.
01.10.2021` வெள்ளிக்கிழமை இரவு தமிழ்முரசு அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சமூகத்தொண்டன் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களின் 75 வது அகவை பாராட்டு நிகழ்வை ஈழா 75 என்று zoom இணையவழி நிகழ்வாக எடுத்து வந்தது .
சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையில் இருந்து பேராசிரியர் அ .சண்முகதாஸ் வாழ்நாள் பேராசிரியர் யாழ் பல்கலைக் கழகம் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அறநெறித் தொண்டர் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ,திரு ராமகிருஷ்ணன் செயலாளர் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலனசபை ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இதைத்தவிர இலங்கையில் இருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல பிரமுகர்கள், நண்பர்கள், சமூகத்தொண்டர்கள் கலந்து வாழ்த்தியும் உரையாற்றியும் இருந்தார்கள். இரண்டரை மணிநேரம் இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது.
பலர் உரையாற்றும்போது ஈழா தனிமனிதன் அல்ல ஒரு சமூகத்துக்கான மனிதன் என குறிப்பிட்டு கூறியிருந்தார்கள்.
No comments:
Post a Comment