கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 30 கனிமவளம் நிறைந்த பாப்புவாநியுகினியில் குழந்தை இலக்கியம் ! எல்லா கடற்கரையில் உள்வாங்கிய காட்சி !!


   

அவுஸ்திரிலேசியாவில் பசுபிக் தீவுகளான பாப்புவா நியூகினியிலும் சொலமன் தீவிலும்  வாழும் குழந்தைகளுக்காகவும்  கவிதைகள், பாடல்கள் புனைந்தின்றேன்.

இந்த நாடுகள் எமது அவுஸ்திரேலியாவுக்கு அருகில் பசுபிக் கடல் பிராந்தியத்தில் இணைந்துள்ள கனிமவளங்கள் நிரம்பப்பெற்ற தேசங்கள்.

பொன், வெள்ளி, செம்பு, நிக்கல் முதலான உலேகங்களை பிரசவிக்கும் வளமுள்ள நாடுகள். மீன் பிடித்தொழிலுக்கும் பெயர் பெற்றவை.

இங்கு வாழும் சிறுவர், சிறுமியருடன் எனது பணி நிமித்தம் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தேன். அவர்களின் மொழி, பண்பாடு, உணவு நாகரீகம், நடை, உடை பாவனைகள்,  சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்பன என்னை பெரிதும் கவர்ந்தன.

அவற்றை உள்வாங்கிக்கொண்டுதான்,  இரண்டு  ஆங்கில கவிதை நூல்களை எழுதினேன். அவற்றுக்கு ஓசைநயமும் கொடுத்தேன். அதனால் அக்கவிதைகள் குழந்தைகளின் நாவிலிருந்து பாடல்களாகவும் பிறந்தன.

Lingering Memories, A String of Pearls ஆகிய குறிப்பிட்ட நூல்களைப்பற்றியும் எனது சிறுவர் இலக்கிய சேவைகள் குறித்தும் அங்கிருந்து வெளியான National, The Independent, Solomon Star ஆகிய இதழ்களும் கட்டுரைகளை வெளியிட்டன.

   

அங்கிருந்த பாடசாலைகளில் சிறுவர், சிறுமியர் எனது பாடல்களுக்கு இசையமைத்து பாடினர். அதனால் நானும் பரவசமுற்றேன்.

எமது ஞானகுரு பாரதியாரின்,

 எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? “  

என்ற பாடல்வரிகள்தான் அந்த நாட்டுக்குழந்தைகளுக்காக பாடல் இயற்றும்போது எனது நெஞ்சில் வந்து அலைமோதிற்று.

ஒவ்வொரு நாட்டிலும் பிறக்கும் குழந்தைகளும் தாம் பிறந்து தவழ்ந்து, வளர்ந்த தாயகத்தை நேசிக்கவேண்டும். அத்துடன் பெற்றோரை, ஆசான்களை மதிக்கவேண்டும். நன்னடத்தையுடன், மரபுரிமையையும் பேணல் வேண்டும்.

இந்த எண்ணங்களையே கருப்பொருளாகக் கொண்டு அக்குழந்தைகளுக்கு  புரியும் வகையில் எழுதினேன்.

எனது இந்தத் தொடரின் கடந்த 29 ஆவது அங்கத்தில் ஆளுநர் Sir Seri Eri பற்றிக்குறிப்பிட்டிருந்தேன்.  அவர் மறைந்தபின்னர் Lingering Memories நூலின் இரண்டாவது பதிப்பும் வெளியிடநேர்ந்தது.

அவர் பற்றி மேலும் சில விடயங்களை இங்கே ஆங்கிலத்தில் தருகின்றேன்.

    

A short time after that, he was gone but I continued writing. Firstly, I thought of writing about Sir Seri Eri himself as I wanted to pay a tribute to him for his services to the nation of Papua New Guinea for his simple life. He was a great man from the Gulf province; his words of love and kind deeds to the people kept the people happy. He was a simple man with a multicoloured billum on his shoulder, ever-smiling face, pure in thoughts, broad in mind; in short, he was a man full of grace. From his simple humble house, he had climbed up to the top of the country as Governor General. Whenever he came to my house, the only thing he was interested in was a cup of tea, that too without sugar. Whenever I was sad or mentally troubled, he would encourage and take me out of that sorrow. I completed the poem about him with the lines, "Now he is gone and time ticks on, years go passing by Sir Seri's name will live for long, Yes, great men seldom die."

 

Then I wrote about the father of the Nation of Papua New Guinea, normally called the Chief. I called him, Chief the Hero because he was the man who fought for the independence of Papua New Guinea. Earlier, there were two nations, the Papuans and the New Guineans. They were labouring and toiling in their own land. At that time, Michael Somare was born. "Let us unite New Guinea and Papua. Let that be our goal. Let us form a free sovereign nation," was his call and he achieved it. He was a great man, marching along with his followers to form a new nation called Papua New Guinea and thus Papua New Guinea bloomed as a free nation with great heritage and pride. I ended the poem on Chief, "Salute Sir Michael Somare, He is a chief with a vision, Hail him as a national hero, A hero of a heroic mission."

 

I followed those poems with a poem on Sir Julius Chan. He was the main finance minister at the time of independence. He laid the foundation for the finances of the country, even naming the currency as the Kina (dollar) and the Toya (cents). I called him a proven wizard. Next, I wrote about Paias Winti as the politician and prime minister who was interested in reforms. I named him as a prime minister for change. He was from the Highlands and I wrote, "Paias emerged with the vision and ideas bright for change, Change the style and change the gear was his outright call." He was young in age but as prime minister and leader, he was a great man. 

 

I also wrote a poem on Sir Rabbi Namaliu as an advocate of fairness and justice. He was a leader from Kokopo. He sailed at his own pace, sifting and sorting the problems he faced. He was the Speaker of the House for some time and was very popular as one who took the middle path. He was rational in his thinking and insisted that emotions would take us nowhere. I finished the poem on him that he was a leader with the skill and the will. The only female leader of Papua New Guinea was included in my poems as well. I referred to her as the Dame of Fame. Her name was Josephine Abaijah. "Honoured as Dame, the rank of Knight, / She endures her cross with trust. / With dedication and determination / She gives the nation, her best!" As an advocate of women's rights, she was a worthy addition. 

    

The man who encouraged and supported me by reading the poems and giving suggestions was Franzalbert Joku, an influential man who was close to the then prime minister, Sir Julius Chan. He was himself a journalist, very well-recognised and held the position of Chief of Staff in the Prime Minister's Office. He was keen for me to write a poem on a current issue at that time, the BRA, the Bougainville  Revolutionary Army. It was a movement within Papua New Guinea with the intention of dividing the nation just like the Tamil Tigers of Sri Lanka who years ago formed their own army with Prapakaran as the leader. In the case of BRA, the leader was Francis Ona. My friend, Joku was a supporter of BRA and wanted me to include a poem about that movement. The result was the poem, The Black Pearl:

 

         Every coin has a head and a tail,

         Every conflict, two sides.

         Why not air all smouldering grief,

         As humans, out of hides?

 

 

நான்  Lingering Memories  நூலை நான்கு பிரிவுகளுக்குள் வகைப்படுத்தியிருந்தேன்.

பாப்புவா நியுகினி குழந்தைகளுக்காக – அந்நாட்டின் சுற்றாடலுக்காக – மனதைவிட்டு அகலாத நிகழ்வுகளுக்காக – கவனத்தை ஈர்த்த மனிதர்களுக்காக.

எனது நூலின் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

அவர்களுக்கும்,  வருகை தந்த விருந்தினர்களுக்கும் நூலின் பிரதிகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட  படங்களையும் இந்த பதிவில் வாசகர்கள் பார்க்கலாம்.

இந்த நூலை  ஆளுநர்  உயர்திரு ( அமரர் ) Sir Seri Eri  அவர்களுக்கே சமர்ப்பித்தேன்.  அவரது படத்தையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

நான்  பாப்புவா நியுகினியில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி செல்லும் ரம்மியமான இடம் போர்ட் மோஸ்பியின்  “எல்லா  “ கடற்கரை.

இலங்கையில் காலிமுகம்போன்று சென்னையில் மரீனா கடற்கரைபோன்று பாப்புவா நியுகினியில் எல்லா.

மெரீனா பீச், சில தலைவர்களின் உடல்களின் எச்சங்களையும் உள்வாங்கிவிட்டது.

அடிக்கடி நான் செல்லும் எல்லா கடற்கரையில் ஏகாந்தமாக நடைப்பயிற்சியிலும் ஈடுபடுவேன்.

அவ்வேளைகளில் நான் காணும் காட்சிகளை மனதினுள் உள்வாங்கிக்கொள்வேன்.  வீடு திரும்பியதும்  அக்காட்சிகள் மீண்டும் மனதில் விரியும்.  ஆழ்ந்து யோசிப்பேன். கவிதை பிறக்கும்.  அவ்வாறு  மனதில் உதித்த  ஒரு கவிதையை இங்கே தருகின்றேன்.

ஒரு தமிழ்ப்பெற்றோர் தமது குழந்தையுடன் அக்கடற்கரைக்குவந்தனர். அக்குழந்தைக்கு வீடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

அது தாயைப்பார்த்துக்கேட்டதும், அதற்குத்  தாய் சொன்ன பதிலும்தான் எனது கவிதையின் கருப்பொருள். இனி நான் அக்காட்சியை உள்வாங்கி எழுதிய கவிதையை பாருங்கள்:

    என் அருகாற் சென்ற பிள்ளை – ஆமாம்

      எங்கள் தமிழ்க்குலக் கிள்ளை

  தன் அருந் தாய்முகம் பார்த்து – மம்மி

        ஷால் வீ கோ நவ் என நின்றாள் !

சின்னவள் சொல்லை தட்டி – என்

              சிந்தை உயிர்க்கிற வேளை

   அன்னை அப் பால்முகம் பார்த்து – டாலிங்

                ஆஸ்க் டடி என்று முன்சென்றாள் !

தாயை மம்மியாக்கிய குழந்தையையும், தந்தையை டடி ஆக்கிய தாயையும் பார்த்தவுடன்,  “ நாங்களும் நாங்களாய் வாழ, தமிழ் நாவில் வளரவேண்டாமோ..?  “ என்ற ஆதங்கம்தான் எனக்கு வந்தது.

இவ்வாறு பல ஆதங்கங்களுடன்,  படுக்கையிலிருந்து நனவிடை தோய்ந்துகொண்டிருக்கின்றேன்.

( தொடரும் )

 

 No comments: