மேதகு திரைப்படம்_METHAGU Movie been released on BSvalue OTT Platform on 25th June

 


மேதகு திரைப்படம்  ஜூன்-25ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பிற்பகல் 12:35 மணிக்கு BSvalue OTT தளத்தில் வெளியாகியுள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்கின்றோம். படத்தை உருவாக்கியவர்களுக்கு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் BS value என்கிற இணையவெளி திரையில் (OTT) இன்று(25.05.2021) வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு" திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும் திரைப்படங்கள்,

தொடர்களுக்கு எமது எதிர்ப்பைக் காட்டும் சக்தியில், தமிழர்களின் வரலாற்றை கலை வடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும் 'மேதகு' போன்ற படைப்புக்களுக்கு எமது முழுமையான ஆதரவினை வழங்குவோம். அப்படைப்புக்களை கொண்டாடுவோம். இவ்வாறன பல்வேறு 
தரமான படைப்புகள் தொடர்ந்து வெளி வருவது, நாம் கொடுக்கும் பெரும் ஆதரவில் தங்கியுள்ளது. இந்த மேதகு படைப்பை வெளிக்கொண்டுவந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

உங்களுக்கு தெரிந்தவர்களுடனும், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு போன்ற படங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
The movie METHAGU, which is set to be the starting point of Theera's history, will be released on BSvalue  OTT on Friday, June 25 at 12:35 PM Indian time. Congratulations and love to the crew. You can hide the story but You can't hide the history.
------------------------------
"மேதகு" திரைப்படத்தை காண்பதற்கு, BSvalue OTT தளத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக வேண்டிய அவசியம் இல்லை! படத்தை பார்வையிட ஒரு முறை கட்டணம் (Pay per view) மட்டுமே செலுத்தினால் போதுமானது.
இந்தியா - ₹70/view
மற்ற நாடுகள் - $5/view


Install BSvalue application here👇🏽
Android
https://play.google.com/store/apps/details?id=com.gridsandguides.blacksheepvalue

iOS
https://apps.apple.com/us/app/bs-value/id1537233387
OR
Url
https://bsvalue.com/auth?fromActivate=false

For Trailer: https://www.youtube.com/watch?v=d5RJca1r2NU

For More Information: https://tamileelathiraikalam.com/ 
#மேதகு
#MethaguNo comments: