பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாக வேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்
நடைபெறும் இடம்: St John's Parish Hall, 52 Yarra Street, Heidelberg, Vic 3084
காலம்: 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோறியா, அவுஸ்திரேலியா.
No comments:
Post a Comment