கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பத்து ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

   கற்பகதருவாம் பனையின் ஓலைகள் எப்படி எழுத்துக்களைச்


சுமந்து பயனளித்து வந்தது என்னும் வரலாற்றைப் பார்த்தோம். ஏட்டுச் சுவடி களாய் மாறி எல்லோர் மனத்திலும் அமர்ந்துவிட்ட பனை ஓலையின் பல பரிமாணங்களையும் பார்ப்பதும் அவசியம் அல்லவா ! பனை ஓலை என்ற வுடன் அதனைச் சாதாரணமாக எடுத்து விடவே கூடாது.அதன் பயன்பாடு என்பது பல நிலைகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதழ்கூந்தல்மடல்மாழைஎன்னும் பெயர்களையும்  பனை ஓலை தாங்கி நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

   பனையின் ஓலைகளை குருத்தோலை என்கிறோம்.காவோலை என்கி றோம். வற்றோலை என்கிறோம். முந்தல் ஓலை என்கிறோம்.இளம் பனையினை வடலி என்கிறோம். இதன் ஓலைகளை வடலி ஓலைகள் என்றே அழைக்கிறோம்..இவை ஒவ்வொன்றுமே பயனை நல்கிடும் வகை யில்த்தான் அமைந்திருக்கின்றன என்பதையும்  கருத்திருத்தல் நலமே யாகும்.பனை ஓலைக்கு தாளீபலாசம் என்றும் பெயர்  இருக்கி றது.பனை ஓலையினை மடித்துக் காதிலும் அணிந்திருக்கிறார்கள்.காதோலை என்னும்  பெயர் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் ஓலையாக அல்லாமல் தங்கமாயும் பொன்னாகியும் ஆபரணங்களாய் மாறிய நிலையினையே இன்று காண்கின்றோம்  எது எப்படி மாறினாலும் காதோலை என்னும் சொல்லில் மட்டும் மாற்றம் வரவில்லை என்பதுதான் முக்கியமாகும். பனை ஓலை காதில் அணியும் நிலையில் இருந்திருக்கிறது. அதே ஓலை தான் பிற்காலத்தில் நாம் முக்கியமாகப் பயன்படுத்தும் மாங்கல்யம் என்னும் தாலிக்கும் வித்தாகும் என்பதையும் கருத்திருத்தல் அவசிய மேயாகும்.

    பனையில் ஓலைகள் எப்படி வளருகின்றன


தெரியுமா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஓலை என்ற படி முறையில்த்தான் பனையில் ஓலைகள் வந்து சேருகின்றன. வளரும் நிலையில் இருக்கின்ற இளம் பனைக்கு வடலி என்று சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைத்து வருகி றோம்.குருத்தோலையாக வருகின்ற நிலையில் அதன் நிறம் இளம் மஞ்சளாகவே இருக்கும்.வளர்ந்த குருத்தோலை விரிந்து அகலமாக காட்சிதரும் பொழுது அதனை சாரோலை என்னும் பெயர் கொண்டு அழைக்கிறோம் . குருத்தோலையும்.  சாரோலையும்  , மென்மை யான தாகவும்இளம் மஞ்சளாகவும் காட்சிதரும். முற்றிய ஓலைகள் நல்ல கரும் பச்சையாகவும் அதன் மட்டைகள் இளம் பச்சை நிறத்திலும் அமைந்து காணப்படும். முற்றிய ஓலைகளின் மட்டைகளின் ஓரங்களில் கறுத்த நிறத்திலான வாள்போன்ற கருக்குகள் அமைந்திருக்கும்.முற்றிய ஓலைகளை வெட்டும்

பொழுது - குருத்தோலைகளையும் வெட்டுவார்கள். முற்றிய ஓலைகளை ஒரு பக்கமாயும் 
குருத்தோலைகளை ஒரு பக்க மாகவும் எடுத்து வைப்பது வழக்கமாய் இன்னும் இருந்து கொண்டே வரு கிறது. குருத்தோலைகள் மிகவும் கவனாமாய் பார்க்கப்படுகின்றன. முற்றிய ஓலைகளுக்கு -  குருத்தோலைகளுக்குக் காட்டும் கரிசனை அவ்வளவு காட்டப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குருத்தோலைதான் கைத் தொழிலுக்கு பல வகைகளில் கைகொடுக்கும் வகையில் முன்னிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது எனலாம்.

  பனை ஓலை குடியிருக்கும் வீட்டின் கூரையாய் அமைந்து -


குளிரிலும்வெப்பத்திலும்மழையிலும் இருந்து காத்து வந்திருக்கிறது.பனை ஓலை களைக் கொண்டே வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சுவராக்கியும் மக் கள் வாழ்ந்து வந்தார்கள். மாடி வீடுகளும் ஆடம்பர வீடுகளும் இப்போது எங்கும் பல்கிப் பெருகி இருக்கும் வேளை - பனையின் ஓலைகளால் ஆன வீடுகளைக் காண்பதும் பெரும் அதிசயமாகவே தென்படும். நவீனம் புகுந்து விடாத ஒதுக்குப் புறமான கிராமங்களில் பனை ஓலை என்பது வீட்டின் கூரையாய் இருப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. நவீன தற் காலத்து வீடுகளைச் சுற்றி பலவிதத்தில் மதிற்சுவர்கள் கட்டப்படுகின்றன. பழைய ஓலைக்குடிசை வீடுகளின் காவல் அரணாக அமைந்த வேலிகள் பனையின் ஓலை கொண்டுதான் அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல சில கல் வீடுகளின் பாதுகாவலனாக பனை ஓலை வேலிகளே இருந்தன என் பதும் நோக்கத்தக்கதாகும்.பனை ஓலைக் கூரைதாங்கிய  குடிசை வீடு களில் இருக்கின்ற மக்களிடம் காணப்படுகின்ற நல்ல உணர்வுகளை - நவீன மாடி வீடுகளில் வாழுகின்றவர்கள் மத்தியில் தேடித்தான் பிடிக்க வேண்டிய நிலையே இன்று காணப்படுகிறது எனலாம்.

  பனை ஓலை வாழ்க்கையோடு பல விதங்களில் பிணைந்தே


இருக்கிறது என்பதுதான் உண்மை. இருக்கும் வீட்டின் கூரையாய் அமைந்ததோடு - வீட்டுக்குரிய பாவனைப் பொருட்களாயும் விவசாயத்துக்குரிய பயனான பொருட்களாயும் ஆகி இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே எனலாம்.ஓலைப் பெட்டிகள் என்னும் நிலையில் பலவகை வடிவங்கள். அந்த வடிவங்களுக்கென்றே பல அழகான பெயர்கள்.கண்ணக் கவரும் வித த்தில் பல வண்ணங்களில் விதம்விதமான பொருட்கள்.அன்றாடம் சமை யல் பகுதியில் பயன்படுத்துவதற்கு என்று விசேட பொருட்கள்.அலங்காரம் செய்வதற்கான அழகொளிரும் பல பொருட்கள் என்று பனை ஓலை பல பரிணாமங்களை எடுத்திருக்கிறது என்பதையும் கருத்திருத்தல் அவசிய மாகும்.

  இடியப்பத் தட்டு,நீத்துப்பெட்டிசுளகுடகம்அடுக்குப் பெட்டி மூடற் பெட்டிசரக்குப்பெட்டி,சுத்து


ப்பெட்டிதட்டுப்பெட்டி,சாமத்தியப் பெட்டி, கொட்டைப் பெட்டி,கட்டுப்பெட்டி,அர்ச்சனைப் பெட்டிபாய்தடுக்குகளப்பாய்வட்டச்சுளகுபூக்கூடைதையல் பெட்டிகைப்பைபனை ஓலை சுவர் மாட்டிவிசிறிவிளையாட்டுப் பொருட்கள் என்று பனை ஓலை பல நிலைகளில் பயனாகி நிற்கிறது என்பதை மறுத்துவிட முடியுமா நினை த்துப் பாருங்கள் !

  பனை ஓலையினை மூலப் பொருளாகக் கொண்டு கைத்தொழில்கள் ஆர ம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதன் பயனாக பலரும் பயன் பெற்றும் வரு கிறார்கள். கைத்தொழிலுக்குப் பனையின் ஓலைகள் கைகொடுத்து உதவுங் காரணத்தால் கற்பகதருவாம் பனைபற்றிய கரிசனை யாவரிடமும் ஏற்பட் டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  பனை ஓலையினைக் கொண்டு பலவித பொருட்கள் செய்யும் தொழி லானது இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்று வருகிறது. நிறுவன ரீதியாகாவும்குடும்பமாகவும் , பனை ஓலை தொடர்பான தொழி லும் அது சார்ந்த உற்பத்திகளும் இடம் பெற்று வருகின்றன என்பதும் குறி ப்பிடத்தக்கது.குடும்பமாகச் செய்யும் நிலையானது அவர்களுக்கான வாழ் வாதாரத்தை வளம்படுத்த பெரிதும் பலனை நல்காவிட்டாலும் அவர்கள் கிடைக்கும் வருமானத்துக்காக பனை ஓலை சார்ந்த தொழிலினைச் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் எண்ண முடிகிறது. போதிய சந்தை வாய்ப்புகள் அவர்களுக்கு வாய்க்கு மானால் அவர்களின் வாழ்வும் வசந் தமாகும்.

  பனை ஓலையினை எடுத்த எடுப்பில் தொழிலுக்குப் பயன்படுத்தி விட முடியாது.குருத்தோலைகளைக் கவனமாக எடுத்து அவற்றைக் காய வைத்தல் வேண்டும். வெய்யிலில் காய வைக்கும் பொழுதும் அதனை பதமாக வரும் நிலையில் காயவிடுதல் முக்கியமாகும். மிகக் காய்ந்து விடின் கைவேலையின் போது ஓலைகள் முறியவும் உடையவுமான  நிலை வந்துவிடும்.ஆகையால் ஓலையின் பதப்படுத்தலில் கவனம் மிகவும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது.

  ஓலைகளைப் பதமாக எடுத்தபின் அவற்றுக்குச் சாயம் இடும் ஒரு நிலையும் இருக்கிறது. கோழிச்சாயம் என்பதை பலரும் பயன்படுத்தி வந்தே இருந்திருக்கிறார்கள். ஓலைகளுக்கான சாயங்கள் - பச்சைசெம் மஞ்சள்மஞ்சள்சிவப்பு என்னும் வகையிலேயே அதிகம் பயன்படுத்த ப்பட்டிருக்கின்றன. எந்த எந்த நிறம் தேவையோ அந்த அந்த நிறத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவார்கள். ஓலையில் சாயம் இடுவதை மிகவும் கவனமாகச் செய்தல் வேண்டும்.அதற்கு நல்ல அனுபவமும் தேவை ப்படுகிறது. பாயிழைக்கும் வேளை அதற்குப் பொருத்தமான நிறத்தைப் பயன் படுத்துவார்கள். பெட்டிகள் இழைக்கும் வேளை அதற்கு இயைபான வர்ணங்களையும் பயன் படுத்துவார்கள். பல வித வடிவங்களில் அலங் காரப் பூக்களையும்  பூங்கொத்துக்களையும் பனை ஓலையினால் இப்போது செய்கிறார்கள். அவ்வாறு செய்யப்படுகின்ற பல வர்ணங்களில் அமைந்த பூக்கள் எல்லாம் பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கும் கலை நயத்துடன் அமை ந்தே காணப்படுகின்றன. பல வண்ணங்களில் செய்யப்படுகின்ற பனை ஓலையினாலாகிய பூக்களும் பூக்கொத்துக்களும் என்றுமே வாடாத பூக்க ளாய்  அழகுடன் காட்சி அளித்துக்கொண்டே இருக்கும் என்பதைக் கருத் திருத்தல் வேண்டும்.

     பனை ஓலையினைக் கொண்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. தொப்பிகள் செய்யப்படுகின்றன. பூந்தொட்டிகளாகவும் பயன்படும் வகையிலும் பனை ஓலைகொண்டு பல வடிவங்களில் பல பொருட்கள் பழக்கத்துக்கும் வந்திருக்கின்றன. பூச்சாடிகள்பெரிய கூடைகள்என்றும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திரு ப்பதும் நோக்கத்தக்கது. பின்னல் வகையிலும் பொருட்கள் பல செய்து பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.பல வர்ணங்களை சேர்த்து சாதாரண பின்னல்களில் அலங்காரப் பொருட்கள் வந்திருக்கின்றன. அதே வேளை விசேட முறையில் - வாழை முடிச்சுப்பின்னல்கன்னி முடிச்சுப்பின்னல் என்னும் பின்னல் முறையிலும் வர்ணங்கள் பல இணைய பனை ஓலை அலங்காரப் பொருட்கள் சந்தைக்கு வந்திருப்பதும் கருத்திருத்த வேண் டியதே.

 பனையில் ஓலையை வெட்டுவதற்கும் கால அளவும் மாதமும் இருக்கிறது. பனையின்  ஓலைகள் மாதத்துக்கு ஒன்றாகவே வளரு கின்றன என்பதைப் பார்த்தோம் எந்த நாளும் பனையில் ஓலை களை வெட்டிவிடல் என்பது பொருந்தி வரமாட்டாது. பங்குனி தொடங்கி ஐப்பசி மாதம்தான் பனையில் ஓலைகளை வெட்டுவதற்கு உகந்த மாதங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும்  ஓலை களை வெட்டுவது என்பதும் கஷ்டமாகும்.இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்பதே பொருத்தமாய் அமைகிறது என்பதும் கவனத்த க்குரியதாகும்.

முற்றிய பனைக்கும் முற்றாத பனைக்கும் ஓலை வெட்டுவதிலும் விதி முறைகள் இருக்கின்றன. இளம் பனைகளில் குறைந்த ஓலை களை -  அதாவது பத்து அல்லது பனிரெண்டு ஓலைகளைத்தான் வெட்டுவார்கள். முற்றிய பனையில் வெட்டும் போதும் பனையினை முற்று முழுதாக மொட்டை அடித்து விடமாட்டார்கள்.

      முற்றிய பனைகளில் ஓலைகளை வெட்டும் பொழுது பத்து ஓலைகளையாவது பனையில் விட்டே வெட்டுவதுதான் வழக்கமா கும்.பதநீர் என்பதும் பனையின் கொடையாகும். பதநீருக்கு என்று விடப்படும் பனைகளில் ஓலைகளை வெட்டும் போது அவதானமா கவே வெட்டுவார்கள். ஓலை என்பது பனையின் மிகவும் முக்கிய பாகமாகும். வெட்டினால் வளருந்தானே என்று எண்ணி ஓலைகள் முழுவதையும் ஒரேயடியாக வெட்டி விடுவோமேயானால் பனை யினின்றும் எந்தப்பலனையும் பெற்றுவிட முடியாதவர்கள் ஆகியே விடுவோம். பனையானது தனது உணவினைத் தயாரிக்க ஓலை களைத்தான் நம்பி இருக்கிறது. பனையினை மொட்டை அடித்தால் பனையின் உணவுத் தயாரிப்பு நின்றுவிடும். நின்றுவிட்டால் பனை யின் கதி அதோ கதிதான் ! ஆன படியால்த்தான் ஓலை வெட்டு வதிலும் சிறந்த கவனம் செலுத்தப்படுகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும்.பனையின் பச்சை ஓலைகளை வெட்டும் பொழுது காய்ந்த ஓலைகளும் பழுத்த ஓலைகளும் கூடவே பனையில் இருக்கும். அவற்றைக் கட்டாயம் வெட்டிவிடவே வேண்டும்.அப்படி வெட்டி விடும் பொழுது அது பனையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாய் இருக்கிறது என்பதும் கவனத்துக்குரியதேயாகும்.


       " வன்னக் குருத்தில் வடிவாகச் செய்கின்ற

          பன்னவகை இன்னவெனப் பன்னரிதால் - அன்னவை

          புத்தகப் பெட்டி புகல்கட்டுப் பெட்டி பல

          வித்தகப் பெட்டி மிகு குட்டான் - வைத்த

          கடகம் பத்தாயம் கதிர்ப்பாய் கிடையாய்

          திடமாம் உமலளவு சேர்கள் - கடவுட்டிரு

          நீறிடுங் குட்டான்கள் நீரிறைக்கும் பட்டைவகை "

 

          பிள்ளைவிளை யாடுபொருட் பேதமாங் -

             சுரையுண் பிழாவுமாஞ் சோறுண் கலமாம்

              நிரையூணு மாகவே நேர்வ - ருரையோலை

              ஈர்க்கினுறி யீர்வாணி யேற்றசட்டி பானைகளைச்

              சேர்குமணை தட்டு முறஞ் செய்யலாம் "

         

              " ஓவிய மோடுயர் காவிய மானவை

                யாவையு மெழுதி வைக்கலாம் - வீடு

                வேயலாம் வேலியடைக்கலாம் வரும்

                வியர்வை யகற்றி விசிறியதைப் பல

                விநோதம தாயே படைக்கலாம் "


No comments: