15/12/2019  நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோர் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது.
நியூஸிலாந்தில் சுற்றுலாத் தளமான வைட் தீவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின்போது தீவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 9 பேரும், நியூஸிலாந்தைச் சேர்ந்த 5 பேரும், ஜேர்மனியைச் சேர்ந்த 4 பேரும், சீனாவைச் சேர்ந்த இருவரும், பிரிட்டனைச் சேர்ந்த இருவரும், மலேசியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்கலாக மொத்தம் வைட் தீவில் சுமார் 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக ஏற்கனவே 15 பேர் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். 
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு பேர் காணமால்போயுள்ள நிலயைில் அவர்களை தேடும் நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வைட் தீவிலிருந்து ஆறு பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.