மூன்று தீய குணங்களை வெற்றி கொண்டால் உயர்நிலையும், வெற்றிகளும் அடையலாம்

 Friday, November 5, 2021 - 12:10pm

- கந்தசஷ்டி விரதம் காட்டும் வாழ்க்கை நெறி

சந்திர மாதம் (சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொண்டது), சௌரமாதம்(சூரியன் சஞ்சரிப்பதை அடிப்படையாக கொண்டது) என இருவகையாக காணப்படுகின்றது.

கந்தசஷ்டி விரதம் சந்திர மாதத்தை அடிப்படையாகக் கொண்டு சுக்கில பட்ச (வளர்பிறை) பிரதமை தொடங்கி சஷ்டி ஈறாகிய ஆறு திதிகளும் உள்ளடக்கியதாக முருகக் கடவுளின் அருள் வேண்டி அனுஷ்டிக்கும் விரதமாகும். சப்தமி திதியில் பாரணை செய்து விரதத்தை முடித்தல் வேண்டும்.

முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் புரிந்து வந்த சூரபத்மனை அவர் சங்காரம் செய்த நாள் கந்தசஷ்டி என்று அழைக்கப்படுகிறது. 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசங்காரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும்.

மேற்படி கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்பமாக ஐப்பசி மாதத்தில் வரும் கிருத்திகா(கார்த்திகை)சுத்தப் பிரதமையைத்தான் கொள்ள வேண்டும் என்பதே ஆகம அம்சமாகும். கிருத்திகா சுத்தப் பிரதமையில் தொடங்கி சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். கந்தசஷ்டி விரதத்தைப் பொறுத்தவரையில் பாறணையும் அவசியமானது என கந்தபுராணம் கூறுகிறது. சஷ்டி முடிந்து மறுநாள் காலை வரும் சப்தமி திதியில் விரதம் முடித்துப் பாறணை செய்தல் வேண்டும்.

குறித்த விரதங்களை குறித்த காலங்களில் அனுஷ்டித்தால் அதற்கான பயன் அதிகம் என்பதால், விரதங்களை எப்போது கடைப்பிடிக்க வேண்டும் எனும் காலநிர்ணயம் ஞானிகளால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்களிலில் உள்ள கணிப்பு வேறுபாடுகள் வழமை போல கந்த சஷ்டி விரதகால, சூரன் போர் நடக்கும் திகதியிலும் குழப்பத்தை எற்படுத்தியுள்ளன.

எனவே சஷ்டி திதி ழுழுவதும் விரதம் அனுஷ்டிக்கவும், சஷ்டிதிதி உள்ள மாலை வேளையில் சூரசங்சாரம் நடத்தவும் உகந்த தினமாக 09 .10. 2021 செவ்வாய்க்கிழமையே அமைவதோடு, இரண்டு நாட்களில் திதி நிற்குமாயின் இரண்டாம் நாள் திதிமுடியும் வரை விரதம் இருந்து சப்தமி வரும் மூன்றாம் நாளில் பாறணை இயற்றுவதற்கும் பொருத்தமாக அமையும் என ஒருசாரார் கருதுகின்றனர். நவம்பர் 05 இலும் சுத்த பிரதமை திதி அமையாதபடியினால் இந்தியாவில் உள்ள சில பஞ்சாங்கங்களின்படி பிரதமைத் திதி தொடங்கும் நவம்பர் 4 ஆம் திகதியே கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்கும் நாளாக நிர்ணயிக்கப்பட்டு நவம்பர் 09 திகதி சூரசங்காரமும் 10 ஆம்திகதி சஷ்டி விரதமும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூரிலும் நவம்பர் 09 ஆம் திகதியேதான் சூரன் போர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள இரு பஞ்சாங்களின்படியும் 10ஆம் திகதியை விட 09ஆம் திகதியே சஷ்டி திதி அதிகநேரம் வியாபித்துள்ளது. எனவே அன்றைய தினமே சூரன் போரும், சஷ்டிவிரதமும் அமைவது பொருத்தமாகும்.

மனிதனுள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று தீய குணங்களின் அடையாளங்களை நாம் வெற்றி கொண்டால் உயர்நிலையையும் வெற்றிகளையும் அடையலாம் என்பது சூரசங்காரம் காட்டும் நெறியாகும்.

வழமை போல இலங்கையில் வாழும் சைவத் தமிழ் மக்கள் பஞ்சாங்கங்களின் கணிப்பு வேறுபாட்டால் கந்தசஷ்டி விரத காலம் தொடர்பான குழப்பங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடும். விரதகால வரையறைகள் இருவகைப்பட்டனவாக உள்ளன. சில விரதங்கள் திதிகளை அடிப்படையாகக் கொண்டும், வேறு சில நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டும் வரையறுக்கப்படுகின்றன. இத்திதிகளும் நட்சத்திரங்களும் அமையும் மாதங்கள் வருமாறு:

ஆ. இளங்கோ
ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்
டச்சு வீதி, அளவெட்டி

நன்றி தினகரன் 

No comments: