இலங்கைச் செய்திகள்

உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி கலாபூஷணம் சிதம்பரநாதன் காலமானார் 

இலங்கையில் ஊரடங்கு செப்டெம்பர் 13 வரை மேலும் 7 நாட்கள் நீடிப்பு

நயினாதீவு உற்சவம் இவ்வருடம் இல்லை

அரசிலிருந்து விலகும் எந்த முடிவும் இல்லை

மேலும் 145 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 9,951 கொவிட் மரணங்கள்

யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி

சிறப்பாக செயற்படும் எம்.பியாக சாணக்கியன்உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி கலாபூஷணம் சிதம்பரநாதன் காலமானார் 

உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி   சிதம்பரநாதன் நேற்றுக் காலமானார்.  அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன்,  தவிற்காரர் செல்லத்துரையின்  மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார்.

அதன் மேல் இந்தியாவுக்குச் சென்று பிரபல வித்துவான்களிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார்.

இவர் தமது மாமனாராம் தவிற் கலைஞர் கணேசரத்தினத்தின் வழிகாட்டலில் வருடந் தோறும் அவர் அழைப்பின் பேரில் அவருடன் வந்து தங்கும் வெளியூர்க் கலைஞர்களிடமும் இசைப் பயிற்சி பெற்றார். இவருக்கு இசைத் துறையிற் கேள்வி ஞானம் பெற்றுயர மாமனார் கணேசரத்தினத்தின் உதவி பெரிதும் பயன் பட்டது. நாதஸ்வரக் கலையரசு பத்மநாதன் ஒரு இசைக்குழுவை அமைத்து பயன் பெரிதும் பெற்றது போல இவரும் தாமாக ஒரு இசைக் குழுவை அமைத்தார். அக்குழுவில் தமது சகோதரனாகிய சிவகுருநாதனையும் இணைத்து பல வருடங்களாக இசைக்கலையை நன்கு வளர்த்தார். இவர் விடாமுயற்சியும் கடின உழைப்பும் உள்ளவராதலினால் இவர் முன்னேற முடிந்தது. நாதஸ்வர இளந்தென் றல் என்ற பட்டத்தை இவர் தமது இளமைக்கா லத்திலேயே பெற்று விட்டார். வயது வந்து பெருங் கலைஞராக மாறியபோது இவருக்கு நாதஸ்வரகானவாருதி என்ற பட்டங்கிடைத்தது. இவர் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் பிர பல இசை மேதையாகக் கணிக்கப்பட்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங் கப்படும் கலைஞர்களுக்கான கலாபூஷண விரு தினையும் சிதம்பரநாதன் பெற்றுக்கொண் டார். இவரது மகன் இளவல் ஜலதரன் வயலின் வாத்தியக் கருவியை இந்திய இசைக்கல்லூரிகளில் கற்று இன்று பலராலும் பாராட்டப்படும் இசை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

இலங்கையில் ஊரடங்கு செப்டெம்பர் 13 வரை மேலும் 7 நாட்கள் நீடிப்பு

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

இன்று (03) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 ஜனாதிபதி செயலணி கூட்டத்தை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், தடுப்பூசி செலுத்துவதில் மேலும் முன்னேற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இக்காலப் பகுதியில் தடுப்பூசி செலுத்தாதோர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எப்போதும் முகக்கசவசத்தை அணியுமாறும், வீட்டிலேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

நயினாதீவு உற்சவம் இவ்வருடம் இல்லை

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், இவ்வருடம் நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.  வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய, வருடாந்த மஹோற்சவம் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருந்தது. கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக செப்ரெம்பர் 06 ஆம் திகதிக்கு திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதும் நாட்டில் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம் மாதம் 06ஆம் திகதி மஹோற்சவத்தை நடத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இதனால் இவ் வருட மஹோற்சவம் கொவிட்19 தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 
அரசிலிருந்து விலகும் எந்த முடிவும் இல்லை

எடுக்கப்படவுமில்லை என்கிறார் மைத்திரி

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கப் போவதாக கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பேராசிரியர் ரோஜர் லக்ஷ்மன் பியதாச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70ஆவது வருட நிறைவு நினைவு கூறப்படும் நிலையில் நேற்றைய தினம் பொலநறுவையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் லக்ஷ்மன் பியதாச கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  - நன்றி தினகரன் 

மேலும் 145 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 9,951 கொவிட் மரணங்கள்

மேலும் 145 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 9,951 கொவிட் மரணங்கள்-145 More COVID19 Related Deaths Reported-Increasing Total Deaths in Sri Lanka to 9951

- சுமார் ஒரு மாதத்தின் பின் 150 இற்கு குறைவான மரணங்கள் பதிவு
- 77 ஆண்கள், 68 பெண்கள்
- 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 117 பேர்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 145 மரணங்கள் நேற்று (03) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 9,604 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 145 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 9,806 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 145 பேரில், 77 பேர் ஆண்கள், 68 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 117 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு பின்னர் (124) சுமார் ஒரு மாதங்களின் பின் நேற்றையதினம் (03) இலங்கையில் 150 இற்கும் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளன.

மரணமடைந்தவர்கள் - 9,951
செப்டெம்பர் 03 - 145 பேர் (9,951)
செப்டெம்பர் 02 - 202 பேர் (9,806)

செப்டெம்பர் 01 - 204 பேர் (9,604)
ஓகஸ்ட் 31 - 215 பேர் (9,400)
ஓகஸ்ட் 30 - 194 பேர் (9,185)

ஓகஸ்ட் 29 - 216 பேர் (8,991)
ஓகஸ்ட் 28 - 192 பேர் (8,775)
ஓகஸ்ட் 27 - 212 பேர் (8,583)
ஓகஸ்ட் 26 - 214 பேர் (8,371)
ஓகஸ்ட் 25 - 209 பேர் (8,157)

ஓகஸ்ட் 24 - 198 பேர் (7,948)
ஓகஸ்ட் 23 - 190 பேர் (7,750)
ஓகஸ்ட் 22 - 194 பேர் (7,560)
ஓகஸ்ட் 21 - 183 பேர் (7,366)
ஓகஸ்ட் 20 - 198 பேர் (7,183)
ஓகஸ்ட் 19 - 195 பேர் (6,985)
ஓகஸ்ட் 18 - 186 பேர் (6,790)
ஓகஸ்ட் 17 - 170 பேர் (6,604)
ஓகஸ்ட் 16 - 171 பேர் (6,434)
ஓகஸ்ட் 15 - 167 பேர் (6,263)
ஓகஸ்ட் 14 - 161 பேர் (6,096)
ஓகஸ்ட் 13 - 160 பேர் (5,935)
ஓகஸ்ட் 12 - 155 பேர் (5,775)
ஓகஸ்ட் 11 - 156 பேர் (5,620)
ஓகஸ்ட் 10 - 124 பேர் (5,464)
ஓகஸ்ட் 09 - 118 பேர் (5,340)
ஓகஸ்ட் 08 - 111 பேர் (5,222)
ஓகஸ்ட் 07 - 94 பேர் (5,111)
ஓகஸ்ட் 06 - 98 பேர் (5,017)
ஓகஸ்ட் 05 - 98 பேர் (4,919)
ஓகஸ்ட் 04 - 94 பேர் (4,821)
ஓகஸ்ட் 03 - 82 பேர் (4,727)
ஓகஸ்ட் 02 - 74 பேர் (4,625)
ஓகஸ்ட் 01 - 63 பேர் (4,571)
ஜூலை 31 - 67 பேர் (4,508)
ஜூலை 30 - 61 பேர் (4,441)
ஜூலை 29 - 56 பேர் (4,380)
ஜூலை 28 - 66 பேர் (4,324)
ஜூலை 27 - 63 பேர் (4,258)
ஜூலை 26 - 48 பேர் (4,195)
ஜூலை 25 - 48 பேர் (4,147)
ஜூலை 24 - 45 பேர் (4,099)
ஜூலை 23 - 52 பேர் (4,054)
ஜூலை 22 - 43 பேர் (4,002)
ஜூலை 21 - 42 பேர் (3,959)
ஜூலை 21 - 47 பேர் (3,917)
ஜூலை 19 - 43 பேர் (3,870)
ஜூலை 18 - 48 பேர் (3,827)
ஜூலை 17 - 46 பேர் (3,779)
ஜூலை 16 - 31 பேர் (3,733)
ஜூலை 15 - 41 பேர் (3,702)
ஜூலை 14 - 50 பேர் (3,661)
ஜூலை 13 - 37 பேர் (3,611)
ஜூலை 12 - 41 பேர் (3,574)
ஜூலை 11 - 31 பேர் (3,533)
ஜூலை 10 - 35 பேர் (3,502)
ஜூலை 09 - 33 பேர் (3,467)
ஜூலை 08 - 43 பேர் (3,434)
ஜூலை 07 - 40 பேர் (3,391)
ஜூலை 06 - 38 பேர் (3,351)
ஜூலை 05 - 45 பேர் (3,313)
ஜூலை 04 - 32 பேர் (3,268)
ஜூலை 03 - 45 பேர் (3,236)
ஜூலை 02 - 34 பேர் (3,191)
ஜூலை 01 - 37 பேர் (3,157)
ஜூன் 30 - 43 பேர் (3,120)
ஜூன் 29 - 47 பேர் (3,077)
ஜூன் 28 - 45 பேர் (3,030)
ஜூன் 27 - 41 பேர் (2,985)
ஜூன் 26 - 39 பேர் (2,944)
ஜூன் 25 - 43 பேர் (2,905)
ஜூன் 24 - 48 பேர் (2,862)
ஜூன் 23 - 45 பேர் (2,814)
ஜூன் 22 - 65 பேர் (2,769)
ஜூன் 21 - 71 பேர் (2,704)
ஜூன் 20 - 52 பேர் (2,633)
ஜூன் 19 - 47 பேர் (2,581)
ஜூன் 18 - 54 பேர் (2,534)
ஜூன் 17 - 55 பேர் (2,480)
ஜூன் 16 - 51 பேர் (2,425)
ஜூன் 15 - 59 பேர் (2,374)
ஜூன் 14 - 55 பேர் (2,315)
ஜூன் 13 - 57 பேர் (2,260)
ஜூன் 12 - 67 பேர் (2,203)

ஜூன் 11 - 15 பேர் (2,136)
ஜூன் 10 - 15 பேர் (2,125)
ஜூன் 09 - 21 பேர் (2,110)
ஜூன் 08 - 34 பேர் (2,089)
ஜூன் 07 - 50 பேர் (2,055)
ஜூன் 06 - 63 பேர் (2,005)
ஜூன் 05 - 37 பேர் (1,942)
ஜூன் 04 - 44 பேர் (1,905)
ஜூன் 03 - 44 பேர் (1,861)
ஜூன் 02 - 47 பேர் (1,817)
ஜூன் 01 - 52 பேர் (1,770)
மே 31 - 57 பேர் (1,718)
மே 30 - 48 பேர் (1,661)
மே 29 - 42 பேர் (1,613)
மே 28 - 42 பேர் (1,571)
மே 27 - 47 பேர் (1,529)
மே 26 - 42 பேர் (1,482)
மே 25 - 42 பேர் (1,440)
மே 24 - 35 பேர் (1,398)
மே 23 - 41 பேர் (1,363)
மே 22 - 38 பேர் (1,322)
மே 21 - 32 பேர் (1,284)
மே 20 - 56 பேர் (1,252)
மே 07 - மே 20: 37 பேர் (1,196)

மே 19 - 45 பேர் (1,159)
மே 18 - 26 பேர் (1,114)
மே 17 - 53 பேர் (1,088)
மே 16 - 37 பேர் (1,035)
மே 15 - 23 பேர் (998)
மே 14 - 23 பேர் (975)
மே 13 - 28 பேர் (952)
மே 12 - 23 பேர் (926)
மே 11 - 28 பேர் (903)
மே 10 - 22 பேர் (875)
மே 09 - 24 பேர் (853)
மே 08 - 26 பேர் (829)
மே 07 - 15 பேர் (803)
மே 06 - 22 பேர் (788)
மே 05 - 14 பேர் (766)
மே 04 - 19 பேர் (752)
மே 03 - 13 பேர் (733)
மே 02 - 13 பேர் (720)
மே 01 - 07 பேர் (707)
ஏப்ரல் 30 - 15 பேர் (700)
ஏப்ரல் 29 - 07 பேர் (685)
ஏப்ரல் 28 - 07 பேர் (678)
ஏப்ரல் 27 - 06 பேர் (671)
ஏப்ரல் 26 - 06 பேர் (665)
ஏப்ரல் 25 - 07 பேர் (659)
ஏப்ரல் 24 - 03 பேர் (652)
ஏப்ரல் 23 - 06 பேர் (649)
ஏப்ரல் 22 - 04 பேர் (643)
ஏப்ரல் 21 - 03 பேர் (639)
ஏப்ரல் 20 - 04 பேர் (636)
ஏப்ரல் 19 - 04 பேர் (632)
ஏப்ரல் 18 - ஒருவர் (628)
ஏப்ரல் 17 - 04 பேர் (627)
ஏப்ரல் 16 - 04 பேர் (623)
ஏப்ரல் 15 - 03 பேர் (619)
ஏப்ரல் 14 - 05 பேர் (616)
ஏப்ரல் 13 - 00 பேர் (611)
ஏப்ரல் 12 - 03 பேர் (611)
ஏப்ரல் 11 - 05 பேர் (608)
ஏப்ரல் 10 - 03 பேர் (603)
ஏப்ரல் 09 - 00 பேர் (600)
ஏப்ரல் 08 - 04 பேர் (600)
ஏப்ரல் 07 - 00 பேர் (596)
ஏப்ரல் 06 - 03 பேர் (596)
ஏப்ரல் 05 - 02 பேர் (593)
ஏப்ரல் 04 - 05 பேர் (591)
ஏப்ரல் 03 - ஒருவர் (586)
ஏப்ரல் 02 - 03 பேர் (585)
ஏப்ரல் 01 - 05 பேர் (582)
மார்ச் 31 - 06 பேர் (577)
மார்ச் 30 - 00 பேர் (571)
மார்ச் 29 - ஒருவர் (571)
மார்ச் 28 - 03 பேர் (570)
மார்ச் 27 - 00 பேர் (567)
மார்ச் 26 - 00 பேர் (567)
மார்ச் 25 - 02 பேர் (567)
மார்ச் 24 - 04 பேர் (565)
மார்ச் 23 - 00 பேர் (561)
மார்ச் 22 - 04 பேர் (561)
மார்ச் 21 - 02 பேர் (557)
மார்ச் 20 - 00 பேர் (555)
மார்ச் 19 - ஒருவர் (555)
மார்ச் 18 - 02 பேர் (554)
மார்ச் 17 - 03 பேர் (552)
மார்ச் 16 - 04 பேர் (549)
மார்ச் 15 - ஒருவர் (545)
மார்ச் 14 - 04 பேர் (544)
மார்ச் 13 - 02 பேர் (540)
மார்ச் 12 - 02 பேர் (538)
மார்ச் 11 - 06 பேர் (536)
மார்ச் 10 - 03 பேர் (530)
மார்ச் 09 - 03 பேர் (527)
மார்ச் 08 - 08 பேர் (524)
மார்ச் 07 - 04 பேர் (516)
மார்ச் 06 - 02 பேர் (512)
மார்ச் 05 - 07 பேர் (510)
மார்ச் 04 - ஒருவர் (503)
மார்ச் 03 - 02 பேர் (502)
மார்ச் 02 - 05 பேர் (500)
மார்ச் 01 - 07 பேர் (495)
பெப்ரவரி 28 - 05 பேர் (488)
பெப்ரவரி 27 - 02 பேர் (483)
பெப்ரவரி 26 - 04 பேர் (481)
பெப்ரவரி 25 - 05 பேர் (477)
பெப்ரவரி 24 - 02 பேர் (472)
பெப்ரவரி 23 - ஒருவர் (470)
பெப்ரவரி 22 - 03 பேர் (469)
பெப்ரவரி 21 - 06 பேர் (466)
பெப்ரவரி 20 - 09 பேர் (460)
பெப்ரவரி 19 - 06 பேர் (451)
பெப்ரவரி 18 - 04 பேர் (445)
பெப்ரவரி 17 - 05 பேர் (441)
பெப்ரவரி 16 - 05 பேர் (436)
பெப்ரவரி 15 - 03 பேர் (431)
பெப்ரவரி 14 - 08 பேர் (428)
பெப்ரவரி 13 - 07 பேர் (420)
பெப்ரவரி 12 - 02 பேர் (413)
பெப்ரவரி 11 - 08 பேர் (411)
பெப்ரவரி 10 - 05 பேர் (403)
பெப்ரவரி 09 - 07 பேர் (398)
பெப்ரவரி 08 - 08 பேர் (391)
பெப்ரவரி 07 - 05 பேர் (383)
பெப்ரவரி 06 - 06 பேர் (378)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

நன்றி தினகரன் 

யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நேற்று மீண்டும் பொறுப்பேற்றார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கடமையாற்றிவந்த நிலையில் மேற் படிப்பிற்காக கடந்த பெப்ரவரியில் பிரித்தானியா சென்றிருந்தார்.

இதன் காரணமாக தனது பொறுப்பை தற்காலிகமாகப் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது விடுமுறையில் யாழ். திரும்பிய வைத்தியர் த. சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

தற்போதைய கொரோனா பேரிடர் நிலையை கருத்தில் கொண்டு இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய தனது மேற்படிப்பை குறிப்பிட்ட காலத்திற்கு பிற்போட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்க முன்வந்துள்ள வைத்தியர் த.சத்தியமூர்த்தி நேற்றுக் காலை தனது கடமைகளை மீள பொறுப்பேற்றுக் கொண்டார்.

கரவெட்டி தினகரன் நிருபர் - நன்றி தினகரன் 
சிறப்பாக செயற்படும் எம்.பியாக சாணக்கியன்

Manthri.lk கருத்துக்கணிப்பில் முதலிடம்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையில் இரா.சாணக்கியன் எம்.பி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையை Manthri.lk என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.

இந்தநிலையில் தற்போது அவ் இணையத்தளம் புதிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.   நன்றி தினகரன் 

No comments: