மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
அப்பா அம்மா வைத்த பெயர் முத்தையா. முத்தான முத்தையா
தமிழுக்குச் சொத்தல்லவா ? ஆனால் அகிலவுலகும் போற்றும் பெயர் கண்ணதாசன். கண்ணதாசனாய் எப்படி ஆகினார் ? விரும்பி ஏற்றதா ? அல்லது வெற்றியைத்தர வாய்த்ததா ? அல்லது அந்தப் பரம்பொருளே இந்தப் பெயரை கவிஞரின் மனதில் இருத்தினாரா? எழுத வேண்டும் என்னும் ஆசையினை மட்டுமே உள்ளத்தில் இரு த்தி வைத்துக் கொண்டு திரிந்த முத்தையா - திருமகள் பத்திரிகை யில் உதவி ஆசிரியர் வேலைக்கு செல்கிறார். அங்கு தனது கை யிலிருந்த சிபார்சுக் கடிதத்தைத் கொடுக்கிறார். கடிதத்தை வாங்
கிய பத்திரிகையின் அதிபர் " இதற்கு முன்பு எழுதி இருக்கிறீர்க ளா ? அப்படி எழுதியிருந்தால் என்ன புனை பெயரில் எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார் " தன்னுடைய எழுத்துக்களை எ.எல். எஸ் முத்தையா என்னும் பெயரில் எழுதினாரே அன்றி - எந்த புனை பெயரிலும் அவர் எழுதவில்லை. புனை பெயரில் எழுதுவது அக்காலத்தில் மிகவும் பிரபலமாய் இருந்தது. பத்தி ரிகை அதிபர் கேட்டவுடன் ; முத்தையா மொழிந்தார் கண்ணதாசன் என்று. முத்தைத் தரு பக்தித் திருநகை - என்று அருணகிரி வாயில் வந்து - சந்தம் சிந்தும் தமிழ்க் கவிதை களுக்கு முருகப் பெருமான் அனுக்கிரகம் கொடுத்தது போல் ; கண்ணதாசன் என்னும் பெயரை உடனே சொல்லுவதற்கு அந்தக் கண்ணனே அருள் புரிந்தார் என்றுதான் எண்ணி விடத் தோன்றுகிறதல்லவா ! வேறு பெயர்கள் எதுவுமே நாவில் வராமல் கண்ணதாசன் என்று வந்ததால் உலகமே போற்றியது. தமிழின் உன்னத கவியரசர் ஆகும் நிலையும் உருவாகியது. புகழும் குவிந்தது ! பொருளும் குவிந்தது ! இன்றும் என்றும் நினைக்கவும், பேசவும் , தமிழ் உலகில் முடிசூடா மன்னனாய் , கண்ணனின் காதலனாய், கண்ணனின் காவலனாய் ஒளி விட்டு நிற்கிறார் என்பதுதான் உண்மையாகும்!
படத்தில் வருகின்ற காட்சிகளுக்குத்தான் பாட்டெழுதினார். பணத்துக்
காகத்தான் பாட்டெழுதினார். ஆனால் கண்ணனைப் பற்றிய பாடல்களை காட்சிக்கு மட்டுமா எழுதினார் ? அப்படி எழுதியிருந்தால் அப்பாடல்களில் கண்ணதாசனின் உணர்வு நிறைவாக இருந்திருக்காது ! ஆனால் கண்ணனைப் பற்றிய அவரின் எண்ணங்களை நோக்கும் பொழுது அத்தனை கண்ணன் பாடல்களும் ஆழ்வார்கள் பாடிய அந்த பக்தி உணர்வை , பக்கு வத்தை, உருக்கத்தையே காட்டுவதாய் அமைகிறது என்பதுதான் உண்மை.
காதலைப் பாடினாலும், சோகத்தைப் பாடினாலும், தத்துவத்தைப் பாடினாலும், எதைப்பாடினாலும் கவியரசர் நாவில் கண்ணன் வந்து அமர்ந்துவிடுவான். எப்படியாயினும் அங்கே கண்ணனை நுழைத்துவிடுவார்.காலங்களில் அவள் வசந்தம் என்று பாடவந்தவருக்குள் - மாதங்களில் அவள் மார்கழி - என்னும் வார்த்தை எப்படி வந்தது ? கோபத்தில் கூட - கண்ணா நீயும் நானுமா - என்னும் வார்த்தைதான் வந்து அமைகிறது ! சரஸ்வதி அவரின் நாவில் சம்மாணம் போட்டுஅமர்ந்திருந்தாள்.கண்ணனோ அவரின் அகத்தில் அசையாது அமர்ந்திருந்தான்.
கண்ணதாசன் ஆழ்ந்த பக்தி உணர்வு கொண்டிருந்தார். கீதை யின் மீதும் , கண்ணன் மீதும் அளப்பரிய காதலும் கொண்டிருந் தார்.மதக் கோட்பாடுகளின் மீதும் மிகுந்த மரியாதையும் கொண்டி ருந்தார்.
திரையிசைப் பாடல்களைப் பார்ப்பதற்கு முன்னால் அவரின் - உள்ளத்தினின்றும் வெளிவந்த ; ஶ்ரீ கிருஷ்ணகவசம், பஜகோவிந் தம், கிருஷ்ணஅந்தாதி, கிருஷ்ணகா
1) கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
2) கண்ணா கருமை நிறக்கண்ணா
3) ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் - மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
4) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
5) பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் என் - பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் - கேள்விக்கு பதில் என்ன கேலியோ
கீதையில் உன்குரல் கேட்டேனே என் - கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே
6 )கங்கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் - கண்ணன் அருகினிலே
7) கண்ணனை நினைக்காத நாளில்லையே - காதலில் துடிக்காத நாளில்லையே - உண்ணும் போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணதானே
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் - தீபம் ஒன்று கையிலேந்திக் கண்ணன் வந்தான் - கேட்டவர்க்குக் கேட்ட படி கண்ணன் வந்தான்- கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் - தர்மம் என்னும் தேரிலேறிக் கண்ணன் வந்தான் - தாளாத துயர்தீர்க்கக் கண்ணன் வந்தான் -
தேவதாருவே காமதேனுவே தேவ தூதனே கண்ணா
உயர் காவல் தெய்வமே காதல் தீபமே கங்கை ஆண்டிடும் மன்னா
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை நீதி உன் நிலை கண்ணா
ஒரு ஜாதியும் இல்லை தனிமையும் இல்லை தர்ம தேசத்தின் மன்னா
ராதை நாதனே நான்கு வேதனே கீதை நாயகா கண்ணா
உன் பாதை எவ்வழி நாங்கள் அவ்வழி பாடி ஆடுவோம் மன்னா
எங்கு நோக்கினும் என்ன கேட்பினும் என்னை காணலாம் என்றாய்
நாங்கள் ஒன்று நோக்கினோம் ஒன்று கேட்கிறோம் உன்னை மட்டுமே கண்ணா
காட்டு மேட்டிலும் காட்டு வீட்டிலும் காவல் கொண்டவன் அன்றோ
உன் பாட்டும் கீதையும் பாண்டவர் தமை வாழ வைத்தன அன்றோ
காலம் யாவிலும் வசந்தமானவன் மாதம் யாவிலும் மார்கழி
உன் கீதம் யாவையும் புவனம் காக்கவே சேர்ப்பதொன்று தான் என் வழி
பால கிருஷ்ணனே நீல மாதவா என்றும் உன்னடி போற்றினோம்
எங்கள் பாவம் தீரவும் நன்மை சேரவும் கோவில் தீபத்தை ஏற்றினோம்
என்று மனத்தில் கண்ணனை இருத்திப் பாடிப் பரவசம் அடைகின்றார் கண்ணதாசன்.
கண்ணதாசன் இயற்றிய ‘கிருஷ்ண கானம்’ இசைத் தொகுப்பு மிகப்பிரபலமானது; கேட்பவரை உருக வைப்பது. அதில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் கண்ணனைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார். கோகுலத்தில் பசுக்களெல்லாம் அந்தக் கோபாலன் பேரைக் கேட்டாலே நூறுபடி பால் கறக்கின்றன என்று துவங்கிக் கண்ணன் பெருமைகளைப் பாடுவார். சகல உயிரினங்களையும மயக்கும் கண்ணனின் வேணுகானத்தைப் பொழியும் புல்லாங்குழலை, அதைத் தந்த மூங்கில்களையே புகழ்ந்து பாடச் சொல்லுவார் கண்ணதாசன். பாரதியாருக்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தத் தொகுப்பு முழுவதிலும் கண்ணனைப் பல பாவங்களில் பல கோணங்களில் வைத்துக் கவிமழை பொழிந்திருப்பார் கண்ணதாசன்.
கண்ணனைக் கொண்டாடுதலின் உச்சமாகக் கண்ணன் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பது என்பதைச் சொல்கிறார். கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள் ஓருருக் கொண்டதுபோல் அது தொனிக்கிறது. ‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள், அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான், நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்!’’ இன்பத்தையே மனம் நாடும் இவ்வுலகில் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளத்தைக் கேட்க அந்தக் கவிஞன் எத்தனை அனுபவங்களால் பக்குவப்பட்டிருக்க வேண்டும்?
அந்த அனுபவங்களின் சாறை நமக்கு அளிக்கிறார் ’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா… இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா’ என்கிற இரண்டே வரிகளில். நம் உள்ளம் எத்தனை உயரமோ அத்தனை உயரம்தான் உலகில் நமக்குக் கிடைக்கும் ஏற்றமும் வாழ்வும் என்கிறார்.
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து....
பரமன் அருள் தரும் சாதனம்...
(நாராயண மந்திரம்)
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)
ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)
ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து....
பரமன் அருள் தரும் சாதனம்...
(நாராயண மந்திரம்)
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)
ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
கண்ணனை விட்டுவிடக் கண்ணதாசனுக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. நாராயண மந்திரம் என்றால் அதுவே நாளும் பேரின்பம் என்று பாடிப் பக்தி பரவசப்படுகிறார்.
கண்ணன்மேல் பக்தி என்றால் அவ்வளவு பக்தியை கவிஞர் கொண்டிருந்திருக்கிறார். வீட்டில் பிள்ளைகளுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென படத்தை நிறுத்தி விட்டு கண்ணனுக்கு ஆராத்தி காட்டப் போய்விடுவாராம். அதன் பிறகு வந்து படத்தைப் போடுங்கள் என்று சொல்லி அமர்ந்து படம் பார்ப்பாராம்.அவரின் படுக்கை அறையில் அம்மா அப்பா படம் மாட்டப்பட்டிருக்குமாம் . அத்துடன் குழந்தைக் கண்ணன் படமும் மாட்டப்பட்டிருப்பதோடு கண்ணன் சிலையும் அங்கு இருக்குமாம்.அந்தளவுக்குக் கண்ணன் மேல் பக்தி கொண்டவர்.
வாலி கண்ணதாசன் காலத்தில் வலம்வந்த வித்துவக் கவிஞர். கண்ணாதாசன் பாட்டா வாலி பாட்டா என்று ஐயம் எழும் வண் ணம் எழுதிய கவிஞர் வாலி. அந்த வாலி ஆனந்தவிகடனில் கிருஷ்ணன் பற்றி எழுதியபொழுது " கடவுளுக்குப் காப்பு கண்ணதாசனுக்குக் கைகூப்பு" என்று எழுதினாராம் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்ட பொழுது - ' அவர் சொன்னாராம் ; ஆழ்வார்களுக்கு இணையாக கண்ணனைப் போற்றிப் பாடியவர் கண்ணதாசன்தான். அவருக்கு வைணவர்கள் மத்தியில் பெரிதும் மதிப்பும் பரியாதையும் இருக்கிறது ' என்று சொன்னதாக அறிய முடிகிறது.
கண்ணன் மேல் கொண்ட காதலால் , தீராத பக்தியால் ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கவுரை எழுதுகிறார்.வேங்க டேச சுப்பிரபாதப் பாடல்களும் எழுதுகிறார். ஆதிசங்கரால் வடமொழியில் ஆக்கப்பட்ட " பஜகோவிந்தத்தை " உள்வாங்கி யாவரும் விளங்கும் வண்ணம் தமிழ்க் கவிதைகளாக்கி ஆனந்தம் அடைகின்றார். இக்கவிதை மொழி பெயர்ப்பு அல்ல. கம்பன வான்மீகி ராமாயணத்தை உள்வாங்கி தமிழில் கவிவண்ணம் தந்ததுபோல் கவியரசர் கண்ணதாசனும் பஜகோவிந்தத்தை எமக்காக வழங்கி இருக்கிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது.
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
.பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே
துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனிஜடரே சயனம் |
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே gain death,and
க்ருபயா பாரே பாஹி முராரே ||
மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்;
பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .
பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை
பாடிடுக மூட மதியே!...
பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும்
பரந்தாமன் சொன்ன விதியே!...
பாடுவதை விட்டுவிட்டு பாணினி இலக்கணத்தைப்
பற்றுவதில் நன்மை வருமோ?
பாய்விரித்த வேளைதனில் காலனவன் சன்னதியில்
பாணினியம் காவல் தருமோ!...
மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும்
வாலிபம் இருக்கும் வரைதான்!...
வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும்
வரவுகள் நிலைக்கும் வரைதான்!...
கோடுவிழும் மேனிதனில் கோடிநரை தோன்றியபின்
கூடுவது என்ன சுகமோ?
கூடும்விறகோடு வெறும் கூடுயென வீழ்ந்தபின்பு
கோவணமும் கூட வருமோ?
நாடிவிடு கண்ணனடி தேடிவிடு கண்ணன்முகம்
நம்புவது அந்தமுகமே!...
நாயகனை மாயவனை மாலவனை தூயவனை
நல்லவனைப் பாடு மனமே!...
கண்ணனை எல்லா நிலைகளிலும் பார்த்துப் பரவசப்பட்டு அவனுக்குத் தாசனாக இருக்கும் கண்ணதாசன், அந்த அனுபவங்களையும் அதனால் தனக்குக் கிடைத்த ஞானத்தையும் எந்தவிதச் சிரமமும் இன்றி நமக்கெல்லாம் பாடல்களின் வழியாக விட்டுச் சென்றிருக்கிறார். ஒவ்வொன்றையும் கேட்கும் போதெல்லாம் இப்படியும் பாடமுடியுமா என்று யாவரும் பிரமிக்கும் எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம். கண்ணதாசன் என்னும் கவிமன்னனை வியக்காமல் இருக்கவே முடியவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மையாகும். கண்ணனுக்குத் தாசனாகவே என்றும் கண்ணதாசன் விளங்குகிறார் !
No comments:
Post a Comment