அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - அறிமுகம்


தமிழர் வாழ்வோடு இணைந்தே பயணம் செய்வது இசைதமிழர்  பிறப்பு முதல் இறப்பு வரை இசையுடனே பயணித்தான்.ஆதி மனிதன் தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை உண்டு  தோல்களை அங்கும் இங்கும் போட்டு வைத்த பொழுது  அது காய்ந்து அதன் மீது மழை பட்டு எழுந்த ஓசையே தோல் கருவிகளின் துவக்கம் என்று இசை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்பின்பு காய்ந்த எலும்புகளை ஊதும் பொழுது எழுந்த இசையே காற்று கருவிகளின் துவக்கம் என்றும் சொல்கிறார்கள்பின்பு நரம்பிசை கருவிகளும் செய்தான்.காற்றுக்கருவிகளின் முன்னேற்றமாக துளையிட்ட ஊதுக்கருவிகளை  கண்டுபிடித்தான்.நாகரீகம் அடைந்த மனிதன் கஞ்சக்கருவிகளை உலோகத்தில் செய்தான்.


பழந்தமிழர்கள் எண்ணற்ற பல இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.500க்கும் மேற்பட்ட தமிழர் இசைக்கருவிகள் இருந்துள்ளன.சிலப்பதிகாரமும் திருமுறை திவ்யப்ரபந்தங்களும் கந்தபுராணம் மற்ற தொல் தமிழர் நூல்கள் பலவும் பலவாறான இசைக்கருவிகளின் பெயர்களை நமக்கு காட்டுகின்றனஇன்றைய காலகட்டத்தில் ஒரு 50 கருவிகளை தான் நம்மால் இனம் காண  இயலுகிறது.அதிலும் நாதஸ்வரம் தவில் பறை தவிர பல கருவிகளும் அழிவின் விளிம்பில் இருப்பவைகுறிப்பாக பழங்குடி மக்களின் இசை வடிவங்கள் தொலைக்காட்சி மோகத்தாலும்  மற்ற காரணிகளாலும் முற்றாக அழிந்து வருகிறது.


சிறு வயதில் நான் அறிந்த இசைக்கருவிகள் தவில்,நாதஸ்வரம்,பறை,தப்பு,சங்கு,சேமக்கலம்,வயலின்,மிருதங்கம்,வீணை,குழல்,பம்பை,உடுக்கை என்பன.எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் யானை வாகன ஆறாந் திருவிழாவில் கொம்பு ஊதுவார்கள்.முதன் முதலில் புதுச்சேரி மாசி மகத் திருவிழாவில்  பெரும் இரைச்சலும் ஆரவாரத்துடனும் பல புது விதமான இசைக்கருவிகள் சிவன் முன்பு இசைப்பதை கண்டேன்.புதுமையாக இருந்தது.சற்று நேரம் நின்று பார்த்தேன்.ஏனோ பெரிய லயம் ஏற்படவில்லை சென்றுவிட்டேன்.ஆம் அது தான் தற்காலத்தில் பல இடங்களில் பரவலாக இசைக்கப்படும் "சிவ வாத்தியகுழுவினரின் இசை.அவர்கள் என்ன கருவிகள் இசைத்தார்கள் அதன் பெயர் என்ன என்று எதுவும் அப்பொழுது எனக்கு தெரியவில்லை.


அன்மையில்  வென்வேர்த்வில் நூலகத்தில் வெ நீலகண்டன் ”வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்என்ற நூலை கண்டேன்.படித்து பார்த்ததில் தமிழர் இசையின் தொன்மை அதன் பழமை அருமை என அனைத்தையும் அறிந்துக்கொண்டேன்அழிவின் விளிம்பில் இருக்கும் சுமார் 30 இசைக்கருவிகளை இந்த நூல் நமக்கு காட்டுகிறதுநான் சிறு வயதில் சிவ வாத்திய இசையில் பார்த்த பல கருவிகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.


தான் பயன்படுத்திய இசைக்கருவிகளை தமிழன் கடவுளுக்கு அர்ப்பணித்தான்தமிழரின் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இசைக்கருவிகள் முக்கிய இடம் பிடித்தனநிறுவன சமய கோவில்களிலும் தமிழனின் இசை ஒலித்தது.ஆனால் அது நெடுநாள் நிலைக்கவில்லைதமிழன் சாதிவாரியாக பிரிந்த நேரத்தில் தமிழர்களின் இசைக்கருவிகளும்  சாதிய அடையாளம் பெற்றன.மனிதன் போலவே இசையும் தீட்டானதுநிறுவன சமய கோவில்களில் இருந்து பறை தப்பு போன்ற தமிழர் கருவிகள் வெளியேற்றப்பட்டனபறையும் அதை இசைத்தவனும் தீட்டானான்நந்தனார் சேமித்த மாட்டுத்தோலும் கோரோசனமும் ஆலயத்தில் நுழைந்தனஆனால் அவரும் அவர் மக்களும் நுழைய முடியவில்லை.தமிழனின் இசை திருடுபோய் விட்டது என்பார் இசை அறிஞர் மம்மது அவர்கள்.


வாழையடி வாழையாக புழங்கி வந்த இசைக்கருவிகள் இன்று அருகி பல அழிந்தும் பல அழிவின் விளிம்பிலும் இருக்கின்றனதற்காலத்தில் தமிழனின் இசைக்கருவிகள் நாட்டார் தெய்வ வழிப்பாட்டில் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கிறது.அங்கேயும் போதுமான சன்மானம் மரியாதை இல்லாத காரணத்தால் பலர் வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள்நிறுவன சமய கோவில்களில் புழங்கி வந்த கருவிகள் அறநிலையத்துறை மற்றும் ஆதினங்களின் பெரும் அலட்சிய போக்கால் முற்றாக அழிந்து விட்டதுகலைஞர்களை நியமிக்காது விட்டதும் இருந்தவர்களை சரியாக நடத்தாததும் இதன் முக்கிய காரணம்ஆகமவிதி ஆகமவிதி என்பவர்கள் ஆகமங்களில் விதிக்கப்பட்ட அஷ்டாதச வாத்திய சடங்கை(18 வாத்தியங்களை இறைவன் முன்பு இசைப்பதுவசதியாக மறந்து விடுவார்கள்தமிழகத்தில் ஒரு சில கோவிகளில் மட்டும் சில கருவிகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறார்கள்திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் 18 கருவிகள் இசைக்கப்படுகிறதாம்.திருவாரூரில் 18 கருவிகள் இசைக்கப்பட்டதாகவும் இப்பொழுது ஒரு சில தான் தொடர்கிறதாம்மற்றைய கோவில்களில் பெயர் அளவுக்கு 2-3 கருவிகள் பராமரித்து இசைகிறார்கள்வெளிநாட்டு கோவில்களில் நாதஸ்வரம் தவில் தவிர்த்து வேறு எந்த தமிழர் இசைக்கருவிகளுக்கும் ஆதரவு இல்லைதவில்காரரே பல வாத்தியங்களின் ஓசைகளை தவிலிலே எழுப்பி கடவுளை முட்டாளாக்கிவிடுகிறார்.


அன்மைகாலத்தில் பல சிவன் கோவில்களில் “சிவ வாத்திய குழுவினர்” என்பவர்கள் அழிய இருந்த பல தமிழர் இசைக்கருவிகளை மீட்டு ஆலயங்களில் இசைத்து வருகிறார்கள்இந்த அரிய முயற்சிக்கும் பல இடங்களில் சச்சரவுகள் உள்ளன.அதெல்லாம் இங்கே வாசிக்கபடாது என்று அடி தடி நீதிமன்ற வழக்கு வரை சென்ற கதை எல்லாம் தமிழ்நாட்டில் உண்டு.சில சிவன் கோவில் பள்ளியறை பூசைகளில் இந்த பாரம்பரிய இசைக்கருவிகள் சில இசைக்கபடுகிறது.சென்னை கோயம்பேட்டில் “கோசை நகரான்” என்ற அமைப்பினர் பல இசைக்கருவிகளை மீட்டு பாதுகாத்து இசைக்க பயிற்சியும் தருகிறார்கள்.


தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள பல இசைக்கருவிகள் கேரளத்தில் ஓரளவு பிரபலமாக உள்ளது.கேரள சுற்றுலாத்துறை அவர்கள் மாநிலத்தில் உள்ள அணைத்து கலை வடிவங்களையும் இசைக்கருவிகளையும்(செய்முறை உட்படஆவணப்படுத்தியுள்ளதுதமிழகத்தில் சுற்றுலாத்துறை அப்படியெல்லாம் ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டால் பிறகு நமக்கு என்ன குறை?


வெ நீலகண்டன் எழுதியுள்ள நூல் விரிவானதுஅனைவருக்கும் படிக்க நேரம் இல்லாமல் இருக்கும்வரும் வாரங்களில் இந்த நூலில் இடம்பெற்ற் இசைக்கருவிகளின் சில முக்கிய தகவல்களை சுருக்கமாகவும் மேலதிக படங்களுடனும் இயன்ற வேளைகளில் காணொளி காட்சிகள் சேர்த்தும் உங்களோடு பகிர உள்ளேன்.  இத்தொடர் தமிழரின் இசைக்கருவிகளை உங்களுக்கு  அறுமுகப்படுத்தியும் ஏற்கனவே அறிந்தவர்கள் மீண்டும் நினைவு கூறவும் உதவும் என்று நம்புகிறேன்இவைகளை படித்து நமது இசைக்கருவிகளை நமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வோம்மேலும் அடுத்த முறை நாம் இவை புழக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கும்  ஊர்களுக்கும் செல்லும்பொழுது அக்கருவிகளை கண்டு வரவும் உதவும்மேலும் இக்கருவிகளை இசைக்கும் நலிவுற்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தி நம்மால் இயன்ற சன்மானம் அளிக்கலாம்


அத்துடன் நில்லாமல் இந்த இசைக்கருவிகள் உங்கள் சொந்த ஊர்களில் புழக்கதில் இருந்தால் அல்லது அதை பற்றி உங்களிடம் வேறு தகவல் அல்லது தெளிவான படங்கள் அல்லது காணொளி காட்சிகள் இருந்தால் அவசியம் என்னுடன் பகிரவும்.


நன்றி,
சரவண பிரபு 














2 comments:

Anonymous said...

ஐயா வணக்கம் என்ன விலை 9566970391

semmozhiththamizharam said...

அருமையான தேடல் கொண்ட சிறந்த நூலிது