சிட்னி இசை விழா கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். வருடா வருடம் டிசம்பர் சென்னை இசைவிழாவை காண செல்பவர்கள் கடந்த 12 வருடங்களாக சிட்னியிலேயே தங்கிய வண்ணம் தேர்ந்த இசை கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்காக திரு திருமதி ஜெயேந்திரன் தம்பதியரும் அவர்களது ஏக புத்திரன் ஸ்ரீ கிஷானும் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. மஹாராணியாரின் பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக 3 நாள் விடுமுறையில் கடந்த 12 வருடங்களாக 3 நாட்களும் தொடர்ந்து கச்சேரியை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நடப்பது போல நாள் பூராவும் இசை நிகழ்ச்சி தொடரும். காலையிலே வளர்ந்து வரும் இளம் கலைஞர் அதை அடுத்து தம்மை உலகிலே பிரபல படுத்திவிட்டு கலைஞர் தொடர்ந்துய் இசை உலகிலே பிரபலங்கள் பல வருட அனுபவமும் சிறந்த உயர்ந்த கலைஞர் என போற்றப்படும் கலைஞர்கள் இறுதி நிகழ்ச்சி இசை உலக மா மேதைகள் என போற்றப்படும் கலைஞர்கள் என நிகழ்ச்சி நடைபெறும்.
இசை ரசிகரின் பசியை போக்குவோர் A.T.B.C வானொலி என்ற தொண்டு நிறுவனம். செவி புலனுக்கு விருந்து கொடுத்தோர்க்கு நாவுக்கு ருசியான பதார்த்தங்களை வழங்கி வரும் தொண்டர் கூட்டம், இதில் பெறப்படும் பணம் தாயகத்தில் மனநலம் குன்றிய சிறாருக்கும், போரால் பெற்றோரை இழந்து வாழும் சிறாருக்கும் அனுப்பப்படும். அவர்கள் வாழ்வு மலர எம்மவர் செய்யும் சேவையே இது.
2. தொடர்ந்து சந்தீப் நாராயணன் கச்சேரி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தாயாரால் சங்கீதம் கற்க ஆரம்பித்தார். அமெரிக்காவிலே சடடத்தரணியாக கல்வி கற்றவர், யாவற்றையும் விடுத்து தமிழகம் வந்து சங்கீத கலைஞனாக வாழும் இவர் சறுக்கலை போட்டிகளிலே பல பரிசுகளை பெற்றார். தற்போது உலகின் பல பாகங்களிலும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
3. மல்லாடி சகோதரர்கள் ஆந்திரத்தின் இசை செல்வங்கள். தம் நாதத்தால் இசையை உணர வைக்கும் ஆத்மாக சங்கீதம் இவர்களது.
4. மாலை நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது டீ ம் கிருஷ்ணாவின் கச்சேரி. செம்மங்குடியாரின் சிஷ்யர். இன்று எந்த சம்பிரதாயத்துக்கு கட்டுப்படாத சங்கீத வித்துவான் டீ டீ க்ரிஷ்ணமாச்சாரி என்ற தொழில் அதிபர் பேரன். தான் பிறந்து வாழ்ந்த சம்பிரதாய பிராமணர் சங்கீதத்தை ஏகாபோக சொத்தாக்கி இருப்பதை இட்டு கொதிப்பவர். தனது சங்கீத ஆய்வு நூலுக்கு பரிசு பெற்றவர். குப்பத்தில், சேரியில் புறம்போக்கு பாடல் என சங்கீதத்தை தாழ்த்தப் பட்டோருக்கு எடுத்து செல்லும் தயாள சிந்தையாளர். இசையில் மயங்கிறோம் எம்மை மறந்து சங்கீதத்தை அள்ளி பருகிக்கிறோம்.
இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு காயத்திரியின் இசையுடன் ஆரம்பமானது.
அடுத்து சிக்கல் குருச்சரன் சம்பிரதாய சங்கீதம். அருமையான தமிழ் உருப்படிகளை பாடும் திறமை. பிராமணர்களால் ஒதுக்கப்பட்ட M M தண்டபாணி தேசிகர் பாடல் தொட்டு புரட்சிக்கு கவிஞர் பாரதிதாசனின் பாடல் வரை பாடி அசத்தினார்.
மைசூர் நாகராஜன் மஞ்சு நாதன் வயலின் வித்துவான்கள் 100 வருடங்கட்கு மேலாக மேற்கத்திய வாத்தியமான வயலின் கர்நாடக சங்கீத கலைஞர் தோள்களில் விளையாடுகிறது. இன்றோ மேற்கத்திய கர்நாடக சங்கீத கலைஞர் வாசிக்கும் திறமை கண்டு அவர்கள் எம் வித்துவான்களை தேடி வந்து கற்று கொள்கின்றார்கள். மேற்கத்திய வயலின்ப மேதை யூடி மெனுஸின் இதை வியந்து கூறியுள்ளார். தற்போது மைசூர் சகோதரர்கள் மேற்கு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமல்லாது கர்நாடக இசை நுணுக்கம் பற்றியும் பேசிவருகிறார்கள். பல்கலை கழகங்கள் தொட்டு பல இசை நிறுவனங்களும் இவர்களை வரவேற்கிறது. திக்கெட்டும் கர்நாடக சங்கீதத்தை மேற்கத்தியருக்கு பரப்பும் இசை மேதைகள், ஆய்வாளர்களாக வளம் வருகிறார்கள்.
இரவு இறுதி நிகழ்ச்சி சஞ்சய் சுப்ரமணியம். கணக்காளராக படிக்கும் காலத்திலேயே விரிவுரை முடிந்து வந்து சங்கீதம் கேட்டேன். வீட்டிலே சங்கீதம் அவர்கள் பேச்சு, மூச்சு, உணவு. சங்கீதம் ஒலிக்காத நேரம் கிடையாது. தந்தை, பேரனார் யாவரும் சங்கீத வித்துவான்களை போஷித்து வந்தனர். நானோ இசைக் கலைஞனாக போகிறேன் என்றது மலைத்தே போனார்கள் என்று 25 வருடங்களுக்கு முன் கூறிய இளைஞன் இன்றோ சங்கீத சாம்பிராச்சியத்தின் மேதை என போற்றப்படுகிறார்.
மூன்றாம் நாள் சாகாகேத ராமன் தனது 12ஆவது வகுப்பு பரீட்சையில் அகில இந்தியாவிலும் முதன்மையாக வந்ததினால் அரச கௌரவ விருந்தினராக அமர்ந்து நாட்டின் சுதந்திர தின விழாவை 2002இல் பார்த்தவன் சாப்ட்வேர் Engineering படித்து உலகின் பிரபலமான நிறுவனத்தில் பதவி வகித்தவர். ஆனால் இசையில் பிரிக்க முடியாத பந்தம் அவனை இன்று உலகலாவ கச்சேரிக்காக அழைப்புகள். யாவரையும் கவர்ந்த சங்கீத விற்பன்னன்.
ரஞ்சனி காயத்திரி சகோதரிகள் சங்கீத பாரம்பரியத்தில் இரு சகோதரிகள். இசைக்கு தனி மவுசு உண்டு. இரு குரல்கள் இணையும் அழகு, இவர்கள் சங்கீதமோ வயதை மிஞ்சிய மேதைத்துவம். விருத்தம் பாடும் பொழுது பலர் கண்களில் நீர் பணிக்கும். இவர்கள் வாய்ப்பாட்டு பாடுபவர் மட்டுமல்ல பிறர் பாடும் கச்சேரிக்கு அணிசெய் கலைஞர்களாக வயலின் வாசிப்பவர்கள். பல நாடுகளுக்கும் சென்று மேற்கத்தியருக்கு கர்நாடக இசை பற்றி விரிவுரை நடாத்தும் திறமைசாலிகள்.
இன்று எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் இசை மூலம் இறையை தரிசிக்க வைப்பவர். இவர் பாணி இவரது தாய் மாமன் மதுரை மணி பாணி எனப்படும். அன்று இசையின் பல கோலங்களையும் தரிசிக்க வைத்தார் மேதை. சென்னையில் நாம் வாழ்ந்த்ய காலத்தில் எங்கெல்லாம் இவர் கச்சேரி நடைபெறுமோ அங்கெல்லாம் சென்று இவர் வழங்கும் சங்கீதத்தை பருகியவர்கள் நானும் என் கணவரும்.
அணிசெய் கலைஞர்களான வயலின் வித்துவான்களும், மிருதங்க கலைஞரும், கஞ்சிரா கலைஞர்களும் இல்லையானால் இசைக்க கச்சேரி சோபிக்காது. இவர்கள் அத்தனை பேரும் தத்தம் காலையிலே விற்பன்னர்கள், மேதைகள். பெரும் திறமை வாய்ந்த இசைக் கலைஞர்களை மெருகுற செய்பவர்கள். வயலின் வித்துவான்களாக சிலர் பக்க வாத்தியம் வாசித்த போதும் தனி கச்சேரி செய்யும் திறமைசாலிகள். கர்நாடக சங்கீதத்துடன் நிற்பவர் அல்ல. பல fusion இசை அமைப்பாளர்களாக இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள். இப்படி படடவர்களே H N பாஸ்கரும் L ருமக கிருஷ்ணனும்.
மிருதங்க மேதை K V பிரசாத் பல தேர்ந்த வித்துவான்கள் தேடி தமக்கு வாசிக்கும்படி கேட்கும் மிருதங்க கலைஞர் இவர். M S சுப்புலக்ஷ்மி அம்மாவின் இசைக்கு 15 வருடங்கள் தொடர்ந்து அழகூட்டியவர், பாலமுரளி கிருஷ்ணா Dr N ருக்மணி போன்றோரால் விரும்பி வாசிக்க கேட்கும் மிருதங்க மேதை K V பிரசாத்.
சாய கிரிதா அரசியல் ஆய்வு பட்டம் பெற்றவர் மிருதங்க கலைஞராக வாழ்வு நடத்தும் இவர் பல தேர்ந்த பிரபல இசைக்கலைஞர் இவரது மிருதங்கத்தை வாசிக்கும்படி கேட்பார்கள். தமது கச்சேரியை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை வைத்தவர் சாய கிரிதா. பாலமுரளி கிருஷ்ணா, O S தியாகராஜன், குழல் மேதை ஷேஷாங், பம்பாய் ஜெயஸ்ரீ என பட்டியல் நீளும்.
தஞ்சாவூர் முருக பூபதி பன்முகம் மாண்டவர். இவர் மிருதங்க மேதை மட்டுமல்ல சிட்னி இசை விழாவின் முதுகெலும்பு போன்றவர். அத்தனை கலைஞரையும் ஒழுங்கு செய்த்து அழைத்து வருபவர் இவரே.
சுந்தர குமார் கஞ்சிரா இசையால் எம்மையெல்லாம் மயங்கினார். மூன்று வயதில் வாத்தியத்தை வாசிக்க விரும்பிய குழந்தை, இன்றும் குழந்தை முகமாறாது சிரித்து ரசித்து வாசித்து பலரை கவர்ந்தவர் இவர் கைகளில் கஞ்சிராவின் வாசிப்பு மேலும் மெருகு பெறுகிறது.
No comments:
Post a Comment