மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு
விசாரணைகளிலிருந்து நீதிபதிகள் தொடர்ச்சியாக ஒதுங்குவதால் ரிஷாத்தின் பிணை மனு கேள்விக்குறி
இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ். போதனாவுக்கு மாற்றம்
இலங்கை - அமெரிக்கா - ஜப்பான் கடற்படை கூட்டுப்பயிற்சி
மேலும் 39 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 2,944 கொவிட் மரணங்கள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெளத்த விசேட தினமான பொசொன் தினத்தையொட்டி இன்றையதினம் (24) சிறைக்கைதிகள் 93 பேருக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், சட்டத்திற்கு முரணனாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 16 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டதோடு, மேலும் 77 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுடன் கொலைக் குற்றம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி.யும் ஹிருணிகா பிரேமசந்திரவின் தந்தையுமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம் குறித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால், துமிந்த சில்வாவை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
விசாரணைகளிலிருந்து நீதிபதிகள் தொடர்ச்சியாக ஒதுங்குவதால் ரிஷாத்தின் பிணை மனு கேள்விக்குறி
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தும் நீதிபதிகள் தொடர்ச்சியாக இந்த விசாரணையிலிருந்து ஒதுங்கி வருவதால் அவரால் பிணையில் செல்ல முடியாதுள்ளது. இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவருக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யுமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது எம்.பிக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். ரிசாத் பதியுதீன் ஒரு கட்சித் தலைவர். அவர் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் எவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்படவில்லை.
மக்களின் அதிகாரத்தை பாராளுமன்றம் தான் நீதிமன்றங்களுக்கு வழங்கிறது. நாம் வழக்கு தீர்ப்புகளை விமர்சிக்கவில்லை. நீதிமன்ற தாமதம் குறித்தே பேசுகிறோம்.இவர் பிணை மனு முன்வைத்துள்ளார். ஒவ்வொரு தடவையும் வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஒருவர் ஒதுங்குகிறார். 28 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெற்றது.04 ஆம் திகதி நடந்தது. இன்றும் (நேற்று 23) விசாரணை நடந்தது.மூன்றாவது தடவையும் நீதவான் ஒருவர் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இருக்கிறார். அவருக்கு எதிராக எந்த சாட்சியும் கிடையாதென பாராளுமன்ற குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி தற்போதைய பொலிஸ் மாஅதிபர் அறிவித்திருந்தார்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணுவளவு கூட அவருக்கு எதிராக சாட்சி கிடையாது.ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் மறுபக்கம் அமர்ந்துள்ளனர். இது பாராளுமன்றத்திற்கும் வெட்கமான விடயமாகும். எம்.பிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன் என்றார்.
இதனை சபாநாயகருக்கு அறிவிப்பதாக சபைக்கு தலைமை தாங்கிய எம்.பி குறிப்பிட்டார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் - நன்றி தினகரன்
இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ். போதனாவுக்கு மாற்றம்
யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (22) செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய போது கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபரை பிளாஸ்டிக் சத்திர சகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
இலங்கை - அமெரிக்கா - ஜப்பான் கடற்படை கூட்டுப்பயிற்சி
- இன்று திருமலையில் ஆரம்பம்; ஜூன் 30 வரை இடம்பெறும்
இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இன்று (24) ஆரம்பமானது.
(Cooperation Afloat Readiness and Training Exercise - CARAT–21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.
மூன்று கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தல், கடல்வார் விழிப்புணர்வை விரிவுபடுத்தல் மற்றும் அனுபவங்கைள பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியின் இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை கடற்படை, அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமம் மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை ஆகியன பங்கு கொண்டன.
கடல்சார் ஈடுபாடுகள், பகிரப்பட்ட கடல்சார் சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைய கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தல், மூன்று நாடுகளின் சட்ட அமலாக்கல் அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் இந்த பயிற்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.
கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெறவுள்ள இந்த பயிற்சியின் போது, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம், கடல்சார் டொமைன் விழிப்புணர்வு, கடல்சார் விமான போக்குவரத்து, கடலில் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கூட்டு பயிற்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ரோந்து கப்பல்கள்களான சயுரல மற்றும் கஜபாஹு, இலங்கை விமானப்படையின் பெல் 212 மற்றும் 412 ஹெலிகாப்டர்கள், B 200 பீச் கிராப்ட் ஆகியவைகளும், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யுஎஸ்எஸ் சார்லஸ்டன் (எல்சிஎஸ் 18) - லிட்டோரல் காம்பாட் ஷிப், போயிங் பி -8 போஸிடான் ஆகிய கப்பல்களுடன் கடல் ரோந்து விமானம் மற்றும் எம்ஹெச் -60 எஸ் ஹெலிகாப்டரும், ஜே.டி.எஸ் யுகிரி - ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் தாக்குதல் கப்பல் மற்றும் MH - 60R ஹெலிகாப்டரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ளவுள்ளன.
இலங்கை கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வை என் ஜயரட்ண, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை இணைப்பாளர் லெப்டினன்ட் கொமாண்டர் ரிசர்ட் லிஸ்டர் உட்பட உயர் அதிகாரிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஸாதிக் ஷிஹான் - நன்றி தினகரன்
மேலும் 39 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 2,944 கொவிட் மரணங்கள்
- 27 ஆண்கள், 12 பெண்கள்
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 39 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 2,905 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 39 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 2,944 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மரணமடைந்த 39 பேரில், 27 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்கள் - 2,944
ஜூன் 26 - 39 பேர் (2,944)
ஜூன் 25 - 43 பேர் (2,905)
ஜூன் 24 - 48 பேர் (2,862)
ஜூன் 23 - 45 பேர் (2,814)
ஜூன் 22 - 65 பேர் (2,769)
ஜூன் 21 - 71 பேர் (2,704)
ஜூன் 20 - 52 பேர் (2,633)
ஜூன் 19 - 47 பேர் (2,581)
ஜூன் 18 - 54 பேர் (2,534)
ஜூன் 17 - 55 பேர் (2,480)
ஜூன் 16 - 51 பேர் (2,425)
ஜூன் 15 - 59 பேர் (2,374)
ஜூன் 14 - 55 பேர் (2,315)
ஜூன் 13 - 57 பேர் (2,260)
ஜூன் 12 - 67 பேர் (2,203)
ஜூன் 11 - 15 பேர் (2,136)
ஜூன் 10 - 15 பேர் (2,125)
ஜூன் 09 - 21 பேர் (2,110)
ஜூன் 08 - 34 பேர் (2,089)
ஜூன் 07 - 50 பேர் (2,055)
ஜூன் 06 - 63 பேர் (2,005)
ஜூன் 05 - 37 பேர் (1,942)
ஜூன் 04 - 44 பேர் (1,905)
ஜூன் 03 - 44 பேர் (1,861)
ஜூன் 02 - 47 பேர் (1,817)
ஜூன் 01 - 52 பேர் (1,770)
மே 31 - 57 பேர் (1,718)
மே 30 - 48 பேர் (1,661)
மே 29 - 42 பேர் (1,613)
மே 28 - 42 பேர் (1,571)
மே 27 - 47 பேர் (1,529)
மே 26 - 42 பேர் (1,482)
மே 25 - 42 பேர் (1,440)
மே 24 - 35 பேர் (1,398)
மே 23 - 41 பேர் (1,363)
மே 22 - 38 பேர் (1,322)
மே 21 - 32 பேர் (1,284)
மே 20 - 56 பேர் (1,252)
மே 07 - மே 20: 37 பேர் (1,196)
மே 19 - 45 பேர் (1,159)
மே 18 - 26 பேர் (1,114)
மே 17 - 53 பேர் (1,088)
மே 16 - 37 பேர் (1,035)
மே 15 - 23 பேர் (998)
மே 14 - 23 பேர் (975)
மே 13 - 28 பேர் (952)
மே 12 - 23 பேர் (926)
மே 11 - 28 பேர் (903)
மே 10 - 22 பேர் (875)
மே 09 - 24 பேர் (853)
மே 08 - 26 பேர் (829)
மே 07 - 15 பேர் (803)
மே 06 - 22 பேர் (788)
மே 05 - 14 பேர் (766)
மே 04 - 19 பேர் (752)
மே 03 - 13 பேர் (733)
மே 02 - 13 பேர் (720)
மே 01 - 07 பேர் (707)
ஏப்ரல் 30 - 15 பேர் (700)
ஏப்ரல் 29 - 07 பேர் (685)
ஏப்ரல் 28 - 07 பேர் (678)
ஏப்ரல் 27 - 06 பேர் (671)
ஏப்ரல் 26 - 06 பேர் (665)
ஏப்ரல் 25 - 07 பேர் (659)
ஏப்ரல் 24 - 03 பேர் (652)
ஏப்ரல் 23 - 06 பேர் (649)
ஏப்ரல் 22 - 04 பேர் (643)
ஏப்ரல் 21 - 03 பேர் (639)
ஏப்ரல் 20 - 04 பேர் (636)
ஏப்ரல் 19 - 04 பேர் (632)
ஏப்ரல் 18 - ஒருவர் (628)
ஏப்ரல் 17 - 04 பேர் (627)
ஏப்ரல் 16 - 04 பேர் (623)
ஏப்ரல் 15 - 03 பேர் (619)
ஏப்ரல் 14 - 05 பேர் (616)
ஏப்ரல் 13 - 00 பேர் (611)
ஏப்ரல் 12 - 03 பேர் (611)
ஏப்ரல் 11 - 05 பேர் (608)
ஏப்ரல் 10 - 03 பேர் (603)
ஏப்ரல் 09 - 00 பேர் (600)
ஏப்ரல் 08 - 04 பேர் (600)
ஏப்ரல் 07 - 00 பேர் (596)
ஏப்ரல் 06 - 03 பேர் (596)
ஏப்ரல் 05 - 02 பேர் (593)
ஏப்ரல் 04 - 05 பேர் (591)
ஏப்ரல் 03 - ஒருவர் (586)
ஏப்ரல் 02 - 03 பேர் (585)
ஏப்ரல் 01 - 05 பேர் (582)
மார்ச் 31 - 06 பேர் (577)
மார்ச் 30 - 00 பேர் (571)
மார்ச் 29 - ஒருவர் (571)
மார்ச் 28 - 03 பேர் (570)
மார்ச் 27 - 00 பேர் (567)
மார்ச் 26 - 00 பேர் (567)
மார்ச் 25 - 02 பேர் (567)
மார்ச் 24 - 04 பேர் (565)
மார்ச் 23 - 00 பேர் (561)
மார்ச் 22 - 04 பேர் (561)
மார்ச் 21 - 02 பேர் (557)
மார்ச் 20 - 00 பேர் (555)
மார்ச் 19 - ஒருவர் (555)
மார்ச் 18 - 02 பேர் (554)
மார்ச் 17 - 03 பேர் (552)
மார்ச் 16 - 04 பேர் (549)
மார்ச் 15 - ஒருவர் (545)
மார்ச் 14 - 04 பேர் (544)
மார்ச் 13 - 02 பேர் (540)
மார்ச் 12 - 02 பேர் (538)
மார்ச் 11 - 06 பேர் (536)
மார்ச் 10 - 03 பேர் (530)
மார்ச் 09 - 03 பேர் (527)
மார்ச் 08 - 08 பேர் (524)
மார்ச் 07 - 04 பேர் (516)
மார்ச் 06 - 02 பேர் (512)
மார்ச் 05 - 07 பேர் (510)
மார்ச் 04 - ஒருவர் (503)
மார்ச் 03 - 02 பேர் (502)
மார்ச் 02 - 05 பேர் (500)
மார்ச் 01 - 07 பேர் (495)
பெப்ரவரி 28 - 05 பேர் (488)
பெப்ரவரி 27 - 02 பேர் (483)
பெப்ரவரி 26 - 04 பேர் (481)
பெப்ரவரி 25 - 05 பேர் (477)
பெப்ரவரி 24 - 02 பேர் (472)
பெப்ரவரி 23 - ஒருவர் (470)
பெப்ரவரி 22 - 03 பேர் (469)
பெப்ரவரி 21 - 06 பேர் (466)
பெப்ரவரி 20 - 09 பேர் (460)
பெப்ரவரி 19 - 06 பேர் (451)
பெப்ரவரி 18 - 04 பேர் (445)
பெப்ரவரி 17 - 05 பேர் (441)
பெப்ரவரி 16 - 05 பேர் (436)
பெப்ரவரி 15 - 03 பேர் (431)
பெப்ரவரி 14 - 08 பேர் (428)
பெப்ரவரி 13 - 07 பேர் (420)
பெப்ரவரி 12 - 02 பேர் (413)
பெப்ரவரி 11 - 08 பேர் (411)
பெப்ரவரி 10 - 05 பேர் (403)
பெப்ரவரி 09 - 07 பேர் (398)
பெப்ரவரி 08 - 08 பேர் (391)
பெப்ரவரி 07 - 05 பேர் (383)
பெப்ரவரி 06 - 06 பேர் (378)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
நன்றி தினகரன்
No comments:
Post a Comment