கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தேழு ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

 

                       நாளும் பனம்பழத்தை நல்லமுதா யுண்ணுங்கா

                    லாளும் கடப்பா னழுகிரந்தி - நீழுமலஞ்
                    சிக்கும்பித் தத்தில்வளி சேருதல் நோய்க்கனமு
                    தித்திக்கும் பலக்குமெனச் செப்பு

 

  எங்கள் கற்பகதருவாம் பனையின் பழத்தின் அருமை


பெருமையை பதார்த்தகுண சிந்தாமணி எப்படிக் காட்டுகிறது பாருங்கள். பனம்பழம் எங்களின் வாழ்வில் முக்கிய மான உணவாகவே இருந்து வந்திருக்கிறது.அது மட்டுமல்ல அது பல நோய்களையே தீர்க்கும் மருந்தாகவும் விளங்கியும் வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்,பனம்பழம் பற்றிய விழிப்புணர்வு மீண்டும் இப்போது எழத் தொடங்கி இருக் கிறது. தமிழகத்திலும்இலங்கையிலும் பனம்பழம் தொடர்பாக பல உணவுப் பதார்த் தங்களை ஆக்கி யாவருக்கும் கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்றமையைக் கருத்திருத்தல் முக்கியமாகும்.

  நாகரிகம் என்னும் நிலையானது முன்னேற்றத்தின் படியாக


இருக்கிறது என்பதை மறுத்துவிடல் முடியாது. அதே வேளை பாரம்பரியமான பலவற்றைப் பாரா முகமாக் கியும் அதனைப் பற்றியே கருத்தில் எடுக்காமலும் அத்தனையும் ஓரங்கட்டப்பட்டு  வைக்கும் படியும் ஆக்கி இருக்கிறது என்பதையும் மறந்து விடவும் கூடாது. இப்படி ஆக்கப்பட்டன உணவுகளாகவும் இருக்கும். பழக்க வழக்கங்களாகவும் கூட இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் எங்களின் சொந்தப் பழமான பனம்பழமும் பலரால் ஓரங்கட்டலுக்கு ஆளாகி விட்டது. ஓரங் கட்டப்பட்ட பனம்பழத்தின் அருமையைப்பெருமையை மனமிருத்திய பலரின் நல்நோக்கால் இன்று பனம்பழம் மக்கள் மத்தியில் புதிய வடிவில் காட்சி தந்து சுவையினையும் பயனினையும் வழங்க வந்திருக்கிறது.

  பனம்பழத்தின் களியினைக் கொண்டு பனாட்டினை உற்பத்தி செய்து வந்திருக்கிறோம் என்பதுதான் எமக்கெல்லாம் தெரிந்த விடயம். அந்தப் பனாட்டினை பல வகை களில் பல வடிவங்களிலெல்லாம் கவர்ச்சிகரமான முறையில் பக்கற்றுக்களில் இட்டு பல இடங்களிலும் விற்பனைக்கு வைத்திருப்பதை இன்று காணும் பொழுது மிகவும் ஆனந்தமாகவே இருக்கிறது. பொதி செய்யப்பட்ட விதத்தில் பனாட்டும் நவநாகரிகத் தினுள் தன்னை நிலை நிறுத்தும் விதத்தில் வந்து நிற்கிறது என்பது நல்லதொரு ஆரோக்கியமான நிலை என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறதல்லவா ! 

   பனம்பழம் என்பதைச் சாதாரணமாக எடை போட்டு


விடக்கூடாது. பனம் பழத்தின் களி என்றதும் பனங்காப் பணியாரம் மட்டுந்தான் எங்களின் நினைவில் வந்து நிற் கும். பனங்களியின் சுவையினைப் பனங்காப் பணியாரம் மூலம் சுவைத்து உணர்ந்த வர்களுக்கு அதன் அருமை தெரியும். பனங்களியில் பணியாரம் செய்யும் நிலை கட ந்து பனங்களியானது மேலும் பல உணவுப் பதார்த்தங்களை உருவாக்கி நிற்கும் அள வுக்கு தற்போது வந்திருக்கிறது என்பதுதான் மிகவும் இனிப்பான செய்தியாகும். எங்க ளின் மூதாதைகளின் மனங்கவர்ந்த பனம்பழத்தை இன்றுள்ளவர்களும் சுவைத்து அனுபவிக்க வேண்டும் என்னும் சிந்தனை எழுந்ததே பனம்பழத்தின் முக்கியத்துவத் தைக் காட்டி நிற்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறதல்லவா !

  யாழ்ப்பாணத்தில் உதயமான பனை அபிவிருத்திச் சபையானது பல புதிய முயற்சிக ளுக்கு வித்திட்டு நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.துறைசார் நிபு ணர்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்தச்சபையானது பல ஆக்க பூர்வமான திட் டங்களையெல்லாம் செயற்படுத்தி வருகிறது என்பதை மறந்துவிட கூடாது.பனை அபி விருத்திச் சபையினால் பனம்பழம் புத்துயிர்ப்பினைப் பெற்று நிற்கிறது எனலாம். பன ம்பழத்தின் களியினைக் கொண்டு பல் வேறுவகையான உணவுப் பதார்த்தங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் அவற்றைப் பிரபலப்படுத்தி பனம்பழத்தினை மக்களின் மனங்களிலெல்லாம் நிலை பெற்றிட வைத்திருக்கிறது. இது பனம்பழத்தைப் பொறு த்தவரை நல்லதொரு ஆரோக்கியமான நிலையாகவே  கொள்ளலாம் அல்லலவா !

  பனம்பழத்தினின்றும் பனங்களியினைப் பிரித்தெடுப்பதற்கு


நவீன முறைகள் கையாள ப்படுகின்றன. அதில் நவீனமான இயந்திரங்கள் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கதா கும். கைகளினால் கசக்கிப் பிழிந்து எடுத்த களியினை இயந்திரங்கள் மூலமாக எடு க்கும் பொழுது கிடைக்கும் பயன் நிறைவாகவே அமையும் நிலை காணப்படுகிறது. குறைந்த நேரத்தில் நிறைந்த பயனை அடைவதும் சாத்தியமாகிறது அல்லவா ! இயந் திரங்களைப் பயன்படுத்தி பனங்களியினை எடுப்பதற்கான உரிய பயிற்சிகளையும் பனை அபிவிருத்தி சபையானது வழங்கி வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்.யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பகுதியில் பயிற்சிகள் வழங்கப்பட்டு  , பயிற்சியினைப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

  பனங்களியினை உற்பத்தி செய்கின்ற இடங்களாக இலங்கையில் யாழ் மாவட்டம் மன்னார் மாவட்டம் திருகோணமலை மாவட்டம் மட்டக்களப்பு  மாவட்டம்புத்தளம் மாவட்டங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் - நெடுந்தீவிலும்சிங்கை நகரிலும்மன்னாரில் படப்பாடியிலும்திருகோணமலையில் வரோரதயநகர் பகுதியிலும்மட்ட க்களப்பில் முகத்துவாரம் பகுதியிலும்புத்தளத்தில் கற்பிட்டிப் பகுதியிலும் பனங்களி உற்பத்தி நிலையங்கள் அமையப் பெற்றி ருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதா கும்.

  பனங்களியினைப் பயன்படுத்திப் பலவித உற்பத்திகள் வந்திருக்கின்றன. அவற்றின் வகைகளைப் பார்த்தால் எமக்கெல்லாம் ஆச்சரியமாகவே இருக்கும்.பனாட்டின் வகை களான பாணிப்பனாட்டுதோற் பனாட்டு ஆகியவற்றை ஏற்கனவே பார்த்தோம். அதைப் பற்றி எங்கள் அனைவருக்குமே நன்றாகவே தெரிந்தும் இருந்தது. அதுமட்டுமல்ல அந் தப் பனாட்டுகளை நாங்களாகவே எங்கள் பாட்டில் வீட்டிலேயே எந்தவித நவீன  தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தாமல்


பதப்படுத்தி பக்குவமாய் எடுத்துச் சுவை த்தும் வந்திருக்கிறோம். அந்த நிலை கடந்து தற்போது நவீன தொழில் நுட்பங்கள் உட்புகுந்து பனங்களியிலிருந்து புதுப் புது உற்பத்திகள் எம்மையெல்லாம் வரவேற்று நிற்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய நிலை எனலாம்.

  பனம்பழத்தினைக் கைகளால் பிசைந்து எடுத்தார்கள். அப்பொழுது சுகாதாரம் கடைப் பிடிக்கப்பட்டதா என்றால் அது ஐயத்துக்கு இடமாகவே இருந்தது எனலாம். பனம் பழத்தினை கிடைத்த பாத்திரத்தினுள் நீரினை விட்டு பிசைந்து எடுப்பது என்பது சாதா ரணமாக அப்பொழுது இருந்தது. அப்படி எடுக்கும் பொழுது பனம்பழங்களை அதிகள வில் எடுப்பது கஷ்டமாகும். ஒரு பழத்தை அல்லது இரு பழத்தை மட்டுமே களியெ டுத்திடப் பயன்படுத்தக் கூடியதாகவே இருக்கும். அப்படி எடுத்த பின்னர் வருகின்ற பனங்களியினை உரிய முறையில் பாய்களில் காயவிடும் பொழுதும் அதில் பெரிய கவனத்தைச் செலுத்திய நிலை இருந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல லாம். ஆனாலும் அப்பொழுது அதுதான் பொருத்தமான நிலையாக இருந்தது.

  ஆனால் இன்று நிலை மாறிவிட்டதையே காணுகின்றோம். பனம் பழமானது குளிர்ந்த நீரிலும் சுடு நீரிலும் அத்துடன் உணவு தற்காப்புப் பதார்தங்களாலும் கழுவிச் சுத்தப் படுத்தப்படுகிறது.அதன் பின் தோலகற்றப்பட்டு மென்மையாக்கும் இயந்திரத்தினுள் அளவான நீர் விட்டு உள்ளே செலுத்தப்படுகிறது. அதன் பின்னர் விதைகள் தும்புகள் யாவுமே வடிகட்டல் முறையின் மூலம் பிரித்தெடுத்தல் நடை பெறுகிறது.

  இயந்திரங்களிலிட்டு வெளிவந்த துப்பரவு செய்யப்பட்ட பனங்களியினை  , பொருத் தமான கொள்கலன்களுக்கு மாற்றல் இடம் பெறுகிறது. அப்படி மாற்றும் பொழுது தேவையான அமிலத்தன்மை கவனத்தில் கொண்டு சரிசெய்யப்படுகிறது என்பது முக் கியமாகும். சுத்தமாய் எடுக்கபடும் பனங்களியானது எப்படியெல்லாம் உருவெடுக்கி றது என்பதை அறியும் ஆவல் எழுகிறதல்லவா !

  பனம் பானமாகிறது. பனங் கோடியலாகிறது. அத்துடன் அமையாதுபனம்பழ ஐஸ் கிறீம்பனம்பழ ஜாம்பனம்பழ யோக்கட்பனம்பழச் சொக்கிலேற்பனம்பழக் கேக் பனம் பழக் குக்கீஸ்என்று பல அவதாரங்களில் வந்து எம்மையெல்லாம் ஆச்சரியத்துக்குள் ஆட்படுத்தி நிற்கிறது பனங்களி.அத்தனையும் இன்று விற்பனைக்கு வந்து யாவரும் விரும்பி வாங்கிச் சுவைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்பது தான் மிகவும் முக்கி யமாகும்.

   பனங்களியினை எடுத்துப் பல பொருட்கள் செய்யப்படுவதை அறிகிறோம். அவற்றின் செய்கை  எப்படி அமைகிறது என்று பார்ப்பதும் முக்கியமல்லவா ? குடிக்கும் நிலை யில் வந்து நிற்கும் பானங்களின் ஒரு நிலைதான் கோடியல் ஆகும். கோடியல் தயாரி ப்பில் சீனிப்பாகு வந்து நிற்கிறது. சீனியைப் பாகாக அதாவது 70 பரனைற்று பாகை யாக காய்ச்சி எடுக்கப்படுகிறது. பின்னர் அதனுடன் துப்பரவு செய்யப்பட்ட பனங்களியி னையும் சேர்த்துக் காய்ச்சப்படுகிறது. பதப்படுத்தலுக்காக சோடியம் பென்சோயிற்சிற்றிக் அமிலம் , ஆகிய இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்படுகிறது.அதன் பின்னர் அந்தக்கலவையானது சுத்திகரிக்கப்பட்ட போத்தல்களில் இடப்பட்டு விற்பனைக்கு ஆயுத்தமாகிறது. போத்தலில் வருகின்ற கோடியலை குளிர்ந்த நீரிடன் கலந்தால் பருகுவதற்குச் சுவையான பானம் வந்துவிடும். தாகமும் தீரும் ! பனப்பழத்தின் சுவையும் பக்குவமாய் அமையும் !

  பனம்பழ ஜாம் என்பது புது வரவேயாகும். ஜாம் செய்யும் பழங்கள் பெரும்பாலும் இனிப்புச் சுவை மிக்கனவாகவே இருக்கும். பனம்பழத்திலோ ஒரு காறல் தன்மையும் இருப்பது அதன் இயல்பேயாகும். அப்படி இருக்க எப்படி ஜாமினைச் எப்படிச்  செய்ய முடியும் என்றொரு ஐயம் எழலாம் அல்லவா காறல் தன்மை இருந்தாலும் பனிரெ ண்டு தொடக்கம் பதினைந்து விகிதம் வரையான சீனியும் பனங்களியில் இருப்பது தான் ஜாம் செய்வதற்கு வாய்ப்பினை வழங்கி இருக்கிறது எனலாம்.சில பனம்பழங் களில் காறல் தன்மையானது குறைவாகவும் இருக்கும்.அவற்றை நேரடியாகவே ஜாம் செய்யப் பயன்படுத்துவார்கள். காறல் தன்மைமிக்க பனம்பழங்களின் களியின்  காறல் தன்மையினைப்போக்க  அமிலோஸ் என்னும் பதார்த்தம் பயன்படுத்தத்தப்பட்டு ஜாம் தயாரிப்பது இலகுவாக அமைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    கோடியலைவிட இன்னுமொரு வகையிலும் பனங்களி அருந்தும் பானமாய் அமை கின்றது. அதாவது இதனை பனம்பழ எசன்ஸ் என்று அழைக்கலாம். எழுபது விகிதம் கொண்ட மதுசாரத்துடன் பனம்பழச் சாற்றினை சில நாட்கள் ஊறவைத்து அதனை நீராவி முறையில் வடிகட்டி அதிலிருந்து எசன்ஸின் பிரித் தெடுக்கப்படுகிறது. இப்படி யான எசன்ஸினைப் போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் நிலையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. இவ்வகையான எசன்ஸுகள் பக்கற்றாகவும் விற்பனை செய்யக் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பனங்களியினைப் பயன்படுத்தி பனங்களித் தோசை செய்யலாம். பனங்களிப் புடிங்கும் செய்யலாம். அதுமட்டு மல்லா மல் பனங்களித் தொதுலும் செய்யலாம். அத்துடன் பனங்களியில் பாயாசமும் செய்து சுவைத்திடலாம் என்பதும் இனிப்பான செய்திகளாய் இருக்கிறதல்லவா !

  பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் பக்க பலத்துடன் பனை அபிவிருத்திச் சபையானது இந்தப் பொருட்களையெல்லாம் தரமாய்சுகாதாரமாய் யாவருக்கும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். " கற்பகம் " என்னும் பெயர் தாங்கிய வியாபார நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் - நெல்லியடிநல்லூர்சுன்னாகம்,பகுதிகளிலும் அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் காலி வீதியிலும்பத்தர முல்லையிலும்மன்னார் மாவட்டம்மட்டக்க ளப்பு மாவட்டம் திருகோணமலை வவுனியாஅம்பாறை மாவட்டங்களிலும் கற்பகத ருவாம் பனையின் பொருட்களை மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய விடயமாகும்.

இலங்கையில் பனை அபிவிருத்திச் சபையின் முன்னெடுப்பினால் பனம்பழமும் அதன் களியினால் தயாரிக்கப்பட்ட பொருட்களும் வந்தது போல் இந்தியாவிலும் ஒரு அமை ப்பினால் பனம்பழம் தொடர்பான பொருட்கள் வந்திருக்கின்றன என்று அறிந்திடக்கூடி யதாக இருக்கிறது.தமிழ்நாட்டில் மார்த்தாண்டபுரம் என்னுமிடத்தில் பால்மா என்னும் அமைப்பினைச் சேர்ந்த பெண்கள் பனம்பழத்தினைக்கொண்டு பதார்த்தங்களைச் செய் யத் தொடங்கி இருக்கிறார்கள். பனம்பழத்தில் ஜூஸ் பனம்பழத்தில் ஜாம் என்பவற் றைத் தயாரிப்பதற்கு உரிய பயிற்சிகளை அங்கிருக்கும் பால் ராஜ் என்பவர் வழங்கி வருகிறார்.இராமநாதபுரம் மன்னர் சேதுபதி பனைத்தொழில் கல்லூரி மற்றும் சுதேச பனை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பனம்பழத்தைத்தைப் பயன்படுத்திப் பல உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் தயாரிப்பதற்கான பயிற்சிப்பட்டறை களை நடத்தி வருகிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டிய செய்தியெனலாம்.

   பனம்பழத்தினைக் கொண்டு பலபதார்த்தங்கள் புதிய வரவாகவே வந்திருப்பதைப் பார்த்தோம். இவை அனைத்துமே நாங்கள் சுவைத்து மகிழ்ந்திடவே வந்திருக்கின்றன. அதேவேளை பனம்பழமானது வேறு வகையிலும் பயன்பட்டிருக்கிறது என்பதையும் தெரிந்திருப்பது நல்லதல்லவா ? பனம்பழத்தில் சவர்க்காரம், பனம்பழத்தில் ஷாம்போ பனம்பழத்தில் முகத்துக்கு பூசப்படும் வண்ணக்குழம்பு, என்றெல்லாம் வந்திருக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் பல பொருட்களுக்குப் பெருந் தட்டுப்பாடு காணப்பட்டது. அதில் சவர்க்காரமும் ஒன்றாகும். சவர்க்காரம் என்பது யாவருக்கும் மிகவும் அவசியமான தென்றாகவே இருந்தும் வரு கிறது. உடைகளைச் சுத்தமாக்கிடத் துணையாய் அமைவது சவர்க்காரம்தானே ! சவர்க் காரம் கிடைக்காத நிலையில் அதற்கு மாற்றீடாக ஒரு பொருள் அப்பொழுது வந்தது. அதுதான் பனங்களியினாலாகிய சவர்க்காரமாகும். தெரு ஓரங்களில் வைத்து யாழ் ப்பாணப் பகுதிகளில் விற்கப்பட்டதை அக்காலத்தில் அங்கிருந்தவர்கள் மறந்திருக் கவே மாட்டார்கள்.சுவைத்திட உதவிய பனம்பழம் உடையினைச் சுத்தப்படுத்தவும் உதவி நின்றது என்பது கருத்திருத்த வேண்டிய விடயமல்லவா !

 பனம்பழத்தினை நாங்கள் மட்டுமே விரும்பி நிற்கவில்லை. எங்களின் ஆடுகளும் மாடுகளுமே விரும்பி நின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.பனையால் விழுந்த பனம்பழம் வெடித்து நிலத்தில் கிடப்பதை மாடுகள் கண்டால் போட்டி போட்டுக் கொண்டு அதனைச் சுவைத்திட நிற்பதை நாமனைவருமே கண்டிருக்கிறோம். சில   வேளைகளில் ஒரு பனம்பழத்தினையே இரண்டு மாடுகள் இழுத்து முட்டி மோதிக் கொள்ளுவதையும் பார்த்தும் இருக்கிறோம். அந்த அளவுக்கு மாடுகளுக்கு மிகவும் பிடித்தமான பழமாகவே பனம்பழம் இருந்திருக்கிறது.பனம்பழத்தினை நீர்விட்டுக் கசக் கிப் பிழிந்து எடுத்து அதனுடன் சிலவேளை தவிட்டினைக் கலந்தும் கலவாமலும் ஆடு களுக்கும் மாடுகளுக்க்கும் கொடுப்பது பனம்பழக் காலங்களில்  வீடுகளில் இடம் பெற்றே வந்திருக்கிறது. ஆடுகளும் மாடுகளும் மிகவும் பிரியத்துடன் பனம்பழச் சாற் றினைச் சுவைத்து தலையினை ஒரு ஆட்டு ஆட்டி களைப்புத்தீர்ந்து விட்டது என்று தலையினை உயர்த்தி நிற்கும் நிலை இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது.

No comments: