குரல் கொடுப்போம் வாருங்கள் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


            வெடி குண்டு வென்று 
            வெறியினை ஊட்டி நிற்பார்  
            பறி போகும் உயிர்பற்றி 
image1.JPG            பார்த்து விட மறுக்கின்றார் 
            நெறி முறைகள் பற்றியவர்
            நெஞ்ச மதில் கொள்ளாமல்
            பொறி புலனை எல்லாமே
            அழியும் வழி ஆக்குகிறார்  !

            அறம் அவர்கள் சிந்தையிலே
            அமர்ந்து விட மறுக்கிறது 
            அழி என்னும் தத்துவமே
            ஆணி வேராய் அமர்கிறது 
            அரக்கர் எலாம் இருந்திருந்தார்
             என்று கதை படித்திருப்போம்
             அரக்கரை நாம் காண்பதற்கு
             அடையாளம் இவர் அன்றோ ! 


              மதம் என்னும் பெயராலே
              மனிதம் தன்னை அழிக்கின்றார்
              புனிதம் உடை  பாதையினை 
              புறந் தள்ளி நிற்கின்றார் 
              சாந்தி சமாதானம் அதை
              சற்றும் அவர் பாராமல்
              சங்காரம் எனும் வழியை
              தமது வழி ஆக்கிவிட்டார்  !

              வீரதீரம் என நினைக்கும்
              வெறிச் செயலை ஒழிப்பதற்கு
              நாடு எல்லாம் ஒன்றிணைந்து
              நல்ல வழி காணவேண்டும் 
              கேடு கெட்ட  குணமதனை 
              நாடு விட்டு ஒழிப்பதற்கு
              கூடி நின்று யாவருமே 
              குரல் கொடுப்போம் வாருங்கள் ! 
       





              



              









No comments: