பெண்ணைத்
தாயாக் குபவன் யார் ?
தாலி கட்டிய
கண்ணான கணவன் !
பெண்ணைத் தன் பூட்ஸ்
காலால் எற்றி
பேயாக் குபவன் யார் ?
கல்லான கணவன் !
மண்ணில்
உன்னை, என்னைப் பெற்றவள்
அன்னை.
உன்னுடன் பிறந்தவள்
அன்னை.
உனக்கு வந்தவள்
அன்னை.
உன்னை மணந்தவள்
அன்னை.
உனக்குப் பிறந்தவள்
அன்னை.
உன்னுடன் பணி புரிபவள்
அன்னை.
உன் கீழ் வேலை செய்பவள்
அன்னை.
பூக்காரி, பால்காரி,
காய்கறிக் கூடைக்காரி,
மீன்கடைச் சந்தைக்காரி,
வீட்டு
வேலைக்காரி,
நெல்வயல் விவசாயி,
தெருவில் ஊசி விற்கும்,
ஜிப்சி,
கல்விக்கூடம்
செல்லும் மாணவிகள்,
பாடம்
சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியை,
காயத்தை ஆற்றும் மருத்துவப்
பணிப்பெண்.
பாரில் பாதியினம் பெண்ணினம்,
இத்தரை மீது வாழும்
அத்தனைப் பெண்டிரும்
அன்னை வடிவமடா !
பன்முறை,
வன்முறை செய்யும்
பெண் கொலை ஏனடா ?
பித்தா !
பெருமூடா !
No comments:
Post a Comment