ஆட்டிஸக் குறைபாடு (வரு முன் காப்போம்) கட்டுரை உஷாஜவகர் (அவுஸ்திரேலியா)ஆட்டிசம்
(Autism) என்றால் என்ன?சாதாரண மனிதர்களை விட நடத்தையில் சில வித்தியாசங்களை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கொண்டிருப்பார்கள்.

 பொதுவாக ஆண்களே பெண்களை விட ஆட்டிஸக் குறைபாடு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.

4 அவுஸ்திரேலிய ஆண்களுக்கு 1 பெண் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது அறியப்பட்டிருக்கிறது.

 குழந்தைகளில் காணப்படும் ஆட்டிஸக் குறைபாட்டுக்கான அறிகுறிகள்

 

(6 மாதத்திலிருந்து ஒரு வயது வரை)

 

1.            அரிதாக புன்னகைத்தல் /சிரித்தல்.

 

2.            புதிய முகங்களைக் கண்டால் மிரளுதல்.

 

3.        பார்ப்பவரின் கண்களை சில வேளைகளில் மட்டும் பார்ப்பது                             அல்லது அறவே பார்க்காமல் தவிர்ப்பது.

 

4.     அவர்களுடைய பெயரை நாம் அழைத்தாலும் கேட்காத மாதிரி                         இருப்பது.

 

5.      சத்தம் எழுப்பப்படும் போது தலையை சத்தம் வரும் திசை நோக்கித்           திருப்பாமல் இருப்பது.

 

6.        சத்தத்துக்கு கூடுதலான எதிர்வினையை  (reaction) எழுப்புவது.

 

7.      பெற்றோரிடம் குழந்தை தன் கைகளை நீட்டி தன்னை தூக்கி                           அணைக்குமாறு சைகை காட்டாமல் இருத்தல்.

 

8.    மழலை ஒலிகளை எழுப்பாமல் இருத்தல்.

 

9.    ஒரு பொருளைக் காட்டி,” எனக்கு அதை எடுத்து தா” என்று சைகை                   காட்டாமல் இருத்தல்.

 

10.    யாரும் தூக்குவதையோ அணைப்பதையோ விரும்பாமல் இருத்தல்.

 

11.    அசாதாரண உடலசைவுகளை தொடர்ந்து செய்தபடி இருத்தல்.

 

தவழும் குழந்தைகளுக்கான ஆட்டிஸக் குறைபாடுகளுக்கான அறிகுறிகள்

                                                                  (2 வயது வரை)

 

1.    உரையாடாமல் இருத்தல்.

 

2.    நுனி கால்களில் நடத்தல்.

 

3.    யாரும் ஏதும் கூறினால் அதை விளங்கிக் கொள்ளாமல் இருத்தல்.

 

4.    தாய் தந்தையர் செய்வதை திரும்ப செய்யாமல் இருத்தல்.

 

5.    ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்தல். (லைட் ஸ்விட்சை                             தொடர்ந்து ஆன் செய்தல் )

 

6.    வித்தியாசமான பொருட்களின் மீது விருப்பம் கொள்ளுதல். (இரும்பு           சாமான்கள்)

 

குழந்தைகளின் நடவடிக்கைகளில் இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் குடும்ப வைத்தியரை உடனடியாக நாட வேண்டும்.

 

நான் ஒரு வைத்தியரோ அல்லது விஞ்ஞானியோ அல்ல.ஆனால் அனுபவத்தில் அவதானித்ததை வைத்தே இப்படி எழுதுகிறேன்.

 

இங்கு சிட்னியில் என்னை சுற்றி வர உள்ள 20 இந்திய, இலங்கைக் குடும்பங்களில் ஆட்டிஸக் குறைபாடு உள்ள குழந்தைகளை கவனித்திருக்கிறேன்.

முதல் குழந்தை பெண் குழந்தை.மிகவும் புத்திசாலி.ஆனால் அடுத்து பிறந்த பையன் ஆட்டிஸக் குறைபாட்டால் தாக்கப்பட்டிருக்கிறான்.

என் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான்! முதல் பெண் குழந்தை தாயின் கருவறையில் உருவாகி வளரும் போது அடுத்து வரும் ஆண் குழந்தையின் மூளை விருத்திக்குத் தேவையான ஏதோ ஒரு சத்தை தானே எடுத்து விடுகிறாள்.

அல்லது முதல் பெண் குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் போது உண்டாகும் ஒரு மாற்றத்தால் அடுத்து உருவாகும் ஆண் குழந்தை பாதிக்கப்படுகிறது.

இதுவே முதலாவது பெண் குழந்தை,இரண்டாவதும் பெண் குழந்தை என்றால் இரண்டாவது பெண் குழந்தை பாதிக்கப்படுவதில்லை.

அல்லது முதல் இரண்டும் பெண் குழந்தைகளாக இருந்து மூன்றாவது ஆண் குழந்தையாக உருவானாலும் அந்த ஆண் குழந்தை ஆட்டிஸத்தால் தாக்கப்படுவது மிகக் குறைவாகவே இருக்கிறது.

சிலர் கேட்கலாம் சில பெற்றோருக்கு முதலாவது ஆண் குழந்தையே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டு பிறந்திருக்கிறானே! அதற்கான எனது விளக்கம் இது தான்.இந்த ஆண் குழந்தை உருவாக முன் தாயின் வயிற்றில் பெண்குழந்தை உருவாகி கரு கலைந்திருக்கலாம்.

ஆட்டிஸக் குழந்தைகள் உள்ள பெற்றோர் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது.முகத்தில் புன்னகையே இல்லாமல்,"வருங்காலத்தில் எனது ஆட்டிஸக் குழந்தை எப்படியெல்லாம் கஷ்டப்படுமோ," என அவர்கள் நாள்தோறும் துடிப்பதைப் பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது.

இப்போதுள்ள  விஞ்ஞானிகளுக்கு (Scientists) எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான்.தாய்மாருக்கு பிறக்கும்  முதலாவது குழந்தை பெண்குழந்தையாக இருந்தால் அவளது கருவறையில் என்ன மாற்றங்கள் நிகழுகின்றன?அதனால் அடுத்து உருவாகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டா?அப்படி வாய்ப்புகள் இருந்தால் அந்தப் பாதிப்புகள் அடுத்து வரும் குழந்தையை எப்படித் தாக்காமல் இருக்க வழி செய்வது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்!

அவர்கள் அப்படிக் கண்டு பிடித்தார்கள் என்றால் ஆட்டிஸக் குறைபாடு இல்லாமல் குழந்தைகள் பிறக்க வழி பிறக்கும் என நிச்சயம் நம்புகிறேன்.

 

                                                                                       

 


No comments: