தமிழ் சினிமா - காப்பான் திரை விமர்சனம்

சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில் அவர் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து காப்பானில் களம் இறங்க, அவரும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்த வெற்றி இதில் அமைந்ததா? பார்ப்போம்.   

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு திட்டம் நடக்கின்றது. அதை தொடர்ந்து சூர்யா சில நாசவேலைகளை செய்கிறார்.
என்ன என்று பார்த்தால் அவை அனைத்தும் சூர்யா மோகன்லாலை காப்பாற்ற செய்யும் வேலை, அவரும் ஒரு ரகசிய உளவாளி என தெரிய வருகிறது.
பிறகு பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் சூர்யா சேர, அதை தொடர்ந்து பிரதமரின் உயிருக்கு பலரும் குறி வைக்கின்றனர். அந்த குறியில் இருந்து சூர்யா மோகன்லாலை காப்பாற்றுகிறாரா? அந்த குறி யார் வைக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சூர்யா வழக்கம் போல் ஒன் மேன் ஷோ தான், பிரதமரை காப்பாற்றும் ஆபிசர், துறுதுறுவென படம் முழுவதும் அவருடைய பார்வை போல் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. பைனலி சூர்யா இஸ் பேக்.
மோகன்லால் பிரதமராக நிகழ்கால பிரதமரை கண்முன் நிறுத்துகின்றார். என்ன தான் இந்தியா உணர்வு என்று பேசினாலும் பாகிஸ்தான் மக்களுக்காகவும் அவர் பேசும் காட்சி கைத்தட்டல் அல்லுகிறது.
ஆர்யா எப்போதும் போல் ஜாலி பாய் கதாபாத்திரம் என்றாலும் போமன் இரானியிடம் அவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. சாயிஷா போஷன் தான் ஏதோ பார்வையாளர்கள் திசை திருப்ப திணிக்கப்பட்டது போல் உள்ளது, அது பெரிதும் உதவவும் இல்லை.
வில்லன் நடிகராக வரும் வட இந்திய ஆள் துப்பாக்கி வித்யூ ஜமால் போல் மிரட்டுகின்றார். ஆனால், அதற்காக துப்பாக்கி போலவே பல காட்சிகள் இருப்பது தவிர்க்க முடியவில்லை.
கே வி ஆனந்த் படம் என்றாலே மீடியா, பயோ கெமிஸ்ட்ரி சார்ந்த விஷயங்களை அங்கங்கு நிரப்பியிருப்பார். அந்த வகையில் இதில் சிலிபிரா என்ற பூச்சி இனத்தை காட்டுவது பிரமிக்க வைக்கிறது, அது விவசாய நிலத்தை ஆகிரமிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.
ஆனால் அதே நேரத்தில் விவசாயிகளை காப்பாற்றுவதை விட, தமிழ் சினிமாவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தான் தோன்றுகின்றது, விவசாயி குறித்த வசனங்கள் அனைத்தும் கிளிஷேவ் தான்.
கே.வி.ஆனந்த் படத்தில் டுவிஸ்ட் இருந்துக்கொண்டே தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாமே நேரடியாக தெரிவதால் பெரிய டுவிஸ்ட் இல்லை, சில பல லாஜிக் குறைகள் இருந்தாலும் முடிந்த அளவிற்கு சரி செய்து நல்ல சவாரியாகவே கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால் அமித்ஷா சொன்ன ஒரே மொழி கொள்கையை கே.வி.ஆனந்த் தான் சரியாக கடைப்பிடித்துள்ளார். என்ன அவர் சொன்னது ஹிந்தி, இவர் காட்டியது தமிழ், காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி ஏன் பாகிஸ்தான் எம்பஸி ஆள் கூட தமிழ் தான் பேசுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு லண்டன், காஷ்மீர் என பல பகுதிகளை படத்தில் காட்டி செம்ம கலர்புல்லாக படம் பிடித்துள்ளனர். ஹாரிஸ் பாடல் மட்டுமில்லை பின்னணி இசையிலும் ஏமாற்றிவிட்டார். என்ன தான் ஆச்சு சார்.

க்ளாப்ஸ்

சூர்யா தனி ஆளாக ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். மோகன்லால் பெரிய கதாப்பாத்திரம் இல்லை என்றாலும் டீசண்ட்.
படத்தின் ஸ்டெண்ட் காட்சிகள், குறிப்பாக ட்ரெயின் ஸ்டெண்ட் எடுத்த விதம்.
நம் நாடு என்றில்லாமல் பக்கத்து நாட்டிற்கும் அக்கறையாக பேசுவது போல் அமைந்த வசனங்கள்.

பல்ப்ஸ்

படம் போர் என்று பெரிதாக இல்லை என்றாலும், நீளத்தை குறைத்திருக்கலாம்.
பெரிய திருப்பங்கள் என்று ஏதுமில்லை.
மொத்தத்தில் காப்பான் யாருக்கு எப்படியோ சூர்யா ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பிற்கு ஒரு சிறிய ட்ரீட்.  நன்றி CineUlagam

No comments: