பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - நான்கு சுவர்கள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 11

.





நட்சத்திர நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி இருவரையும் வைத்து படம் எடுக்காமல் தனது கதை வசனம் மீதான திறமையை மட்டும் நம்பி படம் எடுத்து சாதனை படைத்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். கருப்பு வெள்ளைப் படங்களாகவே இயங்கிக் கொண்டிருந்த அவருக்கு 1971 ஆம் ஆண்டு முதன் முறையாக ஈஸ்ட்மென் கலரில் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் நான்கு சுவர்கள்.

கலர்ப்படம் என்பதாலோ என்னவோ தனது வழமையான பாணியில் இருந்து மாறி ஆக்சன், கவர்ச்சி நடனம், கண்கவர் காட்சிகள் என்று தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி இருந்தார் பாலச்சந்தர். இதற்கு வசதியாக ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று இதரு கதாநாயகர்களை படத்தில் இரட்டை நாயனமாக பொருத்திக் கொண்டார். ஏராளமான படங்களில் நடித்திருந்த ஜெய்சங்கருக்கு இதுவே இரண்டாவது விண்ணப் படமாக அமைந்தது. வெளிப்புறக் காட்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படப்பிடிப்பை கடற்கரை அழகை பருகக்கூடிய கோவாவில் கொண்டார்கள் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் கேமரா கோவாவின் அழகை வாரிக் கொண்டது

சமுதாயத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மனிதர்களை அரவணைத்து அவர்களுக்காக ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கே அவர்களை ரவியும் ராஜாவும் குடியேற்றுகிறார்கள். ஒற்றுமையுடன் செயற்படும் அவர்களுக்கு மத்தியில் வாணி குறுக்கிடுகிறாள் . அவளுக்கும் ரவிக்கும் இடையே காதல் உருவாக ராஜாவுக்கும் ரவிக்கும் இடையே மோதல் உருவாகிறது , இதனால் கிராமம் பல சமூக சீர்கேடுகளை சந்திக்கின்றது.


இவ்வாறு அமைந்த படத்தில் வாணிஸ்ரீ ,நாகேஷ் ,சவுகார்ஜானகி ,மனோகர் விஜயலலிதா ஆகியோர் நடித்தனர் கண்ணதாசனின் ஓ மைனா பாடல் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ் பி பி , டி எம் எஸ் குரலில் இரு தடவைகள் இனிமையாக ஒலித்தது. நான் ஒரு பள்ளிக்கூடம் என்ற பாடல் பின்னர் சில வரிகள் மாற்றப்பட்டு நான் ஒரு பட்டுத் தோட்டம் என்று எல்லார் ஈஸ்வரி குரலில் விஜயலலிதாவின் கவர்ச்சி நடனத்துடன் ரசிகர்களை சென்றடைந்தது. நாகேஷ் இப்படத்திலும் நகைச்சுவை நடிப்பை குறையின்றி வழங்குகிறார்.அவருக்கு யோடி ஸ்ரீவித்யா.

மிகுந்த நம்பிக்கையுடன் பாலச்சந்தர் படத்தை இயக்கிய போதும் ரசிகர்கள் பாலச்சந்தரின் பாணி இதில் இல்லை என்று நிராகரித்து விட்டார்கள். அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் கலர் படமொன்றை பாலச்சந்தர் இயக்கினார்



No comments: