145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி


145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி-SLPP Won 145 Seats in Parliamentary Elections 2020

- ஆதரவு கட்சிகளுடன் இணைந்து 2/3 அமைப்பது உறுதியானது
- தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு

நடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் அக்கட்சி ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் 6,853,693 வாக்குகளை பெற்று 59.09% வாக்குப் பதிவுடன் இந்த வெற்றியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மொத்தமான 225 ஆசனங்களில் 2/3 பங்கான 150 ஆசனங்களை பெறுவதற்கு மேலும் 5 ஆசனங்கள் பெற வேண்டியுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (2 ஆசனங்கள்), ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி (01 ஆசனம்), தேசிய காங்கிரஸ் (01 ஆசனம்) உள்ளிட்ட கட்சிகள் இணைவதன் மூலம், அதனை அடையும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இதன் அடிப்படையில், 196 விகிதாசார முறை மூலமான ஆசனங்களில் 128 ஆசனங்களையும், தேசியப் பட்டியில் மூலமான 25 ஆசனங்களில் 17 ஆசனங்களையும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் 2,771,984 (23.90%) வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை (47+7 போனஸ்) பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து 445,958 (3.84%) வாக்குகளைப் பெற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

கட்சிகளும் அவை பெற்றுக் கொண்ட ஆசனங்களும் வருமாறு

145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி-SLPP Won 145 Seats in Parliamentary Elections 2020




1 comment:

vidiyalgowri.blogspot.in said...

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! - என்.சரவணன்
https://www.namathumalayagam.com/2020/08/blog-post.html

இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைக -ளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு வைத்து தேர்தல் வியூகங்களை இத்தேர்தலில் முன்னெடுத்துவரும் ஆளும்கட்சி; சிங்கள பௌத்தர்களை திருப்திபடுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கம் தான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தில் உள்ள தொல்லியல் விவகாரம்.
இதெற்கென்று யூலை மாதம் ஜனாதிபதி கோத்தபாய அமைத்த தனிச்சிங்களவர்களைக் கொண்ட கிழக்குமாகாணத்துக்கான செயலணி போதாதென்று கடந்த யூலை29இல் பிரதமர் ராஜபக்ச நாடளாவியரீதியில் இயங்கக்கூடிய 20 தனிச்சிங்களவர்களைக் கொண்ட ஒரு செயலணியை ஆரம்பித்திருகிறார். இது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வெளிப்படையான தொல்லியல் போர் பிரகடனம் என்றே உறுதி செய்துகொள்ள முடிகிறது.
1. பொலன்னறுவை சொலஸ்மஸ்தான ரஜமகா விகாராதிபதி, மகாவி -காரை வம்சிகா ஷியாமோபாலி மகா நிகயாவின் அஸ்கிரிய மகா விகாரை தரப்பு வெண்டருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி தேரர்
2. தக்ஷித இலங்கையின் பிரதான சங்கநாயக்க பண்டிதா மெட்டரம்ப ஹேமரதன தேரர்
3. அனுராதபுர ருவன்வேலி சே விஹாரதிகாரி கலாநிதி பல்லேகம ஹேமரதன தேரர்
4. தொல்லியல் சக்கரவர்த்தி சக்ரவர்த்தி எல்லவாலா மெத்தானந்த தேரர்
5. அலிக்கேவெல சீலானந்த தேரர்
6. அஸ்கிரிய தரப்பின் பெலிகல் கோரளையின் தலைமை சங்க நாயக்க யடிகல் ஒலுவே விமலரதான தேரர்
7. சோமாவதி ராஜமஹா விஹாரதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர்
8. பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர்
9. கலாநிதி மதுருஓயா தம்மிஸ்ஸர தேரர்
10. தொல்லியல் திணைக்கள முன்னாள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஷிரான் தெரனியகல
11. தொல்லியல் பேராசிரியர் டி.ஜி.குலதுங்க
12. கலாநிதி காமினி விஜேசூரிய
13. சிரேஷ்ட பேராசிரியர் நிமல் டி சில்வா
14. வித்யஜோதி பொறியாளர் கெமுனு சில்வா
15. சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க
16. வாஸ்து சாஸ்த்திரர் ஆஷ்லி த வோஷ்
17. சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ
18. டபிள்யூ.எம்.எஸ் வீரசேகர
19. சிரினிமல் லத்துசிங்க
20. பேராசிரியர் முனிதாச பத்மசிறி ரணவீர


இவர்களில் கலாநிதி காமினி விஜேசூரியவைத் தவிர எஞ்சிய அனைவரும் இனவாதத்தின் பிரதிநிதிகளாக இயங்கிவருபவர்கள்.