வேரறுக்க விஞ்ஞானம் வெளிச்சம் கொண்டுவரட்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ....... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


        அறியாத சிறுவர்களை அனுசரணை யாக்கி 
        அரங்கேற முயல்கிறது அகோரமுடை கொரனோ 
        குணங்குறிகள் காணாமல் கொரனோவும் அவர்கள்
image1.JPG        ஊடாகப்  பரப்பிவிட  உவப்புடனே இருக்கு  
        வெளிசென்ற சிறிசெல்லாம் வீட்டுக்கு வருவார் 
        உள்நுழைந்த கொரனோவோவும் துள்ளிவர நினைக்கும்
        அறியாமல்  காவிகளாய் ஆகிவிடும் அவர்கள் 
        தெரியாமல் கொரனோவை கொடுத்திடுவார் பலர்க்கும் ! 

        சீனாவின் தயாரிப்பாய் ஆனதனால் கொரனோ 
        சிறுசுகளைத் துணையாக்க திட்டம் இட்டதாலே 
        யாருமே புரியாமல் தந்திரமாய் உள்ளே 
        பரவிவிடத் துடிக்கின்ற உருவெடுத்து இருக்கு 
        சிறுசுகளைத் தாக்காது எனப்புகன்றார் நிபுணர்
        எப்படியோ கொரனோவும் இதைத் தெரிந்துகொண்டு 
        நரியாகச் செயற்பட்டு நாட்டுக்குள் புகுந்து
        பெருவாரியாய் உயிரைப் பறித்துவிட  இருக்கு ! 


        நீருக்குள் புகுந்துவிடத் துடிக்கிறதாம் கொரனோ
        காற்றுடனே கைகோர்க்க காத்திருக்காம் கொரனோ 
        காய்கறிகள் பழவகைகள் தானியங்கள் மேலே
        கண்வைக்க காத்திருக்காம் கொரனோவும் விரைவில் 
        பாருக்குள் இருக்கின்ற அத்தனையும் பிடித்து
        ஊருக்குக் கெடுதிதனை உண்டாக்கத் துடிக்கும் 
        யாருக்கும் வேண்டாத கொரனோவை விரைவில் 
        வேரறுக்க விஞ்ஞானம் வெளிச்சம் கொண்டுவரட்டும்  !         


        
        
        
       

 


No comments: