16/10/2019 பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐந்து நாள் அரச பயணமாக சென்றுள்ளார்கள். இதன்போது முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் இருவரும் சென்றுள்ளார்கள்.
முன்னதாக இஸ்லாமாபாத்தில் ஒரு பாடசாலைக்கு சென்ற இளவரசர் தம்பதி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.