உலகச் செய்திகள்

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா 

மியன்மார் அகதிகள் 10 ஆயிரம் பேர் இந்தியா, தாய்லாந்தில் தஞ்சம்

பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு

சீனாவில் அணு விஞ்ஞானி மர்ம மரணம்

இந்தியாவை தாக்கும் வீரியமிக்க டெல்டா பிளஸ் மத்திய பிரதேசத்தில் முதல் மரணம்

சாதகமாக நிறைவடைந்த காஷ்மீர் தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு


ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா 

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகின்றது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், ‘அலெக்ஸி நவால்னி வழக்கில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம்.

நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும். அதைசெய்யும்போது இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை இருபெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்க- ரஷ்ய தலைவர்கள் அண்மையில் ஜெனீவாவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தது.   

அத்துடன் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா ஏழு ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ஒரு டஸன் அரசாங்க நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






மியன்மார் அகதிகள் 10 ஆயிரம் பேர் இந்தியா, தாய்லாந்தில் தஞ்சம்

மியன்மாரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஐ.நா., பொதுச் செயலாளரின் மியன்மாருக்கான தூதுவர், மியன்மாரில் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள தயாராகி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதமேந்திய குழுக்களுடன் சேர்ந்து பலர் போர் பயிற்சியில் ஈடுபடுவதுடன், சுயமாக ஆயுதம் தயாரிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், 1.75 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அவர்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மோதலில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.   

இதனால், ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு

விமானம் வழிமறிப்பு விவகாரத்தில், பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி பதவியில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

இதனிடையே பெலரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோடாசெவிச் என்ற பத்திரிகையாளர், ஜனாதிபதியை விமர்சனம் செய்து வந்தார். ஜனாதிபதியின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோடாசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தபடி, அதிபர் தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக எழுதி வந்தார்.

இந்த சூழலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில், எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் ரோமன் புரோடாசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். அந்த விமானத்தில் அவருடன் 171 பயணிகள் இருந்தனர்.

விமானம், பெலரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலரஸ் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, பெலரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார்.

அதே சமயத்தில், பெலரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டி சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பத்திரிகையாளர் ரோமன் புரோடாசெவிச்சை பெலரஸ் பொலிஸார் கைது செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோடாசெவிச் கூச்சலிட்டார்.

ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலரஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், பெலரஸ் அதிபருக்கு எதிராக பேசி வந்த பத்திரிகையாளரை கைது செய்வதற்காக பயணிகள் விமானத்தை போர் விமானத்தால் வழிமறித்து தரை இறக்கிய விவகாரத்தில் பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.   நன்றி தினகரன் 




சீனாவில் அணு விஞ்ஞானி மர்ம மரணம்

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.

சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக பேராசிரியர் ஜாங் ஜீஜியான் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சவுத் சீனா மோர்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில், ஹார்பின் பல்கலை கழகம் சார்பில் வெளியான அறிவிப்பில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான் கடந்த 17ம் திகதி காலை 9.34 மணியளவில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதற்காக அவரது குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஜாங்கின் மரணம் பற்றி வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. பல்கலை கழகத்தின் வலைதள பக்கத்தில் நேற்றுமுன்தினம் வரை ஜாங்கின் பெயர் தலைமைத்துவ பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

ஜாங் அந்த பல்கலை கழகத்தின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகவும் மற்றும் சீன அணு கழகத்தின் துணை தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இதுதவிர பல்கலை கழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.   நன்றி தினகரன் 




இந்தியாவை தாக்கும் வீரியமிக்க டெல்டா பிளஸ் மத்திய பிரதேசத்தில் முதல் மரணம்

இந்தியாவில் புதிதாக பரவி வரும் டெல்டா பிளஸ் வைரஸ், மத்திய பிரதேசத்தில் முதல் பலியை எடுத்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான கொரோனா ‘டெல்டா வைரஸ்’, 2வது அலையில் பல இலட்சம் பேரை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, அதை விட வீரியமிக்கதாக உருவாகி தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இது, கடந்த மே மாதத்தின் ஆரம்பத்திலேயே பல மாநிலங்களில் தாக்க தொடங்கி இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டுமே, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 40 பேரை தாக்கியுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் இந்த வைரசால் நாட்டிலேயே நேற்று முதல் பலி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 17ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 23ம் தேதி அவர் இறந்தார்.

அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரசின் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இவர் கொரோனா தடுப்பூசி போடவில்லை. இந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் வரையில் 5 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி ஒரு பெண்ணிடம் எடுக்கப்பட்ட மாதிரியில், டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

ஆனால், இந்த பெண் தடுப்பூசி போட்டு இருந்ததால் குணமாகி இருக்கிறார். மற்ற 3 பேரும் கூட தடுப்பூசி போட்டு இருந்ததால் குணமாகி விட்டனர். இந்நிலையில், மகாராஷ்டிரா, கேரளாவில் இதன் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசித்து வருகிறார்.

85 நாடுகளில் டெல்டா

உலக சுகாதார அமைப்பு கூறுகையில், 'கோவிட்-19 வாராந்திர தொற்று நோயியல் புதுப்பிப்பு தகவலின்படி, உருமாறிய டெல்டா வைரசின் ஆல்பா 170 நாடுகளிலும், பீட்டா 119 நாடுகளிலும், காமா 71 நாடுகளிலும், டெல்டா வைரஸ் 85 நாடுகளிலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை நீடித்தால், மிக விரைவாக மேலும் பல நாடுகளில் பரவ வாய்ப்புள்ளது. டெல்டா வைரஸ் தற்போது 85 நாடுகளில் பரவி உள்ளது. இதில், கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 நாடுகளில் உருமாறிய டெல்டா பிளஸ் பரவி உள்ளது,’’ என்று தெரிவித்தது.  நன்றி தினகரன் 




சாதகமாக நிறைவடைந்த காஷ்மீர் தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு

சாதகமாக நிறைவடைந்த  காஷ்மீர் தலைவர்களுடனான மோடியின்  சந்திப்பு-Narendra Modi-Kashmir Representative Meeting Successful

ஜம்மு கஷ்மீர் அனுபவித்து வந்த விசேட அந்தஸ்த்து  இரத்து செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்  காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு  சாதகமாக முடிவடைந்தது.

பிராந்திய தலைவர்களில்  பெரும்பான்மையானவர்கள் பிரதமர் மீது நம்பிக்கை தெரிவித்ததால், மாநில மற்றும் தேர்தல்களை விரைவாக நடத்த பிரதமர்  உறுதியளித்தார் .

முந்தைய மாநிலத்தில் இருந்து சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காஷ்மீர் தலைவர்களையும் சந்தித்தார்.

சாதகமாக நிறைவடைந்த  காஷ்மீர் தலைவர்களுடனான மோடியின்  சந்திப்பு-Narendra Modi-Kashmir Representative Meeting Successful

கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடி ட்வீட் செய்ததாவது: "எங்கள் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் ஒரு மேசையி இளைஞர்கள்   ஜம்மு கஷ்மீர் அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்  என  ஜம்முகஷ்மீர்   தலைவர்களிடம் சொன்னேன், 

பெரும்பாலான காஷ்மீர் தலைவர்கள் 370 வது பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மாநில மறுசீரமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து கூட்டத்தை சுமுகமாகவும் சாதகமாகவும்   நிறைவு செய்தார்கள்,  ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மட்ட வளர்ச்சிக்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று  கூட்டத்தின் பின்னர்  அமித் ஷா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறுகையில் '' உள்ளூர் மக்களின்  தொழில்கள்   பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், வர்த்தகர்கள், போக்குவரத்து, சுற்றுலா தொழிலாளர்கள்  தொழில் இழந்துள்ளதால் அவர்களுக்கு   ஒரு நிவாரண பொதியைப் பெற வேண்டும் என்று   கோரியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டின் தலைவருமான பாரூக் அப்துல்லா ஊடகங்கு கருத்து தெரிவிக்கையில் "ஜம்மு-காஷ்மீரின் முழு மாநில நிலையை மீட்டெடுப்பது புது தில்லி தரப்பிலிருந்து நம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல் பயிற்சியாகும்" என்று கூறினார்.   நன்றி தினகரன் 




No comments: