ஓயாது உழைத்து நின்ற ஒரு கலைஞன் ஓய்ந்துவிட்டான் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ...

.     

              ஓயாது உழைத்து நின்ற
              ஒரு கலைஞன் ஓய்ந்துவிட்டான்
              வாழ் நாளை பயனாக்கி
              வாழ்ந்து நின்றான் போய்விட்டான்
              தேடி நின்ற செல்வமாய்
               செந் தமிழே வசமாச்சு
               ஓடியாடி உழைத்த அந்த
               உயர் மனிதன் ஓய்ந்துவிட்டான்    !

               கணிதம் தனைப் பார்த்தாலும்
               கன்னித் தமிழ் கைப்பிடித்தான் 
               இனிமையுடன் இன் தமிழை
               இறுகவே அணைத்து நின்றான்
               தனிமை தனில் இருந்தாலும்
               தமிழை அவன் விடவில்லை
               உயிர் பிரியும் தருணம்வரை
               உவந்தேற்றான் தமிழ் மொழியை  ! 

                வயது சென்று விட்டதென
                வதங்கி அவன் போகவில்லை
                இளமை எனும் எண்ணமதை
                இதயத்தில் இருத்தி நின்றான் 
                தள்ளாத வயது வந்தும்
                தமிழை அவன் காதலித்தான்
                காதலித்த தமிழ் இப்போ
                கலங்கிப் போய் அழுகிறது ! 

No comments: