபிராமி அந்தாதிப் பாடல்கள். இந்த விதத்திலும் அபிராமி அந்தாதி மிகப்பெரிய ஞானப் பனுவலாகவே விளங்குகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை எனலாம்.

  அருட்கடலாம் அன்னை அபிராமியினைப் பாடும் அபிராமி பட்டருடன் நாமும் பயணி த்தால் அவர் என்ன கேட்கிறார் எப்படிக் கேட்கிறார் அபிராமியுடன் தன்னுடைய தனக் கான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் நாமும்  தெரிந்து அந்த பக்தி அனுப வத்தில்  எம்மையுமே மறந்தும் இருக்கலாம் அல்லவா !

     

                       நின்றும் இருந்தும் கிடந்தும்

                              நடந்தும் நினைப்பதுன்னை

                          என்றும் வணங்குவ துன்மலர்த்

                                தாளெழு தாமறையின்

                          ஒன்றும் அரும்பொருளே அரு

                                ளேஉமை யேஇமயத்

                            தன்றும் பிறந்தவளே அழி

                                  யாமுத்தி ஆனந்தமே

 

அபிராமி பட்டரின் நிலை இங்கே தெள்ளத் தெளிவாகக் காட்டப்படுகிறதல்லவா அந்த ஆதிசக்தியை அபிராமியை வேதத்தின் பொருள் என்கிறார்.அழியாத முத்தி இன்பம் என்கிறார். பரம்பொருளான சிவனின் திருவருள் வடிவமே என்று என்று உருகி நிற்கின் றார். நின்றபடி இருந்தபடிபடுத்தபடிநடந்தபடி எந்த நிலையிலும் என்னுடைய தியானம் உன்னைப் பற்றியதே ! உன்னுடைய தாமரை போன்ற திருவடியே நான் என்றுமே தொழுது பரவி நிற்கும் இடமாகும் என்று சொல்லும் நிலைதான் அபிராமி பட்டரின் நிலை யாக இருக்கிறது.

 

                          கண்ணிய துன்புகழ் கற்பதுன்

                              நாமம் கசிந்துபத்தி

                          பண்ணிய துன்னை நயந்தோர்

                                அவையத்து நான்முன்செய்த

                            புண்ணியம் ஏதெனம் மேபுவி

                                  ஏழையும் பூத்தவளே

 

ஏழு உலகங்களையும் பெற்ற தேவியே என் தாயே ! என் கருத்து அத்தனையும் நீதான்.கருதினால் உன்னையல்லால் எனக்கு வேறு எதுவுமே கருத்தில் வந்துவிடாது. உனது புகழையே பாடுவேன். கற்பதும் கூட உன்னுடைய நாமந்தான் தாயே ! நான் பக்தி செய்வது உனது  இரண்டு திருவடியாகிய தாமரை மலர்களையேதான் ! உன்னை விரும் பிய அடியார்களின் கூட்டந்தான் எனது பகலாயும் இரவாயும் அமைகிறது என்று அபிரா மிபட்டர் உருகிநிற்பது புலனாகி நிற்கிறதல்லவா !

  பூத்தவளே என்கிறார்புவனங்கள் பதினான்கையும் காத்தவளே என்கிறார். கறையினை யுடை உடையவருக்கே மூத்தவளே என்றும் சொல்லுகிறார்.மூவா முகுந்தருக்கு இளை யவளாய் இருக்கிறாய் என்கிறார்.மாதவத்தினை உடையவளே அபிராமித் தாயே உன்னை யன்றி வழிபட எனக்கு வேறு தெய்வமேது இல்லையே தாயே ! உன்னை விட்டால் யார ம்மா எனக்குத் தெய்வம் என்று ஏங்குகின்றார் அபிராமிபட்டர்.

 

                        மணியே மணியின் ஒளியே

                              ஒளிரும் மணிபுனைந்த

                        அணியே அணியும் அணிக்கழ

                                கேஅணு காதவர்க்குப்

                        பிணியே பிணிக்கு மருந்தே

                                  அமரர் பெருவிருந்தே

                          பணியேன் ஒருவரை நின்பத்ம

                                  பாதம் பணிந்தபின்னே

 

அபிராமி பட்டரின் அழகு தமிழ் கொட்டுகிறது பாருங்கள்.இந்தப் பாடலைப் பாடினால் மனம் உருகும். நல்ல தமிழும் நாவில் வந்தமரும்,அந்த அருட் பெருஞ்சோதியான அபிரா மியினை எப்படியெல்லாம் காணுகிறார் என்பதெல்லாம் எங்கள் அகத்தினில் அமர்ந்து விடும் அல்லாவா !

  பாடிக் கொண்டே இருக்கிறார். அபிராமியின் அருளாட்சி அரின் உள்ளத்தில் அருட்பாடல் களாகவே ஊற்றெடுத்து ஊற்றெடுத்து பெருகியே நிற்கிறது என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

 

                      அடைத்தனை வஞ்சப் பிறவியை

                            உள்ளம் உருகும்அன்பு

                      படைத்தனை பத்ம பதயுகம்

                              சூடும் பணிஎனக்கே

                      அடைத்தனை நெஞ்சத் தழுக்கைஎல்

                              லாம்நின் அருட்புனலால்

                        துடைத்தனை சுந்தரி நின்அருள்

                                ஏதென்று சொல்லுவதே

 

அபிராமி பட்டரின் இந்த நிலை மிகவும் முக்கியமான நிலையாகும். இங்கே இருப்பதை வெறும் தமிழ்ப் பாட்டு என்று மட்டும் எண்ணிப் படித்துவிடல் மட்டும் கூடாது. இப்பாட் டில் மிகவும் உயர்ந்த தத்துவம் பொதிந்து கிடக்கிறது என்று எண்ணியே இப்பாடலைப் பார்க்க வேண்டும். பிறவிக்குக் காரணம் என்ன என்றால் அதுதான் கன்மவினை.அந்த வினையினை அபிராமி தகர்த்து விட்டதாக அபிராமிபட்டர் தெரிவிக்கிறார். இது வெறும் வார்த்தை அல்ல. இது ஒரு தெய்வீக அனுபவமாகும்.வினையினைத் தகர்த்தபின் உள்ள மானது உருகும்படி அன்பினை உண்டாக்கி விட்டிருக்கிறாளாம் அன்னை அபிராமி. இங்கே மிகவும் முக்கியமான இடம் எது தெரியுமா " நெஞ்சத் தழுக்கையெல்லாம், நின் அருட்பு னலால்துடைத்தனை " என்னும் இடமேயாகும்.அழுக்கு நிறைந்தால் அதனைப் போக்கிட சாதாரண மாகவே நாங்கள் நீரினினையே பயன்படுத்துவோம்,அது சாதாரண அழுக்கும்  சாதாரண நீரும் . ஆனால் இங்கே இருக்கும் அழுக்கோ ஆணவ மென்னும் நிலையினால் நிறைந்த அழுக்காகும். அந்த ஆணவ அழுக்கைத் துடைத்து விட்டாளாம் அபிராமித் தாய் என்கிறார் அபிராமிபட்டர். அப்படித் துடைப்பதற்கு அவள் பயனாக்கியது சாதாரண நீரல்ல ! இதுதான் மிகவும் முக்கியம். " அருட்புனல் " என்று அபிராமிபட்டர் காட்டுவதுதான் மிக மிக முக்கியமாய் மனத்துள் பதிய வேண்டிய கருத்தாகும்..இப்படியாகச் செய்த அபிராமி யின் தாமரை மலர்கள் போன்ற திருவடியை தன்னுடைய தலையால் வணங்குவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டாள் அந்த அபிராமி என்று அபிராமிபட்டர் வெளிப்படுத்தி நிற்கும் பாங்கினை உள்ளத்தில் இருத்தாமல் இருக்கத்தான் முடியுமா ?

   சாக்த வழிபாட்டின் முக்கியத்துவமே சக்திதான் தங்களின் கடவுள் என்பதே ஆகும். அந்தச் சாக்த வழிபாட்டின் கடவுளான சக்தியினை யே அபிராமி பட்டரும் தன்னுடைய ஆதார சக்தியாக்கிக் கொண்டார் என்பதை அவரின் அபிராமி அந்தாதிப் பாடல்கள் வாயி லாக அறிந்து கொள்ள முடிகிறது எனலாம்.

  சக்தியை அடைவதால் கிடைக்கும் பெரும் பேறு முத்தி என்றும்அந்த முத்தியைப் பெறுவதற்கான சாதனமாகப் பக்தி அமைகிற தென்றும்பக்திக்கு மிகவும் முக்கியமானது மந்திரம் என்றும் அந்த மந்திரத்தைத் தருகின்றவர் குரு என்றும்,குருவினால் கிடைப்பதை தீட்சை என்றும் சொல்லப்படுகிறது. இவைய அனைத்தையும் விளக்கிக் கூறுவதை ஆகமம் என்றும் இதனைச் செயற்படுத்தி அனுபவத்தில் பெற்றிடுவதற்கு முயலும் நிலை யினை விளக்குவதை பத்ததி என்றும் சாக்தர்கள் சொல்லுகிறார்கள்.

  இவற்றை அபிராமி பட்டர் தன்னுடைய அபிராமி அந்தாதியில் காட்டுவதுதான் அதன் முக்கியத்துவத்தில் மேலும் ஒரு படியெனலாம்." சென்னியது உன் திருவடித்தாமரை " என்று தீட்சையினையும் , "'சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் " என்பதனால் தீட்சையினால் மந்திரம் வந்தமைகிறது என்றும், சிந்துர வண்ணப் பெண்ணே " எனச் சக்தியையும் , " முன்னிய நின் அடியாருடன் கூடி " என தீட்சை தரக்கூடிய குருவையும் , " முறை முறையே பன்னியது" எனக்காட்டி அப்படிப் குருவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட மந்திரத்தை மனதினால் எண்ணித் தொழுகின்ற முறையையும். என்றும் உன்தன் பரம ஆகமப் பத்ததியே " என்றும் சொல்லி சாக்தமதத்தின் செயலாக்கக் கொள்கையினை எவ்வளவு நுட்பமாக அபிராமி அந்தாதி வாயிலாக அபிராமிபட்டார் யாவர் மனத்திலும் பதியும் வண்ணம் செய்திருக்கிறார் என்பது கருத்திருத்த வேண்டிய கருவூலம் அல்லவா !

  அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியின் பெயரினைச் சொன்னாலே எங்கள் பிறவித் துன்பமெலாம் பறந்தே போய்விடும். அபிராமி அந்தாதியினைப் பாராயணம் செய்தால் வந் தவினையும் வருகின்ற வல்வினையும் காணாமலே ஓடிவிடும். அத்தனை சக்தி வாய்ந்த துதான் அபிராமி அந்தாதி.நூறு பாடல்களுமே தத்துவ முத்துக்கள்.நூறு பாட லுமே அரு ளினை அள்ளித்தரும் ஆனந்த மழை. நூறு பாடல்களும் அந்த அரும்பெரும் சக்தியான அபிராமியினைத் துதிக்கும் அரிய மந்திரங்கள் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. இதில் எதைச் சொல்லுவது எதைச் சொல்லாமல் தவிர்ப்பது என்பது இயலாத காரியமாகும்.

அபிராமி அந்தாதி என்றவுடன் யாவர் மனத்திலும் வந்துநிற்கும் பாடல் எது தெரியுமா ?

 

                        தனம்தரும் கல்வி தரும்ஒரு

                            நாளும் தளர்வறியா

                      மனம்தரும் தெய்வ வடிவும்

                            தரும்நெஞ்சில் வஞ்சம்இல்லா

                      இனம்தரும் நல்லன எல்லாம்

                            தரும்அன்பர் என்பவர்க்கே

                      கனம்தரும் பூங்குழ லாள்அபி

                              ராமி கடைக்கண்களே

 

என்னும் அற்புதமான அருளான பாடலேயாகும். அனைவரது மனத்திலும் அமர்ந்திருக்கும் இப்பாடல் என்றால் அதனை மறுத்துரைத்துவிட முடியாது. அழகு தமிழ் வரிகளும் அவ்வரிகள் ஊடாக வெளிப்பட்டு நிற்கும் அரிய கருக்களும்அந்த ஆதிபராசக்தியான அபிராமி வேண்டுவன அத்தனையும் அளிப்பாள் என்னும் உறுதியும் வேண்டுவன எப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்னும் நிலையும் இப்பாடல் வாயியாக உணர்த்தப்ப டுகிறது அல்லவா !

 

                    விழிக்கே அருளுண் டபிராம

                        வல்லிக்கு வேதம்சொன்ன

                    வழிக்கே வழிபட நெஞ்சுண்

                          டெமக்கவ் வழிகிடக்கப்

                    பழிக்கே சுழன்றுவெம் பாவங்க

                            ளேசெய்து பாழ்நரகக்

                    குழிக்கே அழுந்தும் கயவர்தம்

                          மோடென்ன கூட்டினையே

 

என்னும் பாடல் அபிராமி அந்தாதியின் எழுபத்து எட்டாவது பாடலாகும். உறியில் இருந்தபடி பாடுகிறார் பட்டர். எழுபத்து எட்டாவது பாடலாக இப்பாடல் வந்ததும் விண்ணில் பூரணைச் சந்திரன் பொலிவுடன் காட்சி தருகிறான். அபிராமியிடம் பட்டர் பிராத்தனை அனுக்கிரகமாகி விட்டது. அமைவாசை பெளர்ணமியாய் பரிணமித்த அதிசயமே அந்த அனுக்கிரகமாகும்.

  அத்துடன் பட்டர் பாட்டை நிறுத்திட எண்ணுகின்றார். ஆனால் அந்த ஆதி பராசக்தியான அபிராமி தன்னுடைய பக்தனின் பக்திப் பனுவல்களைக் கேட்டிட ஆவல் கொண்டு இன் னும் பாடு என்று அருள் பாலிக்கின்றாள். அபிராமிபட்டருக்குக் கேட்கவா வேண்டும் ! பாடுகிறார் ... பக்தி பெருக்கெடுக்கிறது ! நிறைவில்  .....

 

          ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெலாம்

          பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக்

          காத்தாளை ஐங்கணை பாசங் குசமும் கரும்பு அங்கை

          சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க் கொருதீங்கிலையே

 

என்னும் மனமிருத்தும் பக்தியமுதாய் இப்பாடல் வந்தமைகிறது. " தாரமர் " என்று  " தா " வுடன் தொடங்கி  , " தீங்கிலையே " அதாவது " யே " என்று நிறைவு செய்திருக்கிறார் அபிராமிபட்டர். இவை இரண்டையும் இணைத்தால்தாயே " என்றுதான் அமையும். அந்தத் தாயான அபிராமியியை ஆதியாயும் அந்தமாயும் அபிராமி அந்தாதி வாயிலாகாகக் காணு கின்றார் அவளின் அருளுக்குப் பாத்திரமான அபிராமி பட்டர் என்பது மனக்கொள்ளத்தக்க தாகும்.


No comments: