இலங்கைச் செய்திகள்


தொடர்­கி­றது தேடுதல் வேட்டை இது­வரை 160 பேர் கைது

கடற்படையினரின்  சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு

வெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் 

சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபா மீட்பு!

60 இலங்­கை­யர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்!

வவுணதீவு பொலிசார் கொலை :  சஹ்ரானின் இரு சகாக்கள் தடுத்துவைத்து விசாரிப்பு, இதுவரை  7 கைதுப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள் மீட்பு 

சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சிரியாவில் பயிற்சி பெற்றார்- சர்வதேச ஊடகம்

வெளியானது விசேட வர்த்தமானி!

குண்டுத்தாக்குதலில்  உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம்  ரூபா இழப்பீடு

 "குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து  12 வெளிநாட்டவர்களை காணவில்லை"

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்




தொடர்­கி­றது தேடுதல் வேட்டை இது­வரை 160 பேர் கைது

02/05/2019 தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்­போ­தைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெள­லவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொரு­ளாளர் மொஹிதீன் பாவா மொஹம்மட் பைசர் மற்றும் சாய்ந்­த­ம­ருது பகு­தியில் பாது­காப்பு தரப்­பி­ன­ரு­ட­னான  மோதலில் கொல்­லப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மனைவி எனக் கரு­தப்­படும் பெண் ஆகி­யோரை எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­மறி­யலில் வைக்க மட்­டக்­க­ளப்பு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சந்­தேக நபர்­க­ளான நால்­வ­ரையும் கடந்த 28 ஆம் திகதி மாலை  கைது செய்த காத்­தான்­குடி பொலிசார் அவர்­களை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை நடாத்­தினர். அத­னை­ய­டுத்து அவர்கள் நீதி­மன்றில் ஆஜர்ச் செய்­யப்ப்ட்ட போதே இவ்­வாரு விளக்­க­ம­ரி­யலில் வைக்க உத்­தர்வு பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது.
நாட­ளா­விய ரீதியில்,  தடை  செய்­யப்­பட்ட அமைப்­பான தேசிய தெளஹீத் ஜமா அத், மற்றும் ஜமாத்துல் மில்­லதுல் இப்­ரா­ஹீ­மீய்யா சைலானி அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளையும் தேடிய வேட்டை  தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன், சோதனை நட­வ­டிக்­கை­களும் தொடர்­கின்­றன.
பொலிசார், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர், முப்­ப­டை­யினர் இணைந்து இந் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.இந் நிலையில் உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்கள், வெடி­பொ­ருட்கள் மற்றும் ஆயு­தங்­களைத் தேடி நாட­ளா­விய ரீதியில் தொடர்ந்தும் சுற்­றி­வ­ளைப்­புகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
அந்­த­வ­கையில், இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பு­களில் 160 க்கும் மேற்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.
சி.ஐ.டி. தேடிய முக்­கி­யஸ்தர்  குளி­யா­பிட்­டியில் கைது
தொடர் குண்­டுத்­த­க­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும், ஷங்­ரில்லா ஹோட்டல் தற்­கொலை தாரி சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருக்­கத்­துக்கு உரிய நப­ராக கரு­தப்­படும் ஒரு­வரை சி.ஐ.டி. நேற்று கைது செய்­தது. பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­ன­ருடன் இணைந்து சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விஷேட நட­வ­டிக்­கையின் போது குளி­யா­பிட்­டிய, சுபா­ரி­தி­புர பகு­தியில்  இவரை சி.ஐ.டி. கைது செய்­துள்­ளது.  மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான் என அறி­யப்­படும் சந்­தேக நப­ரிடம் சி.ஐ.டி. விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. 
சம்­மாந்­துறை சோதனை
இதே­வேளை உள­வுத்­து­றைக்கு கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமைய சம்­மாந்­துறை – மல்கம் பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போது ஒரு தொகை வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார். 
கைத்­துப்­பாக்­கிகள் இரண்டு, அதற்கு பயன்­ப­டுத்­தப்­படும் தோட்­டாக்கள் 17, , சுமார் 200 ஜெலட்னைட் குச்­சி­களும் 17 ரி – 56 ரக துப்­பாக்கி ரவை­களும்   டெட்­ட­னேட்­டர்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இதன்­போது இருவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூறினர். அட்­டா­ளைச்­சேனை – பால­முனை கடற்­கரை பகு­தி­யிலும் வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளது
கைக்­குண்டு மீட்பு 
அனு­ரா­த­புரம் – கல்­நேவ, நாமல்­க­முவ பகு­தியில் உள்ள நீர்த்­தாங்­கி­யி­லி­ருந்து கைக்­குண்டு ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. நீர்த்­தாங்­கியில் கைக்­குண்டு காணப்­ப­டு­வ­தாக தாங்­கியின் உரி­மை­யா­ளரால் பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகு­திக்கு வரு­கை­தந்த மஹவ கடற்­படை பயிற்சிக் கல்­லூ­ரியின் குண்டு செய­லி­ழக்கச் செய்யும் பிரி­வினர் குண்டை செய­லி­ழக்கச் செய்­துள்­ளனர்.
குரு­ணாகல் வெல்­லவ சோத­னையும் கைது­களும்
குரு­ணாகல்  வெல்­லவ பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட ஹதி­ர­வெ­லான பகு­தியில் இரா­ணு­வத்­தினர் மற்றும் பொலிஸார், பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் இணைந்து நேற்று  முற்­பகல் தேடுதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளனர். இதன்­போது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்­புடன் தொடர்­புள்­ள­தாக கரு­த­பப்டும் பல சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 
6 வாள்­களும் கோடரி ஒன்றும் கத்தி ஒன்றும் இறு­வட்­டுக்கள், கணினி ஒன்றும் போலி முடிகள் இரண்­டுடன் சந்­தேக நபர்கள் 15 பேர் இவ்­வாறு  கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
சந்­தேக நபர்­க­ளிடம் மேல­திக விசா­ர­ணகைள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகப் குரு­ணாகல்  பிராந்­திய பொலிஸ் அத்­தி­யட்சர் மஹிந்த திஸா­நா­யக்க கூறினார்.
அக்­கு­ரனை சுற்­றி­வ­ளைப்பும் கைது­களும்
அக்­கு­ரணை மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் இலங்கை இரா­ணு­வத்தின் 11 ஆவது படைப்­பி­ரி­வினர் நேற்று விசேட சோத­னை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். பொலிஸ், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் முழு  ஒத்­து­ழைப்­புடன் பிர­தேசம் முழு­வதும் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த சோதனை நட­வ­டிக்­கை­களின் போது, சந்­தே­கத்தின் பேரில் சுமார் 25 பேர் வரை  கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 
இதன்­போது துப்­பாக்­கி­யொன்று, போலி­யாக தயா­ரிக்­கப்­பட்ட ஒரு தொகை வாகன இலக்­கத்­த­க­டுகள், ஒரு தொகை பிறப்­புச்­சான்­றி­தழ்கள் மற்றும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான மோட்டார் சைக்­கி­ளொன்றும் கைப்­பற்­றப்ப்ட்­ட­தாக பாது­க­பபுத் தரப்­பினர் கூறினர்.
இரத்த மாதி­ரி­களை பெற்­றுக்­கொள்ளும்  ஊசி­களும் வீடொன்­றி­லி­ருந்து  கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவை இலங்­கையின் வைத்­தி­யர்கள் பயன்­ப­டுத்­தாத ஊசிகள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எந்த நோக்­கத்­திற்­காக இவை கொண்­டு­வ­ரப்­பட்டு அவ்­வீட்டில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பது தொடர்­பான மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
அத்­துடன், குண்டு தயா­ரிப்­பிற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 150 சேர்கிட் பிரேக்­கர்ஸ்­களும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பாது­காப்புத் தரப்­பினர் கூறினர்.
அக்­கு­ரணை பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலு­வ­ல­கத்­தையும்  பாது­காப்பு பிரி­வினர் சோத­னை­யிட்­டுள்­ளனர். இதன்­போது  இறு­வெட்­டுகள், 4 கம­ராக்கள், ஒரு தொகை துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் உள்­ளிட்ட சில பொருட்­களை பாது­காப்புத் தரப்­பினர் கைப்­பற்­றி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.
கஹட்­ட­கஸ்­தி­கி­லி­யவில் சிக்­கிய தோட்­டாக்கள்
கஹ­ட­கஸ்­தி­லிய பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சியத் தக­வ­லுக்கு அமைய குறித்த பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் வீடொன்­றி­லி­ருந்து துப்­பாக்கி ரவைகள் 80 உட்­பட இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்தும்  சில உப­க­ர­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. குறித்த வீட்டில் வசித்து வந்த முன்னாள் இரா­ணுவ வீரர் ஒரு­வரும் அவ­ரது தந்­தையும் சந்­தே­கத்தின் பேரில் இதன்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
பத்­தே­க­மவில் 30 பேர் சந்­தே­கத்தில் கைது
பத்­தே­கம, இந்­தி­கஸ்­க­டிய பகு­தியில் 30 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பல்­வேறு பகு­தி­க­ளையும் சேர்ந்த சந்­தேக நபர்கள் தமது ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாத நிலையில் பொலி­ஸாரால் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
மஹி­யங்­கனை பள்­ளியில் தீ பரவல்
மஹி­யங்­கனை நகரில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் ஒன்றில்   நேற்று முன் தினம் இரவு தீ பர­வி­யுள்­ளது.பள்­ளி­வா­சலில் வைக்­கப்­பட்­டி­ருந்த புத்­த­கங்கள் தீயில் கரு­கி­யுள்­ள­தாக பொலிஸார் கூறினர். சம்­பவம் தொடர்பில் 3 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கெப்பிதிகொல்லேவையில் கைதான ஐவர்
உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களின் வீடியோ காட்சிகள்,  கையடக்க்த் தொலைபேசிகள்,  தெளஹீத் ஜமா அத் தலைவர்களின் புகைப்படங்கள்,  வனாத்துவில்லு பயிற்சி முகாமின் புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களுடன்  முஸ்லிம் இளைஞர்கள் ஐவர் கெப்பிதிகொல்லேவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
குறித்த நகரில் இராணுவத்தினர் பொலிசாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் கெப்பிதிகொல்லேவ பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்துள்ளதுடன் வவுனியா, கின்னியா மற்றும் காங்கேசந்துறை அகைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறினர். இவர்களில் ஹொரவ்பொத்தானை வீதியில் இராணுவ வீதிச் சோதனை சாவடியை வீடியோ எடுத்த இருவரும் அடங்குவதாக பொலிசார் கூறினர.  நன்றி வீரகேசரி 





கடற்படையினரின்  சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு

01/05/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். 
அதற்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
அவரிடமிருந்து 16 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக், 160 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 48 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக் , 55 டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சிவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த 28 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் சின்னப்புறம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வோட்டர் ஜெல் ட்ரீயுப் , 5 டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 
இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
தெற்கு கடற்படையினர் கடந்த 29 ஆம் திகதி பானம - பொத்துவில் பகுதி ஹொடவோய பாலத்திற்கருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது 5 டெடனேட்டர்கள் உள்ளிட்ட சில வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்கு கடற்படையினர் வெலிசரை மற்றும் மாபோலை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது , அங்குள்ள தையல் நிலையங்களில் இராணுவத்தின் வனப்பகுதிக்கு பொறுப்பான பிரிவின் அதிகாரிகளின். அணியும் ஆடையை ஒத்த பூரணமாக தைக்கப்பட்ட 140 ஆடைகளும் , 14 முழுமையாக தைத்து முடிக்கப்படாத ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டள்ளன.   நன்றி வீரகேசரி 









வெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் 

01/05/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெயர் பட்டியல்  ;-
01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்
02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்
03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்
04.கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்
05.புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு ;- ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்
06. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை ;- அலாவுதீன் அஹமட் முவாத்
07. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு  ;-  மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்
08. தெஹிவளை ;- அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட் 
09. தெமட்டகொடை ;- பாதிமா இன்ஹாம்
நன்றி வீரகேசரி 










சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபா மீட்பு!

01/05/2019 தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள மொஹமட் ஹாசிம் மதனியா (வயது 25 ) என்ற சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 










60 இலங்­கை­யர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்!

01/05/2019 பிரான்­சுக்குச் சொந்­த­மான இந்­தியப் பெருங்­க­டலில் உள்ள ரியூ­னியன் தீவில் அடைக்­கலம் தேடிய 60 இலங்­கை­யர்கள் நேற்­று­முன்­தினம் சிறப்பு விமானம் மூலம், கொழும்­புக்குத் திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.
120 இலங்­கை­யர்கள் மீன்­பிடிப் படகு  மூலம் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி, ரியூ­னியன் தீவைச் சென்­ற­டைந்­தனர்.
இவர்கள், 4000 கி.மீ பய­ணத்­துக்கு, 2350 தொடக்கம், 5580 வரை­யான யூரோக்­களை ஒவ்­வொ­ரு­வரும் செலுத்­தி­யி­ருந்­தனர்.
மீன்­பிடிப் படகின் மாலு­மி­க­ளான, இந்­தோ­னே­சி­யர்கள் மூவரும், சட்­ட­வி­ரோத குடி­யேற்­றத்­துக்கு உத­வி­ய­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
இந்நிலை­யி­லேயே, 60 இலங்­கை­யர்கள் நேற்­று­முன்­தினம் விமானம் மூலம் இலங்­கைக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.
2018 மார்ச் தொடக்கம், 273 இலங்­கை­யர்கள் ரியூ­னியன் தீவில் அடைக்­கலம் கோரி­யி­ருந்­தனர்.  அவர்­களில் 130 பேர் இன்­னமும் அங்கு தங்­கி­யுள்­ளனர்.
அவர்கள் புக­லிடக் கோரிக்கை தொடர்­பாக, பிரான்சின் அக­திகள் மற்றும் நாடற்­ற­வர்­களின் பாது­காப்­புக்­கான பணியகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஏனையவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 











வவுணதீவு பொலிசார் கொலை :  சஹ்ரானின் இரு சகாக்கள் தடுத்துவைத்து விசாரிப்பு, இதுவரை  7 கைதுப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள் மீட்பு 

01/05/2019 மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசாரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்களான காத்தான்குடியைச் சேர்ந்த இருவரில் ஒருவர் கடந்த 27 ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் மற்றுமொரு சகாவான சாரதியிடமிருந்து 7 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நள்ளிரவு  மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகில் கடமையில் இருந்த பொலிசார் இருவரை இனம் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த இரு கைதுப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவரை கைதுசெய்ததுடன் அவர்களை தடுத்துவைத்துள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோருடம் சி.ஐ.டி.யினர் கடந்த 6 மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து இத்தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 26 ஆம் திகதி விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் மட்டக்களக்கு காத்தான்குடியில் வைத்து  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின்  சஹ்ரானின்  சாரதியான 54 வயதுடைய  முகமது சரீப் ஆதம்லெப்பையை கைதுசெய்து மேற்கொண்ட விசாரனையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முதல் தாக்குதல்  வவுணதீவில் இரு பொலிசார் மீதான தாக்குதல் என தெரியவந்தது.
இத் தாக்குதலில் தொடர்புடைய  புதிய காத்தான்குடி 2 ஆம் பிரிவு மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் மனாப் ஷார்குஸ், புதிய காத்தான்குடி எம்.எம்.ஜே. வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய  கம்சா முகைதீன் முகமது இம்ரான் ஆகிய இருவரையும் 27 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்தனர்.
இவ் பொலிசார் மீது தாக்குதலை நடத்த இரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் பொலிசாரை கைதுப்பாக்கியல் சுட்டு கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவற்றில் ஒன்றை நிந்தவூர் பிரதேசத்திலிருந்தும் மற்றைய கைதுப்பாக்கியை  புத்தளம் பிரதேசத்திலிருந்தும் கைது செய்யப்பட்ட  சஹ்ரானின் சாரதியின் தகவலுக்கமைய மீட்கப்பட்டதுடன் புத்தளத்தில் பொலிசாரின் கைதுப்பாக்கியுடன் 5 பிஸ்டல்களை சி.ஐ.டி யினர் மீட்டுள்ளதாகவும் பொலிசாரை கொலை செய்ய பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளை மட்டு. தேவாலய குண்டு வெடிப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் டதொடர்புடைய ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு தப்பி ஓடியுள்ளதாகவும் அந்த நாட்டுக்கு குறித்த நபர் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்  பொலிஸார் தெரிவித்தனர்.  நன்றி வீரகேசரி 










சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.

30/04/2019 உயிர்த்த ஞாயிறன்று  தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து  தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனால் பல முக்கிய கைதுகள் சாத்தியப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த ஒழுங்கமைக்கப்பட்ட  பயங்கரவாத குழுவை பலவீனப்படுத்தி விட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர சுட்டிக்காட்டினார். 
பயங்கரவாதிகளின் அனைத்து தொடர்புகளையும் நாம் தற்போது விசாரணைகளில்  முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளோம்.  அவர்களை முழுமையாக நாம் பலவீனப்படுத்திவிட்டோம். சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் மிக வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.
யாரும் வீணாக வதந்திகளை நம்பி அஞ்ச தேவை இல்லை. நாம் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படையினருடன் இணைந்து  சோதனை நடவடிக்கைகளை தொடர்வோம்.  நாட்டில் பல பகுதிகளில் பல முக்கிய கைதுகள் சோதனைகளின் போது இடம்பெற்றுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் நாடளவைய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட  நடவடிக்கைகளில் பல முக்கிய கைதுகள் இடம்பெற்றன. 
தெஹிவளை கைதுகள்
தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் மில்லதுல் இப்ராஹீமீய்யா அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கம்பளையில் கைது செய்யப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான முக்கிய சந்தேக நபர்களான சாதிக் அப்துல்லாஹ் சாஹித் அப்துல்லாஹ் ஆகிய இருவரையும்  விசாரணைக்குட்படுத்தியதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இம் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை - கவ்டான பகுதியின் ஹில் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.  பொறியியலாளர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகார தரத்தில் சேவையாற்றும் ஒருவரும் சமயல் காரர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
கோட்டே மாநகர சபை உறுப்பினரும் சகோதரரும் கைது
கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்  ஹாஜா மிஹிதீன் அலி உஸ்மான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வெலிக்கடை பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனைகளின் போது கைது இவர்கள் செய்யப்பட்டுள்ளார். 
மூன்று வாள்கள், கத்தி,  இரு தொலைபேசிகளுடன் அவர்கள் நாவல வீதி, பள்ளிவாசலுக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
இவர்கள் தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் மாநகர சபை உறுப்பினரின் வீட்டிலேயே சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிசார் கூறினர்.
கட்டுபொத்த
கட்டுபொத்தை அலஹிட்டியாவ பகுதியில் 25 ஏக்கர் காணியில் அமைந்துள்ள தனி வீடொன்றில் இருந்து 4 வாள்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்காத போதும், சந்தேகத்துக்கு இடமான குறித்த வீடு தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கணகராயன் குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்
வவுனியா - யாழ். வீதியில் கணகராயன் குளம் பகுதியில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் பின்னால் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் அழுத்தக் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டலின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கையில் இளைஞர் கைது
பாதுக்கை பொலிஸ்  பிரிவில்  வாடகை வீடொன்றில் வசித்த 28 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் அவரது வீட்டை சோதனை செய்த போது 6 இராணுவ சீருடைகள் 8 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
அத்துடன் வீட்டிலிருந்த திருகோணமலை பகுதியை பதிவாக கொண்ட லொறியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது. 
சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த ஆசிரியர் கைது
கற்பிட்டி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
அவரிடம் இருந்து மடிக்கனினி இன்றும் நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் மீட்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெலிமடை சுற்றிவளைப்பு
வெலிமடை - சில்மியாபுர பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனைகளின்போது வீடொன்றிலிருந்து 35 மீட்டர் நீளமான  குண்டு வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் நூல் கைப்பற்றப்பட்டுள்ளது. 
அது தொடர்பில் 59 வயதான அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
டெட்டனேட்டர்களுடன்  அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் கைது
பிரபல அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் ஒருவர் 6 டெட்டனேட்டர்களுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வெலிமடையில் சிக்கிய தெளஹீத் உறுப்பினர்
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் வெலிமடை - பொரகஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
ஒரு கோடியே 48 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தொகையுடன் அவர் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார். 
வீட்டை சோதனைச் செய்தபோது வாளி ஒன்றுக்குள்ளும் பெட்டி ஒன்றுக்குள்ளும் இந்த பணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க பொலிசார் அவதானம்ச செலுத்தியுள்ளனர்.
பொலன்னறுவையில் சிக்கிய தேடப்பட்ட லொறி
பொலன்னறுவை - புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் சுங்காவில பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த சந்தேகத்துக்கிடமான லொறியொன்றினை பொலிசார் கைப்பற்றினர். 
 
இ.பி. பி.எக்ஸ். 23991 எனும் இலக்கத்தைக் கொண்ட டிமோ ரக லொறியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இந்த லொறி இரு மாதங்களுக்கு முன்னர் சுங்காவில நபருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் லொறியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களுடன் இந்த லொறி தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ள நிலையில் இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  தம்மிக வீரசிங்கவின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
யாழ். பள்ளிவசலில் மீட்கப்பட்டுள்ள இராணுவ சீருடை 
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில்  உள்ள பள்ளிவாசலில் இருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் ஜகட் ஒன்றும் கொமோண்டோ படையினர் பயன்படுத்தும் ஒரு வகை கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் இரு தோட்டகளும் மீட்கப்பட்டுள்ளன.
கலபிந்துனுவெவ சோதனை :
கலன்பிந்துனுவெவ பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனையில் சிப்புக் குளம் பகுதியில் ஒருவர் 3 மீட்டர் நீளமான வாளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
வாரியபொலவில் சிக்கிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
வாரியபொல - பண்டார கொஸ்வத்த பகுதியில்  பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நல்வர் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என பொலிசார் கூறினர்.  
150 இற்கும் மேற்பட்ட பொலிஸ், இராணுவத்தினர்  வீடுகள் பள்ளிவாசல்களை இதன்போது சோதனை செய்துள்ளனர். இதன்போது அங்கிருந்து  கடும்போக்கு கருத்துக்கள் அடங்கிய இருவெட்டுக்கள்,  கையேடுகள், மடிக்கணினி, வாள் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலில் தற்கொலை தரைகள் பயன்படுத்திய வேன் கெக்கிராவையில் சிக்கியது
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அங்கு பாதுகாப்பு தரப்பினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் குண்டுகளை வெடிக்க வைத்து தர்கொலை தககுதல் நடத்தினர். 
இவ்வாரு அங்கு பதுங்கியிருந்ததாக கருதப்படும்,  உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரர்களான ரில்வான், சைனி உள்ளிட்டவர்கள் அவ்வீட்டுக்கு செல்ல பயன்படுத்திய வேன் பாதுகாப்பு தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வேனில் பயங்கரவாதிகள் அவ்வீட்டுக்கு வெடிபொருட்களுடன் வந்ததாக பொலிசார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வேனை கெக்கிராவை - மருதன்கடவல இஹல புளியன்குளம் பகுதியில் வைத்து கைப்பற்றினர். 250 - 5680 எனும் குறித்த வேனின் சாரதியாக கடமையாற்றிய அபுசாலி நசார் என்பவரையும் இதன்போது கெக்கிராவை பொலிசார் கைதுசெய்தனர்.
கல்முனை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  அந்த தகவல் கெக்கிராவ பொலிஸ் பொறுப்பதிகரைக்கு கொடுக்கப்பட்டு அதனூடாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
கெக்கிராவை பகுதியில் உள்ள மெளலவி ஒருவர் தனக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமையவே அவர்களை சாய்ந்தமருதுக்கு அழைத்து சென்றதாக சாரதி பொலிசாரிடம் கூறியுள்ள நிலையில் குறித்த மெளலவியைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சஹ்ரானின் நெருங்கிய சக கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மிக நெருங்கிய சக ஒருவர் கல்முனை - மருதமுனை அஷ்ரப் வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என கருதப்படும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து சந்தேகத்துக்கிடமான 3 புத்தகங்கள்,  சிம் அட்டை, தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். ஆதரவாளர் கைது
அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளராக செயற்பட்டதாக நம்பப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். தலைவர்கள், தொடர் குண்டுவெடிப்பு காணொளிகள் என்பவற்றை பலருக்கு தொலைபேசியில் பதிவேற்றிக் கொடுத்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
வவுனியா, மன்னார் சுற்றிவளைப்புக்கள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தககுதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடக்கில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், வடக்கில் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி வவுனிய மாவட்டத்தில் இராணுவம் முன்னெடுத்த சோதனைகளில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மன்னாரில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதான சஹ்ரானின் ஊடக செயலர்
உயிர்த்த ஞாயிறு  தற்கொலை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்ட ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  மதவாச்சி, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் மொஹம்மட் என்பவரையே இவ்வாறு கைதுசெய்துள்ள மதவாச்சி பொலிசார், அவரை அனுராதபுரம் நீதிவான்  ஜானக பிரசன்ன சமரசிங்க முன் ஆஜர்செய்து 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரின் மனைவி 7 ஆவது பிரசவத்துக்காக காத்திருந்தபோது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டாளராக இருந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.  
மின்சார தொழில் நுட்ப உத்தியோகத்தரான குறித்த சந்தேக நபர்,  மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்டுள்ளமை  ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமேல், வட மத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, அனுராதபுரம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் செனரத் பிரதாப் சந்துன்கஹவல,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் திலின ஹேவா பத்திரன அகியோரின் மேற்பார்வை ஆலோசனையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கிழக்கு ஆளுநர் அலுவலக சேவையாளர்கள் கைது
இதைடையே காத்தான்குடி - ரெலிகொம் வீதியில் விஷேட சுற்றிவளைப்பு இடம்பெற்றது. இராணுவத்தினருடன் இணைந்து  முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது,  அப் பகுதியில் இருந்த அரசியல் அலுவலகம் ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 48 கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அங்கிருந்த கிழக்கு ஆளுநர் அலுவலகத்தின் கீழ் சேவையாற்றிய என்.எஹ்.எம். கரீம், எம்.ரி. நசார் என அறியப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
அவர்களிடம் கிழக்கு ஆளுநர் அலுவலக அடையாள அட்டையும் இருந்துள்ளது.
சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர் கைது
சாய்ந்தமருது வொலிவேரியன் குடியிருப்பு பகுதியில் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வீட்டை பயங்கரவாதிகளுக்கு  வாடகைக்கு கொடுத்த நபரை அம்பாறை பொலிசார் கைது செய்து 72 மணிநேரம் தடுப்புக் காவலில் தடுத்து விசாரித்து வருகின்றனர்.  
அப்துல் மஜீத் ஆதம் லெப்பை என்பவரையே பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெளஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் மூவரின் கைது
தேசிய தெளஹீத் ஜமாத்தின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் மிரிஹானை விஷேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மிக முக்கிய நபர்களாக கருதி தேடப்பட்டு வந்த கல்கிசை,  இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடமிருந்து 4 மடிக் கணினிகள், 5 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு தெளஹீத் ஜமாத்தினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொட்டாஞ்சேனை – மெசஞ்சர் வீதியில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில், சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியதையடுத்து தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து இருவெட்டுகளும், மடிக்கணினியும், கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சிரியாவில் பயிற்சி பெற்றார்- சர்வதேச ஊடகம்

30/04/2019 இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என  விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
தெகிவளை விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியா சென்றமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளர்என வோல்ஸ்ரீட் ஜேர்னல்  தெரிவித்துள்ளது.
லத்தீவ் 2014 இல் சிரியாவின் ரக்காவிற்கு சென்றார் அவ்வேளை ரக்கா ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கியது  வெளிநாட்டு தீவிரவாதிகள் பலர் அங்கு சென்றனர் என விசாரணையுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் அங்கு ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியாவின் நெய்ல்பிரகாஸ் மற்றும் ஜிகாதி ஜோன் என அழைக்கப்பட்ட பிரிட்டனின் முகமட் எம்வாஜியுடன் தன்னை சேர்த்துக்கொண்டார்என விசாரணையுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்..
எம்வாஜியே அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ்பொலி மற்றும் ஸ்டீபன் சொட்லொவ் கொல்லப்படுவதற்கு காரணமானவர் இவர் 2015 இல் அமெரிக்காவி;ன் ஆள்இல்லாத விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
லத்தீவ் பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவில் வானூர்தி பொறியலை பயின்றார்.அதேவேளை இவர் மூன்று அல்லது ஆறு மாதங்கள் சிரியாவில் பயிற்சி பெற்றுள்ளார் என அந்த நபர் தெரிவித்தார்.
அதன் பின்னர் மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அவர் இலங்கைக்கு அனுப்பபட்டார்எனவும் விசாரணைகளில் தொடர்புபட்ட அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துருக்கி சிரியா ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்டமை குறித்து மூன்று குண்டுதாரிகள் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு ஐஎஸ் அமைப்பினரை  தொடர்புகொண்டு குண்டுதயாரிப்பது தகவல் தொடர்பாடல்களை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களை பயின்றிருக்கலாம் என விசாரணைகளில் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 












வெளியானது விசேட வர்த்தமானி!

30/04/2019 முகத்தை, அடையாளத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகள் அணிவதை தடைசெய்யும் அறிவிப்பை கொண்ட வர்த்தமானியானது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.
அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியருந்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி  இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 














குண்டுத்தாக்குதலில்  உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம்  ரூபா இழப்பீடு

30/04/2019 உயிர்த்த ஞாயிறு அன்று குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
மிலேச்சத்தனமான இத் தாக்குதல்களில் காயமடைந்த ஒவ்வொருவரும் 5 இலட்சம் ரூபா தொகையை இழப்பீடாக பெறுவார்கள். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சின் பொறுப்பில் இயங்கும் அலுவலகம் ஒன்றின் மூலம் இழப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதேவேளை குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த சொத்துக்களின் சேத விபரங்களை மதிப்பிட்டு, 5 இலட்சம் ரூபா உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த தேவாலயங்களைப் புனரமைப்பதற்கான செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









 "குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து  12 வெளிநாட்டவர்களை காணவில்லை"

29/04/2019 உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  
இவ்வாரு காணாமல் போயுள்ளவர்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படாத சடலங்கள் இடையே  சடலமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
இதுவரை குண்டுவெடிப்பில் உயிரிழந்த 42  வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 
பங்களாதேஷ் பிரஜை ஒருவர்,  இரு சீனர்கள், 11 இந்தியர்கள், 3 டென்மார்க் பிரஜைகள்,  ஜப்பான் பிரஜை ஒருவர்,  நெதர்லாந்து பிரஜை ஒருவர்,  போர்த்துக்கள் பிரஜை ஒருவர்,  சவூதி அரேபியர்கள் இருவர்,  ஸ்பைன் பிரஜைகள் இருவர்,  சுவிசர்லாந்து பிரஜை ஒருவர்,  துருக்கி பிரஜைகள் இருவர்,  பிரிட்டன் பிரஜைகள் ஆறு பேர்,  அமெரிக்க பிரஜை ஒருவர், அமெரிக்க பிரித்தனைய இரட்டை பிரஜா உரிமைக் கொண்ட இருவர்,  சுவிசர்லாந்து மற்றும் நெதர்லாந்து இரட்டை பிரஜா உரிமைக் கொண்ட ஒருவர், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டை பிரஜை உரிமைக் கொண்ட இருவர் என 42 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  
இதேவேளை தொடர் குன்டுத்தாக்குதலால் காயமடைந்த மேலும் 5 வெளிநாட்டவர்கள் கொழும்பு தெற்கு போதன வைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்றுவருவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 











யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்

04/05/2019 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயரங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந் நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர்,செயலாளரையும் இன்று இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முற்பட்டனர்.   நன்றி வீரகேசரி 


No comments: