மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... ஆஸ்திரேலியா
அரக்கரை அழித்தாய் அருளையும் கொடுத்தாய்
முரணுடைய மனத்தை பொரிதிடும் குணத்தை
கறையுடை வாழ்வினைக் களைந்திடச் செய்தாய் !
உருகிடும் அடியார் உளமுறை முருகா
மருளவே நோய்கள் மாநிலம் பெருகுது
மடிகிறார் பலபேர் மயங்கிறார் தினமும்
கருணையின் உருவே கடைக்கண் காட்டு !
நரபலி எடுத்திடும் நாடகம் நடத்திறார்
நயமுடன் நடப்பதை நாளுமே மறக்கிறார்
பக்தியின் பக்கமே வந்திட மறுக்கிறார்
விளையாட்டுப் பாலகனாய் பழமுதிர்த்தும் நின்றாய்
ஒளைக்குத் தத்துவத்தை அருமையாய் உரைத்தாய்
ஆறுபடை வீட்டைத் தேர்ந்தெடுத்தாய் முருகா !
மாறுபடு சூரர்தமை வழிக்குவரச் செய்தாய்
மயில்சேவ லாக்கியே மாற்றுவழி கண்டாய்
மாறுபடு மனமுடையோர் வாழுகிறார் நிறைந்து
மனம்மாற்ற மயிலுகந்து வந்திடுவாய் முருகா !
கர்மவினை அகன்றோட காலடியை நாடுகிறோம்
நித்தமுமே உன்வாசல் நாடியே வருகின்றோம்
நிட்டூரம் வாராமல் நீகாப்பாய் முருகா !
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார் உலகில்
கூடாத கூட்டமதைக் கூட்டுகிறார் நிதமும்
கோணாத மனமதனை கொடுத்தவர்க்கு முருகா
வாணாளில் நல்வழியைக் காட்டிடுவாய் மருகா !
No comments:
Post a Comment