கழல் தொழுதல் முறையல்லவா ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா          உண வூட்டும் கையதனை
                  
உதறி நிற்கும் உள்ளங்களே
           
மன முடைந்து நிற்கின்ற
                 
நிலை யுமக்குத் தெரியலையா
          
தின மும்மை கண்விளித்து
                  
கண நேரம் பிரியாமல்
          
பிணி யனைத்தும் தான்சுமந்த
                  
சுமை தாங்கி நினைவிலையா  !

           
அணி மணிகள் கண்டாலோ
                
துணி வகைகள் பார்த்தாலோ
           
வகை வகையாய் வாங்கிவந்து
                  
வடி வாக்கும் மனமல்லவா
           
இரவு பகல் தெரியாது
                  
எதையும் தனக் காக்காது
            
நில வுலகில் உமைமட்டும்
                  
நினைத்த மனம் கலங்கலாமா  !

            
கண் இருந்து நீர்வடிந்தால்
                  
புண் ணாகிப் போம்மனது
            
தண் நீரும் பருகாமல்
                   
தான் உருகும் மனதங்கே 
             மண் மீது வந்தசெல்வம்
                      என் றெண்ணி வாழுமந்த 
              கண் கண்ட தெய்வமதின்
                       கழல் தொழுதல் முறையல்லவா ! 
                       
-->
              

No comments: