ஈழமென்னும் பெயரைச் சொன்னால்
இதயம் நிறைந்து போகுதே
ஆளுகின்றார் எண்ணம் மாறின்
அனை வர் வாழ்வும் சிறக்குமே
நாளும் மக்கள் வாழ்விலென்றும்
நன் மை விளைய வேண்டியே
வானில் உறையும் தேவன்தன்னை
ஆளுகின்றார் எண்ணம் மாறின்
அனை
நாளும் மக்கள் வாழ்விலென்றும்
நன்
வானில் உறையும் தேவன்தன்னை
வரம் கொடுக்க வேண்டுவோம் !
ஈழம்தன்னில் இயற்கை வளம்
எங்கும் நிறைந்து இருக்குதே
ஆழக்கடல் சூழ்ந்து நின்று
அரணையாய் அமைந்து இருக்குதே
வாழவெண்ணி மக்கள் எல்லாம்
நாளும் பொழுதும் உழைக்கிறார்
மக்கள் ஆட்சி மலரவேண்டி
மனதில் எண்ணி நிற்கிறார் !
செந்தமிழை பேசும் மக்கள்
சிந்தை கலங்கி வாழ்கிறார்
சிங்களத்தைப் போல தமிழும்
சிறந்து விளங்க நினைக்கிறார்
மங்கலமாய் இரண்டு மொழியும்
வாழ்வில் இணைந்து நின்றிடின்
மாறுபட்ட நிலைகள் யாவும்
கூறு பட்டுப் போகுமே !
எவர் என்று பார்ப்பதில்லை
ஆழக் கடல் வளமும்
அனைவருக்கும் உதவி நிற்கும்
இயற்கை அன்னை ஒருகாலும்
இனம் பார்த்து நடப்பதில்லை
இங்குள்ள சில பேரால்
இடர் எழுந்து வருகிறதே !
இந்துமதம் புத்த மதம்
இஸ்லா மொடு கிரிஸ்தவமும்
சொந்தம் எனக் கொண்டுபலர்
ஈழம் அதில் வாழ்கின்றார்
இம் மதத்து தத்துவங்கள்
என்றும் பகை சொன்னதில்லை
ஏன் பகைகள் வருகிறதோ
இறைவன்தான் சொல்ல வேண்டும் !
No comments:
Post a Comment