.
நூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு
ரோட்டரி சங்க சமுதாய சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ்.குமார் வெளியிட,தொழிலதிபர் இரா.சிவக்குமார் மற்றும் ரோட்டரி சங்கப் பயிற்சியாளர் அ.ஜ.இஷாக் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். நூலை வெளியிட்ட டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “வரலாற்றுப் பெருமையுடைய
வந்தவாசியில் இன்றைக்கு படைப்பிலக்கியத்தில் பல சாதனைகளைப் படைக்கும் எழுத்தாளர்களும்
கவிஞர்களும் இருப்பது பெருமையளிக்கிறது. புத்தகங்கள் எழுதுவதோடு நில்லாமல் தமிழகம் அறிந்த
பேச்சாளர்களாகவும் பயிற்சியாளராகவும் அவர்கள் வளர்ந்து வருகிறார்கள். செல்பேசி, தொலைக்காட்சிகளில்
அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, அன்றாடம் செய்தித்தாட்களைப் படிக்க வேண்டும். நாட்டு நடப்புகளை
அறிந்துகொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இவையே ஒரு மனிதனின்
சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்.கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 40-க்கும் மேற்பட்ட கதை, கட்டுரை, கவிதை நூல்களை எழுதியிருந்தாலும்
இந்த நாள் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத்தக்க மிகச் சிறிய கையடக்க நூலாக வெளிவந்துள்ளது
பாராட்டத்தக்கது. இந்நூல் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் கவரும் வகையில் அழகாக
வெளிவந்துள்ளது. இந்நூலின் கவிதைகளிலுள்ள சமுதாயச் சிந்தனைகளை நாம் படித்து அறிந்துகொள்ள
வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.விழாவில், வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.இரமேஷ், செயலாளர் ஏ.தேவதாஸ், மேனாள் ஒன்றியக்குழு
உறுப்பினர் சு.ரமேஷ், ஆசியன் மெடிக்கல் அகாதெமி இயக்குநர் பீ.ரகமத்துல்லா, ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல்
உரிமையாளர் ந.சுரேஷ் முருகன், வந்தை பிரேம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார். லயன் இரா.சரவணன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.நிறைவாக, நூலகர் க.மோகன் நன்றி கூறினார்.

வந்தவாசி.09. வந்தவாசியை அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென...’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை
இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும்
படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார்.

வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும்
இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப்
புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென...’ 4.8 செ.மீ உயரமும், 4.5 செ.மீ அகலமும் கொண்ட
மிகச் சிறிய ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழா வந்தவாசி நூலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார்.நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். நூலினை மேனாள் மருத்துவ இணை இயக்குநரும்இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப்
புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென...’ 4.8 செ.மீ உயரமும், 4.5 செ.மீ அகலமும் கொண்ட
மிகச் சிறிய ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழா வந்தவாசி நூலகத்தில் நடைபெற்றது.
ரோட்டரி சங்க சமுதாய சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ்.குமார் வெளியிட,தொழிலதிபர் இரா.சிவக்குமார் மற்றும் ரோட்டரி சங்கப் பயிற்சியாளர் அ.ஜ.இஷாக் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். நூலை வெளியிட்ட டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “வரலாற்றுப் பெருமையுடைய
வந்தவாசியில் இன்றைக்கு படைப்பிலக்கியத்தில் பல சாதனைகளைப் படைக்கும் எழுத்தாளர்களும்
கவிஞர்களும் இருப்பது பெருமையளிக்கிறது. புத்தகங்கள் எழுதுவதோடு நில்லாமல் தமிழகம் அறிந்த
பேச்சாளர்களாகவும் பயிற்சியாளராகவும் அவர்கள் வளர்ந்து வருகிறார்கள். செல்பேசி, தொலைக்காட்சிகளில்
அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, அன்றாடம் செய்தித்தாட்களைப் படிக்க வேண்டும். நாட்டு நடப்புகளை
அறிந்துகொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இவையே ஒரு மனிதனின்
சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்.கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 40-க்கும் மேற்பட்ட கதை, கட்டுரை, கவிதை நூல்களை எழுதியிருந்தாலும்
இந்த நாள் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத்தக்க மிகச் சிறிய கையடக்க நூலாக வெளிவந்துள்ளது
பாராட்டத்தக்கது. இந்நூல் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் கவரும் வகையில் அழகாக
வெளிவந்துள்ளது. இந்நூலின் கவிதைகளிலுள்ள சமுதாயச் சிந்தனைகளை நாம் படித்து அறிந்துகொள்ள
வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.விழாவில், வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.இரமேஷ், செயலாளர் ஏ.தேவதாஸ், மேனாள் ஒன்றியக்குழு
உறுப்பினர் சு.ரமேஷ், ஆசியன் மெடிக்கல் அகாதெமி இயக்குநர் பீ.ரகமத்துல்லா, ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல்
உரிமையாளர் ந.சுரேஷ் முருகன், வந்தை பிரேம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார். லயன் இரா.சரவணன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.நிறைவாக, நூலகர் க.மோகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment