அஸ்ட்ராசெனகா தடுப்பூசி நெதர்லாந்தில் இடைநிறுத்தம்
சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து சீரானது
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு இன்று தேர்தல்
ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு
மேலும் 2 தடவை தேர்தலில் போட்டி: சட்டத்தில் புட்டின் கையெழுத்து
ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு
2ஆம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்
அஸ்ட்ராசெனகா தடுப்பூசி நெதர்லாந்தில் இடைநிறுத்தம்
கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நெதர்லாந்து வரும் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் 60 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு மாத்திரம் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்திய நிலையில் அதனை முழுமையாக இடைநிறுத்துவதற்கு நெதர்லாந்து சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை தீர்மானித்தது.
இரத்தம் உறையும் பாதிப்பு பற்றிய அச்சத்தால் அஸ்ட்ராசெனகாவை 60 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதை ஜெர்மனி இடைநிறுத்திய சில நாட்களிலேயே நெதர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐந்து பேரிடம் இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பக்கவிளைவுகள் தொடர்பில் கண்காணிக்கும் நெதர்லாந்து அமைப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
இந்த அனைத்து சம்பவங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏழு முதல் 10 நாட்களுக்குள் இடம்பெற்றிருப்பதோடு அனைவரும் 25 மற்றும் 65 வயதுக்கு இடைப்பட்ட பெண்களாவர்.
இது தடுப்பூசியால் ஏற்பட்டதா, என்பது பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஹுகோ டி ஜொங் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து சீரானது
சுயஸ் கால்வாயில் இராட்சத கப்பல் சிக்கியதால் அந்தக் கால்வாயில் நெரிசலில் சிக்கிய கடைசிக் கப்பலும் வெளியேறிவிட்டதாக அந்தக் கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் திகதி எவர் கிவன் என்ற 400 மீற்றர் நீளம் கொண்ட கப்பல் கால்வாயை அடைத்து நின்றதால் அதன் இரு பக்கமாகவும் 400க்கும் அதிகமான கப்பல்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டன.
இந்நிலையில் கால்வாயில் கப்பல் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்ததாக எகிப்தின் சுயஸ் கால்வாய் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்திருப்பதோடு அதில் கண்டறியப்பட்ட விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே தரை தட்டியிருந்த எவர் கிவன் கப்பல் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது.
சுயஸ் கால்வாய் எகிப்துக்கு பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது. அந்த நீர்வழிப் பாதை முடக்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு இன்று தேர்தல்
'தாதாசாகேப் பால்கே' விருதை பா.ஜ.க வழங்கிய போதிலும், மதில் மேல் பூனையாக ரஜினி!
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக இன்று 6ஆம் திகதி நடைபெறுகின்றது. இதற்கான பிரசாரம் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியுடன் முடிவடைந்திருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3,585 ஆண் வேட்பாளர்களும், 411பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் களத்தில் உள்ளனர்.
தி.மு.க கூட்டணி , அ.தி.மு.க கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி, - அ.தி.மு.க கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு மாதங்களாக பிரசாரம் செய்து வந்தார்.
இதேபோல் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். இது தவிர அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், தி.மு.க மற்றும் தி.மு.கவின் கூட்டணி கட்சியின் தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகின்றது. கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து 'பிபிகிட்' உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமே இந்தியாவில் வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்தக்கது.
தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற வாக்குப்பதிவுக்காக மொத்தமாக 1 இலட்சத்து 55 ஆயிர்தது 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொலிசார் என சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 10,813 பதற்றமான பிரதேச வாக்குச்சாவடிகளும், 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை இராணுவ வீரர்கள் மற்றும் அதிக பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றார்கள். சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டு, நேரடியாக இன்டர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தமாக 6 கோடி 28 இலட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்காளிக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 3 கோடி 92 இலட்சத்து 3 ஆயிரத்து 651 பேரும், பெண்கள் 3 கோடி 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 192 பேரும் உள்ளனர். இந்த சட்டப் பேரவை தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்போர் 13 இலட்சத்து 83 ஆயிரத்து 610 பேர் ஆவர். தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்தக் கட்சிக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. 2021ம் வருடத்திற்கான 51-வது 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு மூலம் 'தாதா சாகேப்' விருது வழங்கப்பட்டு வருகிறது. சினிமாத் துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிகப் பெரிய விருது இது ஆகும்.
இந்த உயரிய விருது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. தேர்தல் நேரத்தில் இப்படி உயரிய விருது அளிப்பது அரசியல் ரீதியாக நிறைய சந்தேகங்களை எழுப்பியது.
தமிழக அரசியலுக்குள் ரஜினிகாந்தை கொண்டு வர பா.ஜ.க கடுமையாக முயன்று வந்தது. ரஜினி தலைமையில் கூட்டணியை உருவாக்கி தி.மு.கவை எதிர்க்கலாம் என்று பா.ஜ.க கடைசி வரை திட்டம் போட்டது. ரஜினிகாந்தும் தொடக்கத்தில் அரசியலுக்கு வருவதாக 'சிக்னல்' கொடுத்து விட்டு கடைசியில் உடல் நலனை காரணம் காட்டி அரசியலுக்கு வராமலே விலகி விட்டார்.
ரஜினியை நம்பி திட்டங்களை வகுத்து வந்த பா.ஜ.கவிற்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. தமிழகத்தில் எப்படியாவது ரஜினியை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.கவிற்கு ரஜினியின் முடிவு பெரிய இடியாக இருந்தது.
ரஜினி அரசியலுக்கு வராத நிலையில், குறைந்தது அவர் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரஜினியோ கடைசி வரை எதுவும் பேசாமல் அமைதி காத்தார். இந்த நிலையில்தான் ரஜினிக்கு மத்திய அரசு 'தாதாசாகேப் பால்கே' விருது வழங்கி கௌரவித்தது. இது ரஜினியின் திரை சேவைக்கு கிடைத்த விருது என்றாலும், ரஜினியின் ஆதரவை பெறுவதற்காக பா.ஜ.க இந்த நகர்வை செய்து இருக்கலாம் என்று கேள்விகள் எழுந்தன. அதாவது ரஜினியின் ஆதரவுக் குரலைப் பெற்று விடலாம் என்று நம்பி இந்த விருதை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தன.
ஆனால் ரஜினியோ விருது வாங்கிய பின்னர் அதைப் பற்றி பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. அறிக்கை ஒன்றின் மூலம் தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்தார்.
அத்தோடு இன்னொரு ட்வீட் மூலம் எல்லோருக்கும் நன்றி என்று கூறினார். பிரதமர் மோடி கூட ரஜினியை 'தலைவா' என்று கூறி வாழ்த்தினார். ஆனால் ரஜினியோ அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல், அமைதியாக 'நன்றி' என்று கூறி மௌனமாகி விட்டார்.
பெரிதாக விருது பற்றி அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக நன்றி தெரிவித்து விட்டு ரஜினி ஒதுங்கி விட்டார்.
இது தவிர ரஜினியிடம் இருந்து வேறு குரல் எதுவும் வரவில்லை. ரஜினியோ இதுவரை எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை. மதில் மேல் பூனையாக அமைதி காக்கிறார். அரசியலே வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கி விட்டார்.
மொத்தத்தில் ரஜினி யாருக்கும் இந்தத் தேர்தலில் இறுதி வரை ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் குரல் கொடுத்தாலும் அது பெரிய அளவில் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துமா என்பதெல்லாம் சந்தேகம்தான். இதனால் ரஜினியை நம்பி சில திட்டங்களை வகுத்த பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
நன்றி தினகரன்
ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு
ஈரான் அணு உடன்படிக்கை தொடர்பான வியன்னா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கவுள்ளது. அந்த உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் டிரம்ப் நிர்வாகம் விலகிக்கொண்டது.
இந்த உடன்படிக்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தளர்த்தி இந்த உடன்படிக்கையின் கடப்பாடுகளுக்கு ஈரானை திரும்பச் செய்யும் முயற்சியில் உடன்படிக்கையில் உள்ள ஏனைய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
தடைகள் நீக்கப்படும் வரை அமெரிக்காவை நேருக்கு நேர் சந்திப்பதில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மற்றும் உடன்படிக்கையில் நீடிக்கும் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரிட்டன் பங்கேற்கும் இடத்தில் இருந்தும் வேறு ஓர் இடத்தில் இருந்தே அமெரிக்க அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றனர்.
'எமக்கு முன்னால் இருக்கும் சவாலின் அளவை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது' என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார். நன்றி தினகரன்
மேலும் 2 தடவை தேர்தலில் போட்டி: சட்டத்தில் புட்டின் கையெழுத்து
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மேலும் இரண்டு தவணைக்காலத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த குறைகூறலுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
69 வயதாகும் புட்டினின் தற்போதைய நான்காவது தவணைக் காலம், 2024ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ளது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்தான சட்டப்படி, அவர் மீண்டும் இரண்டு தவணைக்கு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியும்.
அந்தத் தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றால் 2036ஆம் ஆண்டுவரை அவரே ரஷ்ய ஜனாதிபதியாகப் பொறுப்புவகிப்பார். ஜனாதிபதி பதவியின் தவணைக்காலம், ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளாகும். ரஷ்ய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்துச் கடந்த ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதிய சட்டத் திருத்தம், அந்த வாக்கெடுப்பின் முடிவை அதிகாரபூர்வமாக்கியுள்ளது.
2008இல் புட்டின், அப்போதைய பிரதமர் டிமெட்ரி மெத்வதேவுடன் பதவியைப் பரிமாறிக்கொண்டு ஆட்சியில் நீடித்தார். பின்னர் 2012 இல் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார். நன்றி தினகரன்
ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு
ஈரான் அணு உடன்படிக்கை தொடர்பான வியன்னா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கவுள்ளது. அந்த உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் டிரம்ப் நிர்வாகம் விலகிக்கொண்டது.
இந்த உடன்படிக்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை தளர்த்தி இந்த உடன்படிக்கையின் கடப்பாடுகளுக்கு ஈரானை திரும்பச் செய்யும் முயற்சியில் உடன்படிக்கையில் உள்ள ஏனைய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
தடைகள் நீக்கப்படும் வரை அமெரிக்காவை நேருக்கு நேர் சந்திப்பதில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மற்றும் உடன்படிக்கையில் நீடிக்கும் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரிட்டன் பங்கேற்கும் இடத்தில் இருந்தும் வேறு ஓர் இடத்தில் இருந்தே அமெரிக்க அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றனர்.
'எமக்கு முன்னால் இருக்கும் சவாலின் அளவை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது' என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார். நன்றி தினகரன்
2ஆம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்
- எதிர்வரும் ஜூன் 10 இல் 100 ஆவது பிறந்தநாள்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான, இளவரசரசர் பலிப் காலமானார்.
இதனை, எலிசபெத் மகாராணி அறிவித்துள்ளதாக, பிரித்தானிய அரச குடும்பத்திற்கான உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியான, எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சரின் (Elizabeth Alexandra Mary Windsor) கணவர் இளவரசர் பிலிப், டியுக் ஒப் எடின்பரோ (Prince Philip, Duke of Edinburgh) மரணிக்கையில் அவருக்கு வயது 99 ஆகும்.
1921 இல் பிறந்த அவருக்கு எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி 100 ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை விண்ட்சர் கோட்டையில் இளவரசர் பிலிப் அமைதியாக மரணமடைந்ததாகவும், தனது அன்பு கணவரின் மரணம் தொடர்பில், ராணியார் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளதாகவும், அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அரச மாளிகை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment