தமிழ் சினிமா - ஜடா திரைவிமர்சனம்

பரியேறும் பெருமாள், பிகில் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் கதிர் நடித்துள்ள படம் ஜடா. இது கால்பந்து தொடர்பான படம் என ட்ரைலர் பார்த்தே தெரிந்திருக்கும். ஆனால் இது வழக்கமான கால்பந்து பற்றிய படம் அல்ல. சென்னை உள்ளிட்ட இடங்களில் விதிகள் சரிவர பின்பற்றப்படாமல் விளையாடப்படும் 7s விளையாட்டு பற்றியது தான். படம் எப்படி இருக்கு வாங்க பார்ப்போம்..
கதை:
தேசிய அணியில் விளையாட வேண்டும் என்கிற முனைப்பில் சிறிய வயது முதல் கால்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர் கதிர் மற்றும் அவரது நண்பர்கள்.
அந்த சமயத்தில் 10 வருடங்கள் கழித்து 7s போட்டி நடத்துகின்றனர் வில்லன் குணா கேங். அதில் நான் விளையாடியே தீருவேன் என முடிவெடுக்கிறார் கதிர். ஏன் என்றால் 10 வருடங்கள் முன்பு நடந்த போட்டியில் கதிருக்கு கால்பந்து பயிற்சி அளித்த கிஷோர் உயிரையே விட்டுவிடுகிறார். அதற்கு பழிவாங்க தற்போது அந்த போட்டியில் கலந்துகொள்ள போவதாக கூறுகிறார் கதிர்.
அந்த போட்டியில் அவர் அணி ஜெயித்ததா?, அதில் வரும் சிக்கல்களை எப்படி சமாளித்தார் என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
பரியேறும் பெருமாளுக்கு பிறகு கதிர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படி ஒரு கதையை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்று தான் தெரியவில்லை.
படம் துவங்கி 5 நிமிடத்திற்கு கால்பந்து எப்படி வந்தது என பெரிய வரலாறை அனிமேஷனில் காட்டிவிட்டு அதன்பிறகு நேராக வடசென்னையில் கால்பந்து விளையாடும் கதிர் அணியை காட்டுகிறார்கள். அதன் பிறகு 5 நிமிடத்திற்கு மட்டும் ஒரு லவ் ட்ராக் ஓடுகிறது.
அதன் பிறகு பெரிய பில்டப் கொடுத்து 7s கால்பந்து போட்டி பற்றி காட்டுகிறார்கள். கை உடைந்துவிடும், கால் உடைந்துவிடும் என பில்டப் மட்டும் கொடுக்கிறார்கள். ஆனால் போட்டியில் காட்டும்போது violence ஒன்றுமே இல்லையே?
அதன்பிறகு சம்பந்தமே இல்லாமல் ஒரு பேய் ஹாரர் ட்ராக் வருகிறது. ஆனால் அதிலும் ஹாரர் இல்லை. வெறும் சத்தத்தை மட்டும் காட்டி பயமுறுத்த முடியும் என நினைத்துவிட்டாரோ இயக்குனர்.
கதிர் நடிப்பில் ஜொலிக்க ஒன்றும் பெரிய வாய்ப்பு இல்லை, ஹீரோயின் எதற்கென்றே தெரியாத அளவுக்கு ஒரு ரோல். வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே ரொமான்ஸ் காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார். யோகி பாபு காமெடி பல இடங்களில் சிரிப்பே வராத ரகம்.
பாசிட்டிவ் & நெகடிவ்:
- திரைக்கதையில் சொதப்பல்
- அழுத்தம் இல்லாத கதாப்பாத்திரங்கள்.
- சுத்தமாக ஒர்க் அவுட் ஆகாத ஹாரர் பகுதி.
மொத்தத்தில் இப்படி ஒரு amateur படத்தில் நடிக்க கதிர் கொஞ்சம் யோசித்திருக்கலாம். ஹாரர் அல்லது ஸ்போர்ட்ஸ் எதாவது ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் படம் பார்க்கும்படியாகவாவது இருந்திருக்கும். இரண்டையும் கலந்து சொதப்பிவிட்டனர்.
 நன்றி CineUlagam

No comments: