2017 ம் ஆண்டே ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் ஜெஸ்டிஸ் லீக் படம் திரைக்கி வந்தது. ஆனால், அது ஸ்னைடர் படமே இல்லை, என்பது தெள்ள தெளிவாக தெரிந்தது.
ஆம், படத்தை முடித்து கடைசிக்கட்ட வேலையில் இருந்த ஸ்னைடருக்கு இடியாக வந்து விழுந்தது அவரின் மகள் தற்கொலை செய்தி.
அதனால் அந்தப்படத்திலிருந்து ஸ்னைடர் விலக, அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஜோஸ் வைத்து மிச்ச வேலையை பார்த்தனர்.
அவரோ டிசி ஆடியன்ஸை மனதில் வைத்துக்கொள்ளாமல், ஏதோ மார்வல் டீம் அனுப்பி வைத்த ஸ்லீப்பர் செல் போல் அந்த படத்தை எடிட் செய்தும் எடுத்தும் கொடுத்தார்.
உண்மையாகவே இது டிசி படம் தானா என்று ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு படம் இருந்தது. இது எங்கண்ணே வேலாயுதம் இல்லன்ற மாதிரி ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஸ்னைடர் கட் ரிலிஸ் செய் என்று ஆன் லைன் போராட்டத்தில் குதிக்க, பல பிரபலங்கள் ஆதரவளித்தனர்.
அதன் பின்பு ஒரு வழியாக இந்த படம் OTT தளத்தில் வந்தது. ஸ்னைடர் வெர்ஷன் எப்படி வந்துள்ளது பார்ப்போம்.
சூப்பர் மேன் இறப்பால் வரும் கதீர் வீச்சால் மீண்டும் உயிர்த்தெழுகிறது மதர் பாக்ஸ். இதுவே படத்தின் ஆரம்பக்காட்சியாக இருக்க அதை தொடர்ந்து அந்த மதர் பாக்ஸை கைப்பற்றி தன் தலைவன் டார்க்ஷீடை பூமிக்கு அழைத்து வர போராடுகிறார் ஸ்டெபன் ஃவுல்ப்.
பிறகு என்ன இவன் திட்டத்தை அறிந்த பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் ஒரு டீமை ரெடி செய்து ஸ்டெபன்ஃவுல்ப் திட்டத்தை அழித்து, டார்க்ஷீட் வருகையை தடுத்தார்களா என்பதே மீதிக்கதை.
என்ன தான் பழைய படம் என்றாலும், ஸ்னைடர் வெர்ஷன் ஒரு வித்தியாசமான பயணம் தான், இதெல்லாம் ஏன் கட் பண்ணீங்க என்று ரசிகர்கள் ஜோஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸை திட்டும் அளவிற்கு ஜாக் ஸ்னைடர் சாதித்துவிட்டார் என்றே சொல்லலாம்.
அதிலும் டார்க்ஷீட் மதர் பாக்ஸை வைத்துக்கொண்டு சண்டைப்போட வரும் காட்சி, அப்போது அமேசான், அட்லாண்டா என பலரும் சேர்ந்து அந்த டார்க்ஷீடை அடித்து துரத்தி மதர் பாக்ஸை கைப்பற்றும் இடம் வெறித்தனம். CG கொஞ்சல் டொங்கல் என்றாலும், கொடுத்த பட்ஜெட்டில் அதகளம் செய்துள்ளார் ஸ்னைடர்.
அதோடு முன்பு வந்த படத்தில் ப்ளாஷ், சைப்ராக் கதாபாத்திரம் ஏதோ கெஸ்ட் ரோல் போல் வருவார்கள், ஆனால், இதில் அவர்கள் தான் மெயின் ரோலே, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சைபராக் வைத்தே தான் கதை நகர்கிறது.
அதிலும் அவர் பின் நடப்பதை அறிந்துக்கொள்வது, கிளைமேக்ஸில் ப்ளாஷ் இறந்தகாலம் சென்று மாற்றுவது, பேட்மேன் கனவுகள் என்று ஸ்னைடர் ட்ச் தெறிக்கின்றது.
டாம் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம், டிஜிட்டல் என்பதால் ஓகே, ஆனால், தியேட்டராக இருந்திருந்தால் கொஞ்சம் நீளம் குறைத்தே ஆகவேண்டும்.
மொத்தத்தில் ஸ்னைடர் கட், தரமான கட். அனைவரின் கேள்வியிம் தற்போது டார்க்ஷீட் Entry எப்போது என்பது தான்.
No comments:
Post a Comment