தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் கோத்தாபய ஒரு கொடுங்கனவாக காணப்படுவார்.


டெய்லர் டிப்போர்ட
தமிழில் ரஜீபன்
19/10/2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கான வெற்றியை சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள் உறுதி செய்யும் என ஜிஎல்பீரிஸ் அவ்வளவு நம்பிக்கையுடனும்  உறுதியுடனும் ஏன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறித்து நான் குழப்பத்தில் உள்ளேன்.
சிறுபான்மை சமூகத்தினரிற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களில் நிறைவேற்ற தவறியுள்ளது என்பது உண்மை தான்.சிறுபான்மை சமூகத்தவர்களின் துயரங்களிற்கு இந்த அரசாங்கம் போதியளவிற்கு தீர்வை காணவில்லை.
ஆனால் பதவிக்கு வந்தால் கோத்தாபய அரசாங்கம் எப்படி சிறுபான்மையினத்தவர்களை நியாயமாக நடத்தும் என்பது விளங்காத விடயமாக உள்ளது.
மாறாக மற்றுமொரு ராஜபக்ச அரசாங்கம் தேசம் பெற்றுக்கொண்ட பலவீனமான ஜனநாயகத்தின் பலாபலன்களை அழித்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.

மேலும் சிறுபான்மையினத்தவர்களிற்கு எதிரான நிகழ்ச்சி நிரலை எதிர்பார்க்கலாம்.
மைத்திரிபால சிறிசேனவும் அவரது நிர்வாகத்தவர்களும் பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,ஊழல் இன்னமும் பாரிய பிரச்சினையாக உள்ளது.
ஆனால் நாங்கள் பயணிக்கும் திசை தெரியாத, திறமையற்ற, பலவீன நிர்வாகத்துடன் ஈவிரக்கமற்ற குடும்ப ஆட்சியை அடிப்படையாக கொண்ட பரம்பரை அரசியலில விருப்பம் கொண்டுள்ள ஏதேச்சதிகார ஆட்சியை ஒப்பிடக்கூடாது.
கோத்தாபயவின் தத்தெடுக்கப்பட்டுள்ள ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் அர்த்தமற்ற விடயங்களை தெரிவித்துவருகின்றனர். கோத்தாபயவின் தத்தெடுக்கப்பட்டுள்ள ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் மேலும் மேலும் அர்த்தமற்ற விடயங்களை தெரிவித்து வருகின்றனர்.
கோத்தபாயவின் சாதனைகள் நன்கறியப்பட்டவை என்றபோதிலும் அவர் அரசியலிற்கு புதியவர்.அவர் 2009 இல் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்பார்வை செய்தார்.அதன் பிறகு எழுச்சியடைந்த ஏதேச்சதிகாரத்திற்கு  அவர் உற்சாகமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இதன் காரணமாக தமிழர்களும் முஸ்லீம்களும் அளவுக்கதிகமான விதத்தில் பாதிக்கப்பட்டனர்.
சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமைகளை காலால் போட்டு மிதித்ததன் காரணமாக கோத்தாபய ராஜபக்ச அதிகளவு வாக்குகளை பெறப்போகின்றார்.ஆனால் ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன் காரணமாக தமிழர்களும் முஸ்லீம்களும் நன்மையடைப்போவதில்லை.
ராஜபக்சாக்கள் தீராத இனவாதிகள் - யுத்த குற்றம் முதல் தொடர்ச்சியான இராணுவமயப்படுத்துதல் வெள்ளை வான்கள் என ஜனநாயகவிரோத சான்றுகளை கொண்டவர்கள்.
கோத்தபாயவினால் தத்தெடுக்கப்பட்ட ஜிஎல் பீரிஸ் போன்றவர்கள் நோய்வாய்ப்பட்ட பொய்யர்கள் அல்லது பெரும் ஏமாற்றுக்காரர்கள்.  நன்றி வீரகேசரி 












No comments: